ன்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் சுட்டுக் கொல்லவேண்டும் என சில வெட்டி ஜந்துகள் கூச்சலிடுகின்றன.

பழங்குடிப் பெண் அத்தியூர் விஜயாவை 6 போலீசார் கூட்டு வன்புணர்வு செய்த வழக்கில் 13 ஆண்டுகள் போராடி தண்டனை பெற்றுத் தந்தவர்கள் கல்யாணி உள்ளிட்ட மனித உரிமையாளர்கள்தான். தன்னலமற்று, அஞ்சாமல் வாதாடியவர் திமுக வழக்குரைஞர் எம்.ஆர்.ஷெரீப். (6 பேரையும் உயர்நீதிமன்றம் விடுவித்தது வேறு)

வாச்சாத்தியில் அரசு இயந்திரம் கும்பலாக வந்து வன்புணர்வு செய்த அதிரவைக்கும் நிகழ்வில் போராடியவர்கள் கம்யூனிஸ்டுகளும், மனித உரிமையாளர்களும் தான்.

அண்ணாமலை நகர் பத்மினி போலீஸ் நிலையத்தில் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் போராடியவர்கள் கே.பாலகிருஷ்ணன் போன்ற கம்யூனிஸ்டுகளும், மனித உரிமையாளர்களும்தான்.

படிக்க:
குடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு !
♦ கொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா ?

இந்த பட்டியல் நீளமானது. ஏதிலிகளுக்கு, எளியவர்களுக்கு, விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கு வன்புணர்வு நடந்தாலும், எது நடந்தாலும் இவர்களே கதி.

இவர்கள் இனிய வாழ்வை தொலைத்து சட்டத்தீர்வை கோரியே போராடினர். சுட்டுக்கொல்ல வேண்டியல்ல. பரந்துபட்ட மக்களின், பெண்களின் பாதுகாப்பை சட்ட வாழ்வே உறுதி செய்யும் என இவர்கள் ஆய்ந்து, அறிந்து நம்புகின்றனர்.

நூற்றுக் கணக்கான என்கவுண்டர்களை நிகழ்த்தியுள்ள உ.பி போலீசாரின் துப்பக்கிகள் உன்னாவ் குற்றவாளிகளுக்கு எதிராக வெடிக்குமா ?

மற்றவர்கள் பாதுகாப்புக்காக வாழ்வை இழந்தும் இவர்கள் போராடுகிறார்கள்.

அடுத்தவர்களுக்காக விரல் நகத்தைக்கூட இழக்கக் தயாராக இல்லாத, ஒருமுறைகூட வீதியில் நின்று கை உயர்த்தாத நீதிமான்கள் வன்புணர்வு சந்தேக நபர்களுக்கு மட்டுமல்ல, எண்ணற்ற வன்புணர்வு வழக்குகளில் நீதிக்காக போராடிய இந்த மனித உரிமையாளர்களை சுடவேண்டும் என அரசமரத் தீர்ப்புகளை வழங்குகிறார்கள்.

நூற்றுக்கணக்கான ‘என்கவுண்டர்’ எனப்படும் போலீஸ் கொலைகள் நடந்த உ.பி.தான், அங்குள்ள ‘உன்னாவ்’தான் இந்தியாவின் வன்புணர்வு சம்பவங்களின் தலைமையகமாக உள்ளது என்பதையும் அவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள்.

ஆனால் மனித உரிமையாளர்களை (இவர்களில் பலவகை உண்டு. இவர்களோடு உடன்பட, மாறுபட பல உண்டு) சுடவேண்டும் என்போர் உ.பி. உன்னாவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் சுடவேண்டும் என்று கோரி நான் பார்க்கவில்லை.

நான் அப்படி கோரவில்லை என்பது வேறு.

