5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்

இந்தப் பொதுத் தேர்வுத் திட்டம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்தக் கூடிய உளவியல் சிக்கல்கள் குறித்தும், இது ஏற்படுத்தப் போகும் சமூக ரீதியான பாதிப்புகள் குறித்தும் விளக்குகிறார் வில்லவன்.

ந்தக் கல்வியாண்டு முதல் 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தவுள்ளதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கும் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப் படுவதற்கு முன்னரே, அதில் அமல்படுத்தப்படவிருக்கும் ஏழை மக்கள் விரோத நடவடிக்கைகளை தமிழகத்தை ஆளும் அடிமை அரசு நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கிறது.

பிஞ்சு வயதில் 5, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வை சந்திப்பது அவர்களது வாழ்விலும், எதிர்காலத்திலும் ஏற்படுத்தவிருக்கும் பாதிப்புகள் குறித்து மன நல ஆற்றுப்படுத்துனராக பள்ளி மாணவர்கள் மத்தியில் பணிபுரியும் வில்லவன் அவர்கள் வினவு இணையதளத்துக்கு நேர்காணல் அளித்துள்ளார்.

இந்த நேர்காணலில் இந்தப் பொதுத் தேர்வுத் திட்டம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்தக் கூடிய உளவியல் சிக்கல்கள் குறித்தும், இது ஏற்படுத்தப் போகும் சமூக ரீதியான பாதிப்புகள் குறித்தும் விளக்குகிறார். மேலும் இதன் பின்னணியில் உள்ள அரசியல் நகர்வுகளையும் விளக்குகிறார் வில்லவன்.

பாருங்கள் ! நண்பர்களுக்கும் பகிருங்கள் !

 

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க