கைநாட்டுத் தமிழர்களுக்கு (1852) கல்விக்கண் திறந்த கிறிஸ்தவ நிறுவனங்களைப் பற்றி….

நண்பர்களே….

பொ.வேல்சாமி

துரைச் செந்தமிழ்ப் பத்திரிக்கையில் 1906-ல் இராஜகோபாலாச்சாரியார் என்பவர் 19-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் “பொதுக்கல்வி”யின் நிலை பற்றிய ஒரு நல்ல கட்டுரையை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் இன்றைக்குப் படித்தாலும் வியப்பளிக்கக்கூடிய பல செய்திகள் நிறைந்துள்ளன. அவற்றுள் ஒரு குறிப்பிட்ட செய்தியை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

1852-ம் ஆண்டுவாக்கில் கிறிஸ்தவ மிஷினரிமார்கள் தமிழ்நாட்டில் 1,885 கல்விநிலையங்களை நடத்தி வந்தனர். அக்கல்வி நிலையங்களில் 38,000 மாணவ மாணவிகளும் படித்து வந்தனர். இவர்களின் படிப்பு செலவுக்காக அன்றைய காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்களால் செலவிடபட்ட தொகை 40000-ம், 30000-ம் (இன்றைய கணக்கில் சொல்வதானால் 120 கோடியும், 100 கோடியும் ) செலவிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

படிக்க :
பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?
♦ கேள்வி பதில் : இந்தியாவில் கிறிஸ்தவ மதம் எப்படி காலூன்றியது ?

மற்றொரு வியப்பான செய்தி, இந்தப் பள்ளிகளில் பெரும்பாலானவை தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி பகுதிகளில்தான் இருந்தன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேகாலத்தில் இந்துமதம் சார்ந்த நிறுவனங்கள் எவ்விதமான கல்விப்பணியையும் செய்யவில்லை என்று கவலையுடன் கூறப்பட்ட குறிப்பும் உள்ளது கவனிக்கத்தக்கது. அந்த செந்தமிழ்ப் பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ள பகுதியை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

1 மறுமொழி

  1. எங்கல்துரை என்ற மீஸீணறீ நடத்திய பள்ளியில் படித்தவர் தான் நமது மொழீஞாயிறூ தேவனேயப்பாவானர்

Leave a Reply to A BENJAMIN பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க