சாமில் வங்காளதேசத்திலிருந்து ‘சட்டவிரோதமாக’ குடியேறிய முசுலீம்களை கண்டறியும் பொருட்டு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்தத் தடுப்பு முகாம்களில், மோசமான சூழல் காரணமாகவும் அங்கே நடக்கும் அத்துமீறல் காரணமாகவும் பலர் மரணிப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தங்களுடைய பெயர் இடம்பெறாததை அறிந்த பலர் தற்கொலை செய்து இறந்த சம்பவங்களும் நடந்துவருகின்றன. இந்நிலையில் தடுப்பு முகாம்களில் 25 பேர் இதுவரை இறந்துள்ளதாக அசாம் மாநில அமைச்சர் சந்திர மோகன் பட்டோவாரி தெரிவித்துள்ளார்.

அசாமின் ஆறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் 11,145 பேர் அடைக்கப்பட்டிருப்பதாகவும் மார்ச் 31-ம் தேதி வரை வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தால் 1, 17, 164 பேர் ‘சட்டவிரோத’ குடியேறிகளாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் சந்திர மோகன் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் 1985-க்கும் 2019 ஜூன் 30-ம் தேதிக்கும் இடையே நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் அசாம் சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.

வங்கதேசப் போர் முடிந்த 1971 மார்ச் 25-க்குப் பிறகு இந்தியாவில் (அசாமில்) குடியேறிய அனைவரும் ‘வெளிநாட்டவர்’ எனக் கூறி அவர்களை வெளியேற்றி வருகிறது இந்திய அரசு. மோடி அரசு, முசுலீம்களை வெளியேற்ற மிகச் சிறந்த ஆயுதமாக இதைப் பார்க்கிறது. முன்னாள் இராணுவத்தினர், பத்ம விருதுகளைப் பெற்றவர்கள், எழுத்தாளர்கள், உயர்பதவிகள் இருந்தவர்கள் என பலர் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் குளறுபடிகளால் ‘சட்டவிரோத குடியேறி’களாக அறிவிக்கப்பட்டு, சொந்த நாட்டிலேயே அந்நியர்களாக்கப்பட்டுள்ளனர்.

படிக்க:
தமிழகத்தை நாசமாக்காதே ! புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019
தர்மபுரி சாதிமறுப்பு திருமணம் : இளைஞரின் குடும்பத்தையே கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி !

மத்திய அரசு இதற்காக ரூ. 1,288.13 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் அதில் ரூ. 1,243. 53 கோடிகள் இதுவரை செலவழிக்கப்பட்டிருப்பதாகவும் மாநில அரசு தெரிவிக்கிறது. ‘முசுலீம்களை’ நீக்கம் செய்ய மத்திய – மாநில அரசு முனைப்புடன் செயல்படுவதைத்தான் இது  காட்டுகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி இறுதி தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியாக இருக்கிற நிலையில், அசாமில் பதட்ட நிலை தொற்றிக்கொண்டுள்ளது. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.


கலைமதி
நன்றி : ஸ்க்ரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க