லங்கையில் இந்திய தமிழர் என்று அடிக்கிறார்கள், இங்கே இலங்கை தமிழர்கள் என்று ஒதுக்குகிறார்கள், நாங்கள் எங்கேதான் செலவது என கடலூர் அகதிகள் முகாமில் இலங்கை தமிழர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பாஜக குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுவிட்டது. இச்சட்டப்படி அகதிகளாய் வரும் முஸ்லீமக்ளுக்கும், இலங்கை அகதிகளுக்கும் குடியுரிமைச் சட்டப் பட்டியலில் இடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இலங்கை தமிழ் அகதி மக்கள் வாழ்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் மட்டும் நான்கு இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் 4000-த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

கடலூர் அகதி முகாமில் உள்ள மக்களை பிபிசி தமிழ் செய்தியாளர் சந்தித்து உரையாடுகிறார். அவரிடம் இரண்டு தலைமுறைகள் தாண்டியும் எங்களுக்கு, குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யாமல் இருப்பது வேதனை தருகிறது என்கிறார்கள்.

இந்நிலையில்தான் பாராளுமன்றத்தில் அதிமுக அடிமைகள், மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து முசுலீம்களுக்கு எதிராக மட்டுமல்ல, ஈழத்தமிழ் அகதிகள் முதுகிலும் குத்தியிருக்கிறார்கள். பாமகவும் சேர்ந்து குத்தியிருக்கிறது. தமிழ் நாட்டில் இருந்து கொண்டே இவர்கள் இப்படி இந்துத்துவ சேவை செய்து, ஆட்சியாளர்களாய் இருக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு அபாயகரமானது!

பிபிசி தமிழ்-ன் முழுக் கட்டுரையை படிக்க :
♦ CAB மசோதா குறித்து இலங்கைத் தமிழ் அகதிகள் – “எங்களுக்கு குடியுரிமை வழங்க முடியாதென்றால் கடலில் தள்ளி கொன்றுவிடுங்கள்”.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க