மிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருப்பது ஒகேனக்கல். இங்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திர, கர்நாடகா, போன்ற அண்டை மாநிலங்களை சார்ந்தவர்களும், வெளிநாட்டினரும் கூட வந்து செல்கின்றனர். இப்படி புகழ்பெற்ற சுற்றுலா தலத்திற்கு செல்லும் சாலை பயணிக்க முடியாத அளவிற்கு சீர்கெட்டு உள்ளது.

இதுபோக நாட்ராம்பாளையம் முதல் ஒகேனக்கல் வரை வரக்கூடிய சாலை என்பது அடர்ந்த காடுகள் நிறைந்த சாலை ஆகும். இந்த பாதையை பெரும்பாலும் வெளிமாநிலத்தவர்கள், மற்றும் உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வருகின்றர். மலை பகுதியில் இருக்கும் கொண்டை ஊசி வளைவில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு சுற்றுலாவிற்கு வரும் மக்கள் இறக்கின்றனர். சாலையில் சரியான தடுப்புகளோ, சீராகவோ இல்லை.

இதனால் 16 கிலோ மீட்டர் சாலையை கடந்து ஒகேனக்கலுக்கு வர ஒரு மணிநேரம் பிடிக்கிறது. இந்த ஆண்டு சிறிதளவு மழை பொழிந்துள்ளது இதனால் அரைகுறையாக இருந்த சாலையும் அடித்து சென்றுவிட்டது. இந்த வழியாக வரும் உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் தினசரி பேருந்துகள், செல்லமுடியாத நிலை தற்போது உருவாகிவிட்டது.

இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை மக்கள் போராடியும், மனு கொடுத்தும் வந்தனர். அரசோ “கேளாதோர் காதில் ஊதும் சங்கு போலவே..” இருக்கிறது. கடந்த 26.06.2019 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக மக்களை திரட்டி ஒகேனக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய போது, மக்கள் அதிகமாக வருவார்கள் பாதுகாப்பு தரமுடியாது என மொக்கையான காரணத்தை சொல்லி அனுமதி மறுத்தது போலீசு. அதுமட்டுமின்றி தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் இந்த செய்தி நாடு முழுவதும் பரவி நாறிவிடும் என்பதால் வழி எங்கும் போலிசை போட்டு மக்களை மிரட்டி ஆர்ப்பாட்டத்திற்கு வராமல் தடுத்தது அரசு.

படிக்க:
ஒக்கேனக்கல் : பேருந்து கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்ட மக்கள் அதிகாரம் !
♦ நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல !

அரசுக்கு கோரிக்கை வைப்பதால் எந்த பலனும் கிடைக்காது, நாமே அதிகாரத்தை கையில் எடுத்தால் தான் காரியம் நடக்கும் என்பதை மக்களுக்கு உணர்த்தி 27.09.2019 அன்று மக்கள் அதிகாரம் தோழர்கள் 10 பேர் சென்று சாலையை நாமே போடுவோம் என மக்களிடம் எடுத்து பேசி மண்வெட்டி, கடப்பாறை இவற்றை எடுத்துக் கொண்டு களத்திற்கு சென்றனர். சாலை மிகவும் மோசமாக உள்ள இடத்தில் சீர்செய்துக் கொண்டு இருந்த போது இரண்டு தோழர்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் சாலையை சீர்செய்ய நிதி தாருங்கள் என கேட்டபோது மக்கள் தாராளமாக நிதி கொடுத்தனர்.

இவ்வாறு உண்டியல் மூலம் திரட்டப்பட்ட தொகையை கொண்டு மீண்டும் அடுத்த நாள் 28.09.2019 அன்று ஜே.சி.பி இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்து சாலையை சீர்ப்படுத்தும் வேலையை மக்கள் அதிகாரம் தோழர்கள் செய்ய தொடங்கினர். முதல் நாள் பத்து பேருடன் தொடங்கிய பணியில், இரண்டாவது நாள் 30 -க்கும் அதிகமான நபர்கள் கலந்துக் கொண்டு சாலையை சீரமைத்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வருகின்ற 30-ம் தேதி வரை பணியை தொடர்வது என திட்டமிட்டு வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு சாலையை மக்களே முன்வந்து சீர்படுத்த முயற்சிக்கும் போது அரசு அதிகாரிகளும், மாவட்ட நிர்வகமும் மக்கள் செய்யும் வேலையை வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது. அது மட்டுமல்ல சுற்றுலா பயணிகளிடம் கொள்ளை அடிக்க ரோட்டை மறித்து சுங்கவரி வசூல் செய்கிறது. வாகனம் செல்ல முடியாத சாலைக்கு ஆண்டுக்கு கோடி கணக்கில் சுற்றுலா பயணிகளிடம் கொள்ளையடிக்கிறது அரசு.

மக்கள் அன்றாடம் பயன்படுத்த சாலையை சீர் அமைக்க பல முறை போராடினாலும் சாலையை போடாத எடப்பாடி அரசு. முதலாளிகளுக்கான எட்டுவழிச்சாலையை போடக்கூடாது, அது விவாசயிகளின் வாழ்க்கையை சூறையாடும் என்று எதிர்த்த போதும் போட்டே தீருவோம் என கொக்கரிக்கிறது.

தற்போது நமக்கு முன் இருப்பது ஒரே வழிதான் பெரும் திரளாக மக்களை திரட்டுவோம், சாலையை போட துப்பில்லதா அரசுக்கு எதிராக வீதிக்கு வருவோம் என்று மக்களுக்கு அறைகூறி அடுத்து கட்ட போராட்டத்திற்கு திட்டமிட்டு வருகிறது மக்கள் அதிகாரம் அமைப்பு.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நாட்ராம்பாளையம் பகுதி,
அஞ்செட்டி வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்.
தொடர்புக்கு : 91592 64938

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க