நன்றி : AD Bala
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

1 மறுமொழி

 1. வெறுமனே நான்கு பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டதால் இனி பாலியல் வன்முறைகள் முடிவுக்கு வந்துவிட்டது போல் சிலர் சித்தரிப்பதும் இதனை சமுகத்தின் பலர் கொண்டாடுவதும் ஏதோ பாலியல் வன்முறை இனி நடக்கவே முடியாது என்பது போல் கூச்சலிடுவதும் உண்மையான குற்றவாளியயை பாதுகாக்க மட்டுமே!.
  இன்றைய பெண்களுக்கு நடக்கின்ற கொடுமையானது அதாவது நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலவிய தனிப்பட்ட மற்றும் பொதுவான பெண்கள் மீதான ஒடுக்குமுறையை விட இன்று ஆபாச சீரழிவு கலாச்சாரங்களை பரப்பி பாலியல் வக்கிரங்களை தனது வியாபார நோக்கில் பெண்களை நிர்வாணமாக்கி ஆடம்பர மோகத்தை தூண்டி ஆபாச சீரழிவுககளின் எல்லை கடந்த கட்டவிழ்த்துள்ளது அதாவது பெண்கள் மீதான அடக்குமுறை வடிவம்தான் மாறியுள்ளது இவை கட்டிக்காக்கும் அரசு நீக்கு போக்காக இதனை தூக்கி நிறுத்தவே செய்கிறது.
  ஆண்டான் அடிமை நிலப்பிரபுத்துவ சமூகங்களில் ஆணாதிக்க கருத்துக்கள் சாதி மதம் மற்றும் அரசு நிறுவனங்கள் மூலம் கோலோச்சிய முதலாளித்துவ சமூகத்தில் ஆணாதிக்க கருத்துகள் கலாச்சார நிறுவனங்கள் மூலமாக பெண்களுக்கு எதிராகன அடக்குமுறை வடிவமாக மாறியுள்ளது. இதற்க்கு காரணமன அரசை விடுத்து தனி நபர்களை கொன்றுவிட்டால் தவறுகள் தடிக்கப் படுமா?
  இந்தத் தவறுகளை வளர காரணமான அமைப்பு முறையை தூக்கி போடாமல் இதற்க்கு தீர்வில்லை.
  அம்பெய்தவனை விடுத்து அம்பை நோகுவது போல் உள்ளது.
  தோழர்களே இதனை அறிய எங்கெல்ஸ்சின் “குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” நூலை வாசித்தால் சரியான புரிதல் கிடைக்கும்.

  மனிதகுல வரலாற்றில் முதல் முதல் தோன்றிய வேலைப் பிரிவினை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் ஏற்பட்டதுதான்.
  குழந்தை பெறுவதற்காக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருந்த வேலைப் பிரிவினை முதல் வேலைப் பிரிவினையாகும், இந்த ஒடுக்கு முறையை ஆண் பெண் இருவருக்குமான வர்க்க ஒடுக்குமுறையாக தெரிவிப்பார் எங்கெல்ஸ்.
  (குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் நூல் பக்கம் 105).
  ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட இந்த முரண்பாடு சமுகத்தில் பிற முக்கிய முரண்பாடுகள் மறைந்தபின் நான் கடைசியாக முற்றிலும் மறைந்துவிடும் அவை சோசலிச சமூகத்தில் மட்டுமே சாத்தியம்.
  முதலாளித்துவ சமூகத்தில் முந்தைய ஆண்டான் அடிமை நிலப்பிரபுத்துவ சமூகங்களின் அனைத்து பிற்போக்குகளையும் தூக்கி எறிந்த பின்னரே தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் பெண்கள் மீது இருந்த சில கொடுமைகளும் தூக்கி யெரிந்தது உற்பத்தி சக்திகளின் தேவையை ஒட்டி சுய ஆதாயத்துக்காக பெண்களையும் உற்பத்தியில் ஈடுபடுத்தியது, இதற்காக பெண்களுக்கும் கல்வி போன்ற பெரு வாய்ப்புகளை திறந்து விட்டன பெண்களின் நலனுக்கான சட்டங்கள் சலுகைகள் சொத்து விவாகரத்து போன்ற சில உரிமைகளை முதலாளித்துவ சமூகம் வழங்கின அவையும் போராடிய பெறப்பட்டன. இருந்தாலும் முதலாளித்துவ சமூகம் பெண்களுக்கு இழைக்கும் கொடுமை முந்தைய சமூகத்தை காட்டிலும் கொடுமையானது முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலவிய தனிப்பட்ட மற்றும் பொதுவான பெண்கள் மீதான ஆபாச சீரழிவு கலாச்சாரங்களை பரப்பி பாலியல் வக்கிரங்களை நிர்வாணமாக்கி ஆடம்பர மோகத்தை தூண்டி மக்களின் ஒழுக்கக் கேட்டை ஆதாயமாக்கி ஆணாதிக்க கருத்துகளை தூக்கி நிறுத்தி சாதி மத பேதங்களை அரசே முன் நின்று நடத்துகிறது.

