
16.06.2026
பத்திரிகைச் செய்தி
மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை
– உடலை வாங்க மறுத்த 100வது நாள்
– சேலம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளிப்பு
மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, உடலை வாங்க மறுத்த 100வது நாளில், மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மனுக் கொடுக்கும் இயக்கம் ஜூன் 15, திங்கட்கிழமையன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன் ஒருபகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டக் குழு ஒருங்கிணைப்பில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்களிடம் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து மனு அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் தோழர். அருண் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

கலந்து கொண்ட ஜனநாயக சக்திகள்:
தோழர் H.அஸ்கர், மாவட்டத் தலைவர், SDPI
தோழர் சுரேஷ்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முன்னாள் ஒன்றிய செயலாளர்
தோழர் அர்ஷத், மக்கள் அதிகாரக் கழகம், மாவட்டப் பொருளாளர்
***
சேலம் மாவட்ட நிகழ்வை கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் தோழர். இரஞ்சித் ஒருங்கிணைத்தார்.
கலந்து கொண்ட ஜனநாயக சக்திகள்:
தோழர் மு.மாரியப்பன், மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை)
தோழர் த.கண்ணன், ஒருங்கிணைப்பாளர், உழைப்போர் உரிமை இயக்கம்
தோழர் அ.வின்சென்ட், புரட்சிகர இளைஞர் முன்னணி
தோழர் வேல்முருகன் மற்றும் தோழர் சத்தியமூர்த்தி, திராவிடர் கழகம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தோழர் வீரமுத்து, தோழர் சுப்பிரமணி, தோழர் செல்வம், தோழர் சங்கீதா
தோழர் பா.செபாஸ்டின், மாநில ஒருங்கிணைப்பாளர், இந்திய குடியரசு கட்சி (பூலே)
அ.அருள், தமிழக வெற்றிக் கழகம்
தோழர் க.உதயபிரகாஷ், மண்டல பொறுப்பாளர், தமிழ்ப் புலிகள் கட்சி
தோழர் மா.இளங்கோவன், மாவட்டப் பொறுப்பாளர், தமிழ்ப்புலிகள் கட்சி
தோழர் மோகன், மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தாலும் வேலை நிலைமைகள் காரணமாக பிற கட்சிகள், இயக்கங்களைச் சார்ந்த சில தோழர்களால் கலந்து கொள்ள இயலவில்லை. அவ்வாறு கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு அத்தோழர்கள் வருத்தம் தெரிவித்தனர். அடுத்தடுத்து வரக்கூடிய மக்கள் பிரச்சினைகள் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதாகத் தெரிவித்தனர்.
மனு கொடுக்கும் நிகழ்வில் உணர்வுப்பூர்வமாகப் பங்கெடுத்துக் கொண்ட அனைத்துத் தோழர்களுக்கும் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்படும் மக்களுக்காய் தொடர்ந்து ஒன்றிணைந்து களமாடுவோம்.
அதேசமயம், உடலை வாங்க மறுத்த இதே 100வது நாளில், ஆகாஷ் டெலிசனின் உடலை அவரது பெற்றோர்கள் வாங்கவில்லையென்றால், போலீசே அடக்கம் செய்யும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை கூறியிருப்பது கண்டனத்துக்குரியதாகும். ஏழை, எளிய மக்களுக்கான நீதி களப் போராட்டங்களை வலுவாக முன்னெடுத்துச் செல்வதில்தான் உள்ளது என்பதை பட்டவர்த்தனமாக இது உணர்த்துகிறது.
![]()
இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











