டந்த ஒரு வாரத்தில் நாட்டின் பல இடங்களில் இந்துத்துவ கும்பல் அரங்கேற்றிய தாக்குதல் சம்பவங்களின் போது, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கம் முதன்மையாக இடம்பெற்றிருந்திருக்கிறது. பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சியினர் பதவி ஏற்கும்போது ”ஜெய் ஸ்ரீராம்” என்ற முழக்கத்தைக் கூவினர் பாஜக எம்பிக்கள்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்துத்துவ வெறியேற்றப்பட்ட ஒரு கும்பல் தாக்கியதில் தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞர் கொல்லப்பட்டார். அவரை ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்ல கட்டாயப்படுத்தி அடிக்கிறது அந்த கும்பல். அதுபோல, கொல்கத்தாவில் இரயிலில் சென்ற முசுலீம் இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போதும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்லும்படி காவிக் கும்பல் அவரைக் கட்டாயப்படுத்தியிருக்கிறது.

இப்படி ‘ஜெய் ஸ்ரீராமின்’ பெயரால் காவி கும்பல் கையிலெடுத்துள்ள வன்முறையைக் கண்டிக்கும் வகையில் #NoToJaiShriRam என்ற ஹேஷ் டேக் டிவிட்டரில் டிரெண்டானது. இதை டிரெண்டாக்கியவர்கள் தமிழர்கள். தமிழர்களின் எதிர்ப்புக்குரலில், நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து கொண்டனர். அதிலிருந்து சில தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளை இங்கே தொகுத்திருக்கிறோம்.

தமிழ் நடராஜ்:

சான்றிதழின்படி நான் இந்து. ஆனால், நான் “ஜெய் ஸ்ரீராம்” சொல்ல மாட்டேன். இது என்னுடைய வாழ்தலுக்கான லட்சியத்தை கூறவில்லை. இன்று ‘வேண்டாம் ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்கிறேன், ஏனெனில் இது மனிதநேயத்தைக் குறிக்கிறது. வாழ்தலுக்கான நோக்கத்தைக் குறிக்கிறது.

பழுவேட்டரையர்:

கடவுள் ராமனுக்கு வெற்றியை என முழங்கி, மக்களைக் கொல்கிறீர்கள். ராமனுக்கு நீங்கள் சமர்ப்பிக்கும் வெற்றி எத்தகையது? கோழைத்தனமான கிரிமினல்தனத்தின் மூலம் மனித சதையை சமர்ப்பிப்பதால் மகிழ்ச்சியடைவாரெனில் என்ன வகையான  கடவுள் அவர் ?

வைசாலி:

இந்தியாவில் உள்ள எவருக்கும், ஏன் மோடிக்குமே கூட முசுலீம்களாகிய உங்களை  ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்ல வற்புறுத்த உரிமை கிடையாது.

மணிமாறன் ராஜசோழன்:

ராமன் யார்? ராமாயண கதையின்படி தனது மனைவியை நம்பாத ஒருவர். ராமன் ஒரு கதாபாத்திரம் மட்டுமே. இவர் உண்மையான கடவுள் இல்லை. இந்த முட்டாள்கள் ராமனை வழிபட விரும்புகிறார்கள். நான் ஏன் வழிபட வேண்டும்?

விவேக் கோபாலகிருஷ்ணன்:

காவி இந்துத்துவக் கும்பல் சக முசுலீம் சகோதரர்களை மதத்தின் பேரால் கொல்வதற்கு எதிராக தமிழர்கள் நாங்கள் நிற்கிறோம்.

குரு தமிழ் :

ராவணனைப் போல இதுவும் கற்பனைக் கதாபாத்திரம்தான். ராமன் தன்னுடைய மனைவியை சந்தேகித்து நெருப்பில் இறங்கச் சொன்னார். அவரை ஒரு மனிதராகக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியிருக்கும்போது ஏன் அவரைக் கடவுளாக வழிபடுகிறார்கள்?

ஆஸ்டின் பெஞ்சமின் :

மதம் மனிதனை, விலங்காக மாற்றுகிறது.

இக்‌ஷ்தீப் சிங்:

இந்திய அரசியலமைப்பு நமது மதத்தைப் பின்பற்றும் உரிமையை வழங்கியுள்ளது. ஒருவருடைய மத நம்பிக்கையை கட்டாயமாக திணிக்கும் சக்தி எவருக்கும் இங்கே இல்லை.

சித்தார்த்தா சரண்:

எங்களுடைய கடவுளர்கள் அய்யனார், கருப்பன், சுடலைமாடன், மதுரைவீரன் போன்றோர். அவர்கள்தான் எங்களைக் காப்பவர்கள், வீரர்கள். நாங்கள் எங்களுடைய தாய்மொழியில் அவர்களை துதிப்போம். ராமன் யார்? தனது மனைவியை சந்தேகித்துக் கொன்றவன். நாங்கள் ஏன் அந்த சமஸ்கிருத பயங்கரவாதியைத் துதிக்க வேண்டும்?

