அடிப்படை வசதிகள் கோரி கடலூர் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

கடலூர் நகராட்சியே !

  • நாறும் கடலூர் பேருந்து நிலைய கழிவறைகளை சுத்தம் செய்யாத காண்ட்ராக்டர் உரிமத்தை ரத்து செய் !
  • திருப்பாதிரிப்புலியூர் மீன் மார்க்கெட்டில் உள்ள பெண்கள் ஓய்வறையை உடனே திற!
  • திருப்பாதிரிப்புலியூர் நகராட்சி சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள் சென்றுவரும் வழியை திற!
  • மஞ்சக்குப்பம் மின் தகன மேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வா!
  • வண்டிப்பாளையம் வழியாக பான்பரி மார்கெட்டுக்கு செல்லும் வழியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்று!

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், 24.07.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்.நந்தா தலைமையேற்றார். ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கடலூர் நகராட்சியில் நீடிக்கும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

படிக்க:
தமிழகத்தை நாசமாக்காதே ! – திருவாரூரில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்
♦ குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி !

இதில் கடலூர் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வெண்புறா குமார், விசிக மாநில அமைப்புச் செயலாளர் தோழர் திருமார்பன், தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் தோழர் சுப்புராயன், தமிழர் கழகம் அமைப்பின் தோழர் பாரதிவானன், வெண்புறா பொது நல பேரவை தோழர் ராஜசேகர் மற்றும் கடலூர் மண்டல மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
கடலூர். தொடர்புக்கு : 81108 15963

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க