சிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன ? | தோழர் ராஜு உரை | காணொளி

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு கருவியை வடிவமைக்க விரும்பாத, அதைப் பற்றி இன்றளவும் கூட சிந்திக்காத இந்த அரசுக் கட்டமைப்புதான் பிரச்சினைக்குரியது.- தோழர் இராஜு உரை

ழ்துளைக் கிணற்றில் 87 அடி ஆழத்தில் சிக்கிய 2 வயது குழந்தை சுஜித் மீட்கப்படாமல் இறந்து போனது இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நிலவுக்கு சந்திராயன் அனுப்பும் ‘வல்லரசி’டம் கேவலம் 87 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தையைக் காப்பாற்ற வக்கில்லையா ?

பலரும் பல விதமாகப் பதில் தருகிறார்கள். அரசும் அரசு ஆதரவாளர்களும், 5 நாட்கள் அமைச்சரும் அதிகாரிகளும் உழைத்த கதையைக் கூறுகிறார்கள். ரிக்கை கொண்டுவந்தோம் – நெய்வேலி குழ்வைக் கொண்டுவந்தோம் – இராணுவத்தைக் கொண்டு வந்தோம் என சவடால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

படிக்க :
♦ குழந்தை சுஜித்: ஆழ்துளைக் கிணறும் கையாலாகாத அரசுக் கட்டமைப்பும் !
♦ மதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு !

குழியில் விழுந்த குழந்தையை மீட்க என்ன திட்டம் இந்த அரசாங்கத்திடம் இருந்தது ? அதற்கென ஏதேனும் வழிமுறை இருக்கிறதா ? அதற்கான கருவிகள் இருந்ததா ?

ரத்தக் குழாயை அடைத்த கொழுப்பை அகற்றக் கூடிய தொழில்நுட்பமே சர்வ சாதாரணமாக கிடைக்கும் நாட்டில் 6 இன்ச் விட்டம் கொண்ட பள்ளத்தில் இருந்து குழந்தையை மீட்கும் தொழில்நுட்பத்துக்கா பஞ்சம் ?

கண்டிப்பாகக் கிடையாது ! அந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு கருவியை வடிவமைக்க விரும்பாத, அதைப் பற்றி இன்றளவும் கூட சிந்திக்காத இந்த அரசுக் கட்டமைப்புதான் பிரச்சினைக்குரியது.

மலக்குழியில் இறங்கி அடைப்பை நீக்கும் தொழில்நுட்பமா இங்கு பிரச்சினை ? அத்தொழிலிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களை விலக்க விரும்பாத பார்ப்பனிய, லாபவெறி சிந்தனை தானே பிரச்சினை !

டாஸ்மாக் விற்பனைக்கு டார்கெட் வைக்கும் அரசு ஏழைகளைக் காக்கும் கருவிகளை உருவாக்குவதற்கு என்றும் டார்கெட் வைப்பது கிடையாது.

மக்களுக்கு எதிராக மாறிவிட்ட இந்த அரசு இயந்திரத்தின் தோல்வியை அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு !

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க