சென்னை: அதிகரிக்கும் மின்வெட்டு – வெடிக்கும் மக்கள் போராட்டம்

சென்னை அம்பத்தூர், மாங்காடு, வேளச்சேரி, பெரம்பூர், மடிப்பாக்கம், பொன்னேரி என பல்வேறு பகுதியில் பல மணி நேரம் நேற்று மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அம்பத்தூர் செங்குன்றம் சாலையில் மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பொன்னேரியில் இரண்டாவது நாளாக சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

10.06.2026

சென்னையில் அதிகரிக்கும் மின்வெட்டை கண்டித்து
வெடிக்கும் மக்கள் போராட்டம்

பத்திரிகைச் செய்தி

சென்னை மாவட்டத்தில் தொடர்ந்து இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் அதிக புழுக்கம் நிலவும் சூழலில் வயதானவர்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பகல் முழுவதும் கடுமையான வெயிலில் வேலை பார்த்து வீட்டிற்கு திரும்பும் மக்கள் இரவிலும் தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். பல நாட்கள் மின்வெட்டுத் தொடர்வதால் மின் நிலையங்களை நடுநிசியில் இரவு இரண்டு மணிக்கு ஆவேசமாக மின் நிலையங்களை முற்றுகையிட்டு மின்துறை அதிகாரிகளிடம் ஏன் மின்வெட்டை சரி செய்யவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

சென்னை அம்பத்தூர், மாங்காடு, வேளச்சேரி, பெரம்பூர், மடிப்பாக்கம், பொன்னேரி என பல்வேறு பகுதியில் பல மணி நேரம் நேற்று மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அம்பத்தூர் செங்குன்றம் சாலையில் மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பொன்னேரியில் இரண்டாவது நாளாக சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாங்காடு, பெரம்பூர், மடிப்பாக்கம், பொன்னேரி உள்ளிட்ட பகுதியிலும் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

மின்வெட்டு பிரச்சினையை முறையாக சரி செய்வதற்கான வேலைகளை முன்னெடுக்காமல் தி.மு.க. தான் மின்வெட்டுக்கு காரணம், பியூசை புடுங்கி விடுகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் செய்திகளை பரப்பி வருகின்றனர்.

அதிகாரத்தில் இருக்கக்கூடிய த.வெ.க. அரசு மக்கள் பிரச்சினைகளுக்கு பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும். மக்கள் பிரச்சினைகளில் முறையாக தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டியது இந்த அரசின் கடமை.

தொடரும் மின்வெட்டை சரி செய்யாமல் மக்களை அவலத்தில் தள்ளும் த.வெ.க. அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. மின் வெட்டு பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு த.வெ.க. சரி செய்ய வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.


இவண்,
தோழர் அமிர்தா,

சென்னை மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
7358482113

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க