அமெரிக்காவாசி:

நாட்டின் சிறுபான்மையினரைக் கொன்று கொண்டிருக்கும் “ஜெய் ஸ்ரீராம்” சொல்வதை நிறுத்துவோம். இந்தியா எப்போதும் மதச்சார்பற்ற நாடுதான்.

குரு:

உங்கள் அருகே யாரேனும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழங்கிக் கொண்டிருந்தால், நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள். அவன்/அவள் ஒரு பயங்கரவாதியாக இருக்கலாம்.

அனுஷ்கா அகர்வால்:

ஒரு ரயில் நிலையத்தில் முசுலீம்கள் தொழுதுகொண்டிருப்பதைப் பார்த்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என சிலர் கத்தும் வீடியோவை இப்போது பார்த்தேன். தயவு செய்து மனிதத்தன்மையற்ற இந்தச் செயலை நிறுத்துங்கள்.

இதனால் உங்களுக்குக் கிடைக்கப்போவது என்ன? அனைத்து இந்தியர்களும் சகோதர, சகோதரிகளே.. தயவுசெய்து நிறுத்துங்கள்.

சுபம் ராஜ் பிராமி:

இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நம்முடைய நாட்டில் இத்தகைய வன்முறைகளுக்கு இடமில்லை. இது மதச்சார்ப்பற்ற நாட்டின் மீது விழுந்த அடி. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சக நாடாளுமன்றவாதிகளை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழங்க வேண்டாம் என்றும் வலியுறுத்துங்கள்.

முகமது ஆரிஃப்:

கும்பல் வன்முறையாளர்களால் ஐம்பதுக்கும் அதிகமான முசுலீம்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அரசு அதுபற்றி கவலைப்படவில்லை. சட்டமும் இல்லை, நடவடிக்கையும் இல்லை. இதுதான் நாம் விரும்பும் இந்தியாவா? தயவுசெய்து உங்களுடைய குரல்களை உயர்த்துங்கள்.

அப்துல் அஜீஸ்:

மனிதநேயம் தேவையாக உள்ளது.

கணேஷ் பாண்டியன்:

உங்களுடைய அமைதி அவர்களை கொல்லக்கூடும்.

முகமது உமர்:

நீங்கள் சிறு குற்றச்சாட்டுக்கு உள்ளான முசுலீம் எனில் கொல்லப்படுவீர்கள். நீங்கள் இந்து, பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் எனில் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்படுவீர்கள்.


தொகுப்பு : அனிதா

14 மறுமொழிகள்

 1. மிசோரம் மாநிலத்தில் முதல்வர் பதவி ஏற்கும் போது பைபிள் வாசிக்கப்பட்டதே, அங்கே யேசுவிற்கும் மிசோராமிற்கும் என்ன சம்பந்தம்… அப்போது உங்களின் மதசார்பின்மை எங்கே சென்றது ? எங்க சிவன், பெருமாள், கருப்பனும் சுடலைமாடனும்தான் உங்கள் இயேசு கிடையாது.

  • அட என்னைய்யா ,,, உங்கூட பெரிய ரோதனையா போச்சு.. தலைப்ப மட்டும்தான் பாப்பியா ?

   உள்ள கண்டெண்ட்ட படியா .. யாரோ ரெண்டு பேர அடிச்சுக் கொண்ணானுங்களாமே.. ஜெய் ஸ்ரீராம்னு சொல்லச் சொல்லி…

   அவ்ளோ வக்கிரம் இருக்காயா உங்க ராமனுக்கு… அடுத்தவன் அடிச்சு சாகடிக்கப்படுறத பாத்து ரசிக்கிற அளவுக்கு வக்கிரம் பிடிச்சவனா அந்த ஆளு…

   அது சரி, பொண்டாட்டியவே தீக்குள்ள இறக்கிவிட்டவன் தான.. வக்கிரம் இருக்காதா ?

 2. In Mizoram and other north east states bjp made propaganda as “Bharathiya Jesus party” what kind of propaganda is this? If you want to capture power bjp can go to any extend, is it right?

 3. மன நாேயாளிகளின் கூடாரம் ….? பாெய் பேசாதுஉண்மையை தன் உயர் மூச்சாக காெண்டு வாழ்ந்த அரிச்சந்திரனும் …தன்மகனை தேர்க்காலில் இட்டு காென்று ஒரு பசுவுக்காக நீதியை நிலை நாட்டிய மனுநீதி சாேழனும் இவர்களின் மந்த புத்திக்கு தெரியாதா ..? மனைவியை சந்தேகம் காெண்ட ஒரு கதை நாயகனை தூக்கி வைத்துக் கூவுகிற கூட்டம் திருந்தும் என்று எதிர்பாரப்பது நமக்குதான் ..கேவலம் …கூவட்டும் ..கூவட்டும் …?

