மசூதிக்கு அடியில் கோயில் : மூலக்கதை ஆர்.எஸ்.எஸ். திரைக்கதை தொல்லியல் துறை !
அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பாபர் மசூதிக்கு அடியில் நடத்தப்பட்ட அகழாய்வின் அடிப்படையில் தொல்லியல் துறை அளித்த அறிக்கையைச் சார்ந்துதான் தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
2003-ல் தொல்லியல் துறை அளித்த இந்த அறிக்கையும், அதன் அடிப்படையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் ஏன் தவறானவை என்று சன்னி வக்ஃபு வாரியத்தின் சார்பில் ஆய்வை மேற்கொண்ட சுப்ரியா வர்மா, ஜெயா மேனன் ஆகிய இரு தொல்லியல் ஆய்வாளர்கள் எகனாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லி இதழில் 2010-ம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றனர்.

மசூதிக்கு அடியில் கோயில் இருந்தது என்ற முன்முடிவுடன் தொல்லியல் துறையின் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது என்ற போதிலும், பல தொல்லியல் ஆய்வாளர்கள் அதனை அம்பலப்படுத்தாமைக்குக் காரணம் உள்ளது. இந்தியர்களோ, வெளிநாட்டவரோ இந்தியாவில் எந்த இடத்தில் அகழாய்வு நடத்த வேண்டும் என்றாலும், அதற்குத் தொல்லியல் துறையின் அனுமதி வேண்டும் என்ற காரணத்தினால்தான் பலரும் அமைதி காக்கின்றனர் என்று இவர்கள் கூறுகிறார்கள்.
“மசூதிக்கு அடியில் கோயில் இருந்தது என்று கூறுவதற்கு முக்கியமாக 3 சான்றுகளைக் காட்டுகிறது தொல்லியல் துறை. முதலாவதாக மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சுவர். மேற்குப் பகுதி சுவரைப் பார்த்துத்தான் இசுலாமியர்கள் நமாஸ் செய்வார்கள். கோயிலின் கட்டமைப்போ முற்றிலும் வேறுவிதமானது. இரண்டாவதாக, 50 தூண்களின் அடிப்பாகங்கள் காட்டப்படுகின்றன. இவை செட்டப் செய்து திணிக்கப்பட்ட ஆதாரங்கள் என்பதை நிரூபித்துப் பல புகார்களை நாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறோம்” என்கிறார் வர்மா. மூன்றாவதாகக் கட்டுமான சிதிலங்கள். இவை மசூதி இடிக்கப்பட்டபின் அங்கே போடப்பட்டவை.
1861-ல் பாபர் மசூதி அருகே முதன்முதலாக அகழ்வாய்வு நடத்தியவர் அன்றைய தொல்லியல் துறையின் இயக்குநர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம். புத்தமதத் தூண்களும், ஒரு புத்த விகாரையும் இருந்தன என்றுதான் அகழ்வாய்வு நடத்திய அவர் கூறுகிறார். அந்த வட்டாரத்தில் சில கோயில்கள் இருந்தன என்று அப்பகுதி மக்கள் கூறுவதாக அவர் பதிவு செய்திருக்கிறாரேயன்றி, அகழாய்வுச் சான்றுகள் எதுவும் கிடைத்ததாகக் குறிப்பிடவில்லை.
1969-ல் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை சார்பில் மசூதிக்கு அருகே அகழாய்வு நடத்தப்பட்டது. பண்டைக்காலத்திலும் மத்திய காலத்திலும் அந்தப் பகுதியில் மக்கள் குடியிருப்புகள் இருந்திருக்கின்றன என்றுதான் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. தற்போது நீதிமன்றம் ஆதாரமாக எடுத்துக்கொண்டிருக்கும் அகழாய்வில் மனித எலும்புக்கூடுகளும் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தத் தடயங்களையே வெளியிடாமல் மறைத்திருக்கின்றனர்.
படிக்க:
♦ காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் !
♦ குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! புதிய கலாச்சாரம் ஜனவரி 2020 வெளியீடு
“மசூதிக்கு அடியில் கோயில் இருந்ததாக அறிக்கையின் எந்த இடத்திலும் விவாதிக்கப்படவில்லை. கடைசிப் பத்தியில், வெறும் மூன்று வரிகளில் கோயில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அவர்கள் காட்டுகின்ற அதே சான்றுகளின் அடிப்படையில் பாபர் மசூதிக்கு அடியில் சிறிய மசூதிகள்தான் இருந்தன என்பதை நாங்கள் நிறுவியிருக்கிறோம்” என்கிறார்கள் சுப்ரியா வர்மா, ஜெயா மேனன் ஆகிய இரு தொல்லியல் ஆய்வாளர்கள்.
மின்னூல் :
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |