பாசிசத்தை வீழ்த்த நவம்பர் புரட்சி நாளில் சூளுரைப்போம் | கணேசன்

சென்னையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தின விழாவில், மக்களை மரணக்குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம் - என்ற தலைப்பில் பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆற்றிய உரையின் காணொளி!

க்களை மரணக்குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்! என்ற முழக்கத்தை முன் வைத்து, ரசியப் புரட்சியின் நோக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக நவம்பர் புரட்சிதின விழாவைக் கொண்டாடின, ம.க.இ.க., பு.மா.இ.மு., பெ.வி.மு. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள்.

சென்னையில், கடந்த நவம்பர் 11 அன்று நடைபெற்ற விழாவில், பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் பங்கேற்று ஆற்றிய உரையின் காணொளி!

இன்று உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்கள் முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு பலியாகி வருகின்றனர். இன்று முதலாளித்துவம் உயிர் வாழ்வதற்காக உலகம் முழுவதிலும் மதவெறி, இனவெறி பாசிஸ்டுகளை ஆட்சி அதிகாரத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அன்று இனவெறி பாசிஸ்டான கொடுங்கோலன் ஹிட்லரைக் கண்டு உலகமே அச்சத்தில் இருந்த போது, அந்த ஹிட்லரை ஓட ஓட விரட்டி இந்த பூமிப் பந்தை மீட்டது ஸ்டாலின் தலைமையிலான மக்கள் ராணுவம். இன்று இந்தியாவின் மதவெறி பாசிஸ்டான மோடியை மட்டுமல்ல, உலகம் முழுதும் பல்வேறு நாடுகளை ஆக்கிரமித்துள்ள பாசிசத்தை எவ்வாறு வீழ்த்தப்போகிறோம் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக உரையாற்றியிருக்கிறார்.

அவரது உரையின் காணொளி!

பாருங்கள்! பகிருங்கள்!!

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க