13.06.2026

சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ சரவணனுக்கு பிணை! | ம.அ.க. கண்டனம்

பத்திரிகைச் செய்தி

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான கவின் செல்வகணேஷ், தேவர் சாதியைச் சேர்ந்த சுபாஷினி என்பவரைக் காதலித்ததால், 2025 ஜூலை 27 அன்று திருநெல்வேலி கே.டி.சி நகரில் சுபாஷினியின் தம்பி சுர்ஜித்-ஆல் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்த சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரியை  போலீஸ் கைது செய்த நிலையில், சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ சரவணனுக்கு 11.06.2026 அன்று நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதைக் கழகம் கண்டிக்கிறது.

ஆதிக்க சக்திகளுக்கு வளைந்து கொடுக்கும் சட்டம், ஆதிக்கச் சாதி மனநிலை கொண்ட அதிகார வர்க்கம், ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பல் அரசின் உறுப்புகளுக்குள் புகுந்து இந்துத்துவ முனைவாக்கத்தை உருவாக்கும் இன்றைய சூழலில், உழைக்கும் மக்கள் சட்டத்தின் மூலம், வேறு என்ன தீர்ப்பை எதிர்பார்க்க முடியும்?

பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்காத சூழ்நிலையில், இத்தீர்ப்பானது குற்றவாளிகளுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் கிடைக்க வழிசெய்துள்ளது.

ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டத்திற்கான தேவையை இந்த சூழல் மேலும் வலியுறுத்துகிறது. மக்களைத் திரட்டி போராடித்தான் இது போன்ற சட்டங்களின் வழியாகக் கூட நீதியைப் பெற முடியும்.

உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவோம்! சாதி ஆணவப் படுகொலைகளுக்கு அடிப்படையாகத் திகழும் ஆதிக்க சாதிவெறி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல்களையும் வீழ்த்த களமிறங்குவோம்!


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க