  இன்னும் பல சீர்திருத்தங்களை சட்ட வழியில் அறிவிக்கும் அரசு பெண்களின் மீது ஆபாச சீரழிவுகளை எல்லை கடந்து கட்டவிழ்த்துள்ளது அதாவது பெண்கள் மீதான ஒரு அடக்குமுறை வடிவம்தான் இவை மாறியுள்ளது
  நகரங்களி படித்த குட்டி முதலாளித்துவ மற்றும் தொழிலாளி பிரிவு பெண்கள் குடும்பத்தில் ஆணாதிக்கத்திற்கு எதிரான கலவரத்தையும் சமூகத்தில் போராட்டம் தொடர்கிறது ஆனால் இவர்கள் முதலாளித்துவ பெண்ணிலைவாதத்தில் சிக்கியுள்ளனர், முதலாளித்துவ வகைப்பட்ட பெண்கள் மீதான கொடுமைகளையும் சேர்த்து எதிர்ப்பவர்கள் ஏகாதிபத்திய சீரழிவுகளில் காலூன்றி நிற்கிறார்கள். இவர்கள் சோசலிச சமூகத்தில் ஆணாதிக்க கொடுமைகள் இருந்ததாக தூற்றிக் கொண்டுள்ளனர்.

  முதலாளித்துவத்தை வீழ்த்திய சோசலிச சமுதாயம் இதுவரை நிலவிய வர்க்க சமுதாயங்களை ஒழித்ததுடன் அதனுள் அடங்கிய ஆணாதிக்க சமூக கட்டமைப்பையும் ஒழித்து பெண்களை அனைத்து பிற்போக்கு மற்றும் சீரழிவு கொடுமைகளிலிருந்து விடுவித்தது. பெண்களில் பெருவாரியாக சமூக உற்பத்தியில் ஈடுபடுத்தி மட்டுமல்லாமல் அவர்கள் சிறு அடிமை உழைப்பையும் சமூக உடைமையாக்கி சமூக அந்தஸ்து கொடுத்தது சமையல் சலவை குழந்தை பராமரிப்பு போன்றவற்றை சமூக உற்பத்தியின் பிணைத்து முதலாளித்துவ
  சிறு கும்பலின் லாப நோக்கு இங்கு இல்லாததால் பெண்களே சமூகத்தில் ஒரு விலை பொருளாகவும் போகப் பொருளாகவும் ஆக்கி உற்பத்திக்கான புறவய சமூக சீரழிவை கலாச்சாரத்தை பரப்பும் அவசியம் சோசலிசம் சமூகத்தில் எழவில்லை ஆபாச சீரழிவு ஒழுக்கக் கேடுகளுக்கு அனைத்திற்க்கும் முடிவுக் கட்டப் பட்டது.
  ஆண் பெண்களுக்கு இடையிலே நிலவும் நேசமுடன் பாடு வர்க்க சமுதாயத்தில் ஆணாதிக்க சமுதாயத்தில் பகை முரணாக நிற்கிறது. அவை வர்க்கங்கள் அற்ற சோசலிஸ காலகட்டத்தில் ஆண் பெண் ஏற்றத்தாழ்வு ஒழிக்கப்பட்ட அங்கே சமத்துவமாக நடத்தப்படும். ஒற்றுமை நிலை நாட்டப் படும்.

  ஆளும் வர்க்கங்களின் அரசியல் பொருளாதார கலாச்சார ரீதியான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் உழைக்கும் மக்கள் சொல்லு நா துயரத்துக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள் இதற்கு எதிராக போராடுவதும் நமது உரிமையை உடமையை உணர்வை மீட்டெடுப்போம் தான் இன்று நம்முள்ளே பிரதான பணி இதை நாம் செய்யவேண்டிய கடமை சாதி மத பேதமின்றி தேசிய இன வேறுபாடின்றி ஆண் பெண் பேதமின்றி விவசாயி தொழிலாளி குட்டி முதலாளி கிராமத்து என்ற பாகுபாடின்றி இந்திய உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந்த கொடுமையிலிருந்து மீட்டெடுக்க முன்னணிப் படையாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமையே வழி காட்டவும் வழிநடத்த முடியாது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க