ஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை ! என்ன நடக்கிறது ?

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் கடந்த 18 நாட்களாக நடந்து வரும் விசாரணை குறித்த விவரங்களை இரண்டு பாகமாக வெளியிடப்படும் இந்தக் காணொளிகளில் விவரிக்கிறார், மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் ராஜு.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்துமூட தூத்துக்குடி மக்கள் நடத்திய எழுச்சி மிகு போராட்டத்தை ஸ்டெர்லைட் நிறுவனமும் தமிழக அரசும் இணைந்து துப்பாக்கிச் சூடு நடத்தி ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தன. எங்கும் எழுந்த மக்கள் கண்டனத்தை அடுத்து மேம்போக்கான அரசாணை மூலமாக மூடியது தமிழக அரசு.

தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக வழக்கு விசாரணை தேசியபசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்து வந்தது. தே.ப.தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என உத்தரவிட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில், இந்த தே.ப.தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது. அதனைத் தொடந்து இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கடந்த 18 நாட்களாக நடந்து வரும் விசாரணை குறித்தும், ஸ்டெர்லைட் ஆலையின் மோசடிகள் குறித்தும் இரண்டு பாகமாக வெளியிடப்படும் இந்தக் காணொளிகளில் விவரிக்கிறார், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு.

பாருங்கள் ! பகிருங்கள் !

பாகம் 1:

பாகம் 2 :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க