சிவந்த ரஷ்யாவிடம் பாடம் கற்போம் ! சிவக்க வைப்போம் இந்தியாவை – கரங்கள் சேர்ப்போம் !!

1917-நவம்பர் 7-ல் நடந்த ரசிய புரட்சியை, உழைக்கும் மக்கள் திருவிழாவாக அதன் 102-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து திருவெண்ணைநல்லுர் வட்டாரத்தை சேர்ந்த கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்ட முற்போக்கு சிந்தனையாளர்கள் ஒன்று கூடி, மேற்கண்ட தலைப்பில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தோழர் ஞானஒளி தலைமை தாங்கி இந்நிகழ்ச்சியை துவங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சி நக்சல்பாரி தோழர் ரெங்கநாதன் பிறந்த காரப்பட்டு பகுதியில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சாதி வேறுபாடின்றி 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் என சாதி-மதம் கடந்து உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைந்தனர்.

நிகழ்ச்சியில் 10-க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் தங்களது உரையில், முதலாளித்துவத்தின் கோரமுகத்தையும் லாப வெறியையும் அம்பலப்படுத்தி  மிகவும் தெளிவாக பதிவு செய்தனர். இறுதியில் தொகுத்துப் பேசிய தோழர் அம்பேத்கர் “முடைநாற்றம் வீசும் முதலாளித்துவத்தை மண்ணில் புதைப்போம்! மணக்கும் சோசலிசத்தை மாந்தர் உலகத்தில் விதைப்போம்!!” என்ற தலைப்பில் பேசினார். அதில், “இதுவரை மனித இனம் கண்டிராத அவலங்களை முதலாளித்துவம் நடைமுறைபடுத்திவருகிறது. இனி மாற்று சோசலிசம்தான் தீர்வு” என பேசினார். இறுதியில் பாட்டாளி வர்க்க சர்வ தேசியகீதத்துடன் நிகழ்ச்சி முடிக்கப்பட்டது.

படிக்க:
பாசிசத்தை வீழ்த்த நவம்பர் புரட்சி நாளில் சூளுரைப்போம் | கணேசன்
♦ திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் ! சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும் ! திருச்சி அரங்கக் கூட்டம் !

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்ட அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. குறிப்பாக ‘ஆதிக்க’ சாதி-யை சேர்ந்தவர்கள் செறிவுடன் வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியானது சாதி தீண்டாமைக்கு ஆப்பு வைக்கும் வகையிலும், சமத்துவ பாதைக்கு வலுசேர்ப்பதாகவும் அமைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. காவியிடம் திமுக எந்தநேரத்திலும் சரணடையலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்க அவர்களுக்கு கொள்கைக்ளோவிட கோடிகள் மட்டுமே முக்கியம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க