மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் என்ற தலைப்பில் தமிழகம் தழுவிய அளவில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் பல்வேறு சமூக ஜனநாயக அமைப்புகளை இணைத்துக்கொண்டு இணையவழி ஆர்ப்பாட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், திண்ணைப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் 28.08.2020 அன்று கடலூர் மாவட்டம் பூவனூர் பகுதியில் இணையவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 3,5 மற்றும் 8 வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும், கலை அறிவியல் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் கொண்டு வரும் நுழைவுத்தேர்வை திரும்பப்பெற வேண்டும், சமஸ்கிருத இந்தித் திணிப்புக்கு எதிராகவும் கண்டன முழக்கமிட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பெரும்பான்மை மக்களுக்கு எதிராக உள்ள புதிய கல்விக் கொள்கையை முழுமையாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தோழர் கணேஷ் தலைமை வகித்தார். மேலும் இதில் தோழர் கார்த்திக், தோழர் பால்ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக் தோழர் அர்ஜுன் நன்றி உரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மக்கள் அதிகாரம் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம், பூவனூர் பகுதி இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

புமாஇமு

தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கடலூர். தொடர்புக்கு : 97888 08110

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

2 மறுமொழிகள்

  1. இந்த வேலையற்ற வீணர்களின் கூட்டம் சின்ன பிள்ளைகளை வைத்து போராட்டம் என்னும் பெயரில் ஷோ காண்பித்து வருகிறது. இதைப் பார்த்துதான் சர்வ வல்லமை மிக்க மத்திய ஆட்சியாளர்கள் பயந்து நடுங்கி கல்விக் கொள்கையை மாற்றப் போகிறார்களா? இம்மாதிரியான சில்வண்டு கும்பல்கள் தாங்கள் முட்டாள்களாக இருப்பதோடு இருப்பவர்களையும் முட்டாள்களாக ஆக்க முயற்சிக்கிறார்கள். இந்த உதயநிதி ரசிகர் மன்ற தளத்தில் பின்னூட்டங்களையும் சரியாக வெளியிடுவதே இல்லை. என்ன மீடியா சுதந்திரமோ!

  2. // நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் //

    ஆமாம் அது என்ன அது எப்போது பார்த்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஒப்பாரி வைப்பது.

    நீட் தேர்வை தாராளமாக ரத்து செய்து கொள்ளுங்கள். அனால் management quotaவை ரத்து செய்ய சொல்லி எந்த கட்டுரையும் வெளிவந்ததாக தெரியவில்லையே

    இதெல்லாம் ஒரு கட்டுரையா!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க