 4. காஷ்மீரில் அல்லாஹு அக்பர் என்று சொல்பவர்கள் மட்டுமே வாழமுடியும் என்று சொல்லி ஒவ்வொரு ஹிந்துவையும் தேடி தேடி ஆயிரக்கணக்கில் கொலை செய்த போது இந்த அயோக்கியர்கள் ஒருவருமே அந்த மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை.

  வடகிழக்கு மாநிலத்தில் சட்டமன்ற பதவி ஏற்பு விழாவில் பைபிள் படிக்கப்பட்டது பற்றி எந்த மதசார்பின்மை அய்யோக்கியனுக்கும் கவலையில்லை.

  மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னதற்காக மம்தா பனர்ஜீ கட்சியினர் கொலை வன்முறை செயலில் ஈடுபட்டது பற்றி ஒருவனும் கேள்வி கேட்கவில்லை.

  இன்றும் கூட காஷ்மீரில் குடியேற ஹிந்துக்களுக்கு உரிமை பறிக்கப்படுகிறது, ஹிந்துக்கள் யாராவுது மீண்டும் வந்தால் கொலை செய்யப்படுவார்கள் என்று இஸ்லாமியர்கள் இன்றும் காஷ்மீரில் மிரட்டி கொண்டு இருக்கிறார்கள் அது பற்றி ஒருவனுக்கும் திராணி இல்லை.

 5. மிசோரம் மாநிலத்தில் பதவி ஏற்பில் ஏன் பைபிள் வாசிக்கப்பட்டது என்பதற்கு பதில் சொல்லி பிறகு பேசுங்கள்.

  அல்லாஹு அக்பர் என்று சொல்பவர்கள் தான் காஷ்மீரில் வாசிக்கமுடியும் என்று சொல்லி ஆயிரக்கணக்கில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டதை கண்டித்து விட்டு பிறகு மற்றவர்களை பற்றி பேசுங்கள்.

  அதுவரையில் உங்கள் யாருக்குமே மதசார்பின்மை பற்றி பேசுவதற்கு சிறிதும் தகுதி கிடையாது.

   • No I am not supporting lynching… before knowing the truth fully don’t become judgmental and spread hatred on Hinduism. I have strong suspect how far these incidents might be true.

    Second thing, if a Muslim or a Christian gets affected everyone talks shouts as if democracy and India is in danger, while an Hindu (example: Ramalingam) why no one talks and condemns those incidents.

    • If you want to talk about the injustices against Hindus, you are free to do it LOUDER. I will support you.
     But your posts seems to support violent and injustices against peoples based on casts and religious minorities.

     • No, communist supporters never ever will give voice for injustice to Hindus. Even today West Bengal Government splitting the school children in the name of religion (separate dining rooms for minority students in Government schools for midday meals), how many of you opposed it… No one opposed such polarization of the society.

      Just imagine what would have happened if BJP said separate dining rooms for Hindus children in schools…

      I am opposing these type of fake, no honesty behavior of Communist and other “so called” secular parties.

 6. சாகட்டும்…… கேக்க கடுப்பா இருக்குல்ல? இந்து முஸ்லிம்களால் கொல்லப்படும்போது சூத்த மூடிக்கிட்டுதானடா இருந்தீங்க… இப்ப மட்டும் எதுக்குடா கெளப்பிக்கிட்டு ஓடியாறீங்க

  • நீ வாயத் தொறந்தாலே நாத்தமடிக்குதுயா..!
   இந்துக்கள் முஸ்லிம்களை கொல்றது இருக்கட்டும்… இந்துக்கள் இந்துக்களையே கொல்லும் போது நீங்க வாய மூடிக்கிறீங்களே.. அந்த நேரத்தில எது வழியா சாப்பிடுறீங்க..?

 7. சாகட்டும்…… கேக்க கடுப்பா இருக்குல்ல? இந்து முஸ்லிம்களால் கொல்லப்படும்போது சூத்த மூடிக்கிட்டுதானடா இருந்தீங்க… இப்ப மட்டும் எதுக்குடா கெளப்பிக்கிட்டு ஓடியாறீங்க

 8. இந்து மதத்தில் இருக்கும்வரை தான் சுடலைமாடன் ஐயனார் வழிபாடு!இதுவே கிறிஸ்தவம் இஸ்லாமுக்கு மாறிட்டா அப்படி வழிபட முடியாது.மதவிலக்கம் பண்ணிடுவாங்க.அதையும் சொல்லுங்க!இதே கிறிஸ்தவம் இஸ்லாம் உலகெங்கும் பல ஆயிரம் சிறுதெய்வ வழிபாட்டு குழுக்களை கொன்றும் மிரட்டியும் தங்கள் மதத்தை பரப்பியுள்ளது!அதையும் பேசுங்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க