கருவறையில் தமிழ் பாடினால் தீட்டு என்று கூறி உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடிய தீட்சிதர்கள், தில்லை நடராஜர் கோவிலின் ஆயிரம் கால் மண்டபத்தை திருமணத்திற்கு வாடகைக்கு விட்டு பணம் பார்த்திருக்கிறார்கள்.
சிவகாசி ஸ்டேண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் நிறுவனரின் மகளுக்கும், சென்னை ரத்னா ஸ்டோர்ஸ் நிறுவனரின் மகனுக்கும் நடைபெற்ற திருமணம் சிதம்பரம் நடராஜர் கோவிலின் பிரசித்தி பெற்ற ஆயிரம் கால் மண்டபத்தில் நடந்தது என்பது பலருக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்தியாக இருந்தது.
தில்லை நடராஜர் கோவிலில் பன்னெடுங்காலமாக ஆண்டு அனுபவித்து வரும் தீட்சிதர்கள் தங்களது கல்லாவை நிரப்பிக் கொள்ள கோவிலைக் கொள்ளையடிக்கவும் திறந்துவிடத் தயங்கமாட்டார்கள் என்பதற்கு சமீபத்திய சான்று தான் இந்த நிகழ்வு.
இது குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் உரையாற்றுகிறார்.
பாருங்கள் ! பகிருங்கள் !
கோவிலில் நடைபெற்ற சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.கடவுளை நம்பும் பொதுமக்கள் அவர்களை என்ன வேண்டுமானாலும் சொல்லி திட்டலாம். ஆனால் இதில் தலையிட எங்கள் கடவுளை எப்போதும் அவமதிக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு என்ன உரிமை உள்ளது?
கடவுள் மறுப்பாளர்கள் தான் கோவிலிற்குள் செல்லும் உரிமையை பெற்று தந்தனர் !