ந்தி மொழி திணிப்பிற்கு எதிராகப் போராடி தமிழகத்தில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவை அனுசரிக்கும் விதமாக திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் கீழப்பழுவூர் சின்னசாமி,  விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் அதன் தோழமை அமைப்புகளான புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புத்தோழர்கள் நினைவஞ்சலி செலுத்தினர்.

ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர்.ஜீவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ம.க.இ.க மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் மற்றும் தோழர் கோவன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புத் தோழர்களும் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மற்றும் மாற்று கட்சி நண்பர்களும் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.

”தமிழ் மொழியின் மீதான இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டு உயிர்நீத்த தாளமுத்து – நடராசன், கீழப்பழூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் உள்ளிட்ட எண்ணற்ற தியாகிகளின் போர்க்குணத்தை நெஞ்சில் ஏந்துவோம்! தமிழ்மொழி மீது சமஸ்கிருதத்தை திணிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் காவி பாசிசத்தை முறியடிப்போம்!!” என்ற முழக்கப் பதாகையுடன் பேரணியாகச் சென்ற தோழர்கள், மொழிப்போர் தியாகிகளை உயர்த்தி பிடித்தும் இந்தியை திணிக்கும் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ். கும்பலை அம்பலப்படுத்தும் வகையிலும் தோழர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.


னவரி-25 மொழிப்போர் தியாகிகள் நாளை நினைவு கூறும் விதமாக,  ஜனவரி-24 அன்று மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் மொழிப்போர் தியாகிகளின் உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தியும், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தியும் தியாகிகளை நினைவு கூர்ந்தனர்.

அத்துடன் சம காலத்தில் மத்திய அரசின் நடவடிக்கையும் சமஸ்கிருதத் திணிப்பு, மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக தியாகிகள் போராடிய வழியில் நாமும் போராடவேண்டும் என்று உறுதியேற்றனர்.

தகவல்:
சட்டக்கல்லூரி மாணவர்கள்,
மதுரை.


படிக்க:
ஜனவரி 25 : இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா
சைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க