வேலூர் சிறுமி தனுஷ்கா மரணம்: அரசின் மெத்தனப் போக்கே காரணம்!

சுமார் 10 கி.மீ தூரத்திற்கு அழுதுகொண்டே குழந்தையின் சடலத்தைப் பெற்றோர் தூக்கிக்கொண்டு நடந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரவு நேரத்தில் வீட்டின் அருகே தூங்கிக்கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுமி தனுஷ்காவை  விஷப்பாம்பு ஒன்று கடித்தது.வலியால் துடித்த அச்சிறுமிக்கு மருத்துவம் பார்க்க அருகில் ஏதும் மருத்துவமனை  இல்லாத காரணத்தால் 10.கி.மீ-க்கு அப்பால் உள்ள   அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். செல்லும் பாதி வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார் தனுஷ்கா.

வேலூர் மாவட்டம் அல்லேரி மலை கிராமம் அத்திமரத்துக் கொல்லை பகுதியில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளியான விஜி; இவரின் மனைவி பிரியா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற கைக்குழந்தை இருந்தது.

இந்த நிலையில் கடந்த மே 26 வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்த தனுஷ்கா என்ற சிறுமியை நல்ல பாம்பு ஒன்று கடித்தது. அப்போது கதறி அழுத குழந்தையைக் கண்ட பெற்றோர் அருகில்  பாம்பு இருப்பதைப் பார்த்து அலறி அடித்துக் கொண்டு அணைக்கட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல முடிவெடுத்தனர். ஆனால் சரியான

சாலை வசதி இல்லாததால் பல கி.மீ நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக மருத்துவமனைக்குக் குழந்தையைக் கொண்டு செல்லும் நேரம் அதிகரித்தது.


படிக்க: அருணாச்சல பிரதேசத்தில் புறக்கணிக்கப்படும் சக்மா பழங்குடிகள்!


இதையடுத்து குழந்தையின் உடல் முழுவதும் வேகமாக விஷம் பரவி மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே தனுஷ்கா உயிரிழந்துவிட்டாள். பின், குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல சரியான  சாலை வசதி இல்லாததால் பாதி வழியிலே ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டு அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். இதையடுத்து சுமார் 10 கி.மீ தூரத்திற்கு அழுதுகொண்டே குழந்தையின் சடலத்தைப் பெற்றோர் தூக்கிக்கொண்டு நடந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தெரிந்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் கிராமத்தில் சாலைகள் அமைக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவ வசதிகளை உடனே அரசு செய்துகொடுக்கும் என்றும் வாக்குறுதி அளித்தனர். இந்த மக்களின் அவலநிலை இன்றுதான் அரசின் கண்களுக்குத் தெரிவதுபோல பேசுவது யாரை ஏமாற்ற? பல ஆண்டுகளாக வாக்கு வாங்கச் சென்ற அரசியல் கட்சிகளுக்கு இப்பிரச்சினை தெரியாதா என்ன. அனைத்திற்கும் வரி வாங்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இது தெரியாது போலும்!

அதே மலைப்பகுதியில் ஒரு கார்ப்ரேட் நிறுவனம் தொழில் துவங்கினால் அதிநவீன சாலை அமைக்கும் அரசுக்குச் சாதாரண உழைக்கும் மக்களின் நன்மைக்காகச் சாலை அமைத்துக் கொடுப்பது கடினமான பணிதான்.


சித்திக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க