வணக்கம்,
கொரோனா நோய் தொற்றின் காரணமாக அரசு அமுல் படுத்தியுள்ள ஊரடங்கால் முடங்கிப்போய் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி தவிக்கின்றனர்.
மத்திய மாநில அரசுகள் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அளவில் நிதியும், உணவு பொருட்களும் வழங்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைத்து போராடுவது தங்களுக்கு தெரியும். அதே வேலையில் கொரோனா நிவாரண உதவிக்காக பசியைப் போக்குவோம் குழுவின் சார்பில் முடிந்த அளவில் நண்பர்கள், ஆதரவாளர்களிடம் நிவாரண பொருட்களை திரட்டி தமிழகம் முழுவதும் மக்களுக்கு உதவி வருகிறோம். அதன்படி 08.05.2020 அன்று காலை 11.00 மணியளவில் விழுப்புரம் 9- வது வார்டு முத்தோப்பு திடீர்குப்பம் பகுதியில் உள்ள குடும்பத்தினருக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
நிவாரண பணியில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் இளைஞர்கள் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு அவரவர் இல்லங்களுக்கே சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கபட்டது. அப்போது அப்பகுதி மக்கள் அனைவரும் தினக்கூலிகள் தான் என்றும் நாங்கள் எந்த வருமானமும் இன்றி மூன்று வேலை உணவுக்கு வழி இல்லாமல் தவித்து வருகின்றோம். எனவே நாங்கள் நிவாரண பொருட்களை எதிர் நோக்கி காத்திருக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே அரசும் எங்களுக்கு போதுமான உதவிகளை செய்ய வேண்டும் என எதிர் பார்த்து காத்திருக்கின்றோம் என்று தங்களின் நிலைமைகளை கூறி ஆதங்கப்பட்டனர்.
மேலும் சில பகுதி பொது மக்கள் எங்களிடம் உதவி கோரியுள்ளனர். அவர்களிடம் வரும் நாட்களில் எங்களால் முடிந்த உதவிகளை தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மூலம் நிவாரண பொருட்களை பெற்று செய்வதாக கூறியுள்ளோம்.
படிக்க:
♦ மக்கள் போராட்டத்தின் விளைவு – டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு !
♦ விசாகப்பட்டிணம் விசவாயு கசிவு : கார்ப்பரேட் படுகொலை !
எனவே போதுமான உணவு பொருட்கள் இன்றி தவிப்பவர்களுக்கு உதவ தயாராக உள்ளவர்கள் தங்களாலும் தங்கள் நண்பர்கள் மூலமாகவும் முடிந்த அரிசி, மளிகை பொருட்களையோ, நிதியாகவோ வழங்குமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புக்கு : 99949 79490 / 73588 69232
தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.