கொரோனா பெருந்தொற்று சமயத்தில் ஒட்டுமொத்த நாட்டிற்கும், மக்களுக்கும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திவிட்டு தனது கார்ப்பரேட் காவி பாசிச நடவடிக்கையை அமல்படுத்துகிறது பாசிச பாஜக அரசு.

அதன் ஒரு அங்கமாக புதிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளது. இதனை கிட்டத்தட்ட தனது முதல் அரசாங்கம் அமைந்த 2014-ம் ஆண்டு முதல் எப்பாடு பட்டாவது அமல்படுத்த வேண்டும் என துடிக்கிறது. ஒவ்வொரு முறையும், இதனை அமல்படுத்த முயற்சித்து தோற்றுப் போயுள்ளது. இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பல்வேறு கல்வியாளர்களும், முற்போக்காளர்களும் இந்த தேசிய கல்விக் கொள்கையை அம்பலப்படுத்தியிருப்பதைத் தொகுத்து “தேசிய கல்விக் கொள்கை 2019 –  நிராகரிக்க வேண்டும் ஏன் ?” என்ற வெளியீடு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் கொண்டுவரப்பட்டது.

இந்த வெளியீஇடு இன்று புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கும் அனைவருக்கும் சரியான பதிலடி வழங்கியுள்ளது. அதுமட்டுமல்ல போராடும் அமைப்புகளுக்கு ஒரு கருத்தாயுதமாக இச் சிறு வெளியீடு அமையும். எனவே அந்நூலின் Pdf கோப்பை உங்களுக்காக வழங்குகிறோம். படியுங்கள்… பகிருங்கள்…

மின்னூலாக தரவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

நூல் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் ?
வெளியீடு : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

அச்சு நூலாக வாங்க விரும்புவோர் கீழே உள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும் :

வெளியீடு : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
நெ-7, மாதாகோவில் நகர் முதல் தெரு, நொளம்பூர், சென்னை – 600 095.
தொலைபேசி எண் : 94451 12675
மின்னஞ்சல் : rsyfchennai@gmail.com

பக்கங்கள்: 48
விலை: ரூ 25.00