முதலாளித்துவ சுரண்டலுக்குத் தீர்வு சோசலிசமே | தோழர் ஆ.கா. சிவா உரை

நவம்பர் 7, 2020 ரஷ்ய சோசலிசப் புரட்சி நாள் விழாவை முன்னிட்டு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக பட்டாபிராமில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் தோழர் ஆ.கா. சிவா ஆற்றிய உரை காணொலி

திருவள்ளூர் மேற்கு மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு, பட்டாபிராமில் நவம்பர் 7 அன்று மாலை 6 மணியளவில் ரஷ்ய சோசலிசப் புரட்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் திரளான தோழர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என சுமார் 250-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காண்ட்ராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் ஆ.கா. சிவா சிறப்புரையாற்றினார்.

தனது உரையில், முதலாளித்துவம் கொல்லும்; கம்யூனிசமே வெல்லும் என்கிற முழக்கத்தை தற்போதைய பேரழிவுகளோடு பொருத்தி விவரித்தார்.
முதலாளித்துவம் சொர்க்கமல்ல; அது ஒரு நரகம் என்பதை கொரோனா பெருந்தொற்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருப்பதையும், முதலாளித்துவ பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துக்கட்ட சோசலிசம்தான் ஒரே மாற்று – ஒரே தீர்வு என்பதையும் எடுத்துரைத்த தோழர் சிவா, சோசலிச இலட்சியத்தை நோக்கி நமது பாதையை வகுக்க அறைகூவல் விடுத்தார்!!

பாருங்கள் ! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க