கொரோனா அப்டேட்ஸ் : கொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி ?

வீடு, பொது இடங்கள், மருத்துவமனைகளை சுத்தம் செய்யும் முறைகள் குறித்த பதிவு…

Isolation, Infection control ஆகிய இரண்டும் கொள்ளை நோய் தடுப்பின் இரு கண்கள் போன்றவை. இவற்றில் Isolation என்பது நோய் குறி இருப்பவர்களை உடனே தனிமைப்படுத்துவது.

Quarantine என்பது நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்படுபவர்களை அவர்களுக்கு நோய் அறிகுறி ஆரம்பிக்கும் முன்னமே தனிமைப்படுத்துவது.

சீனாவில் இருந்து இங்கு வந்த பயணிகளில் கோவிட்-19 நோய்குறி இருப்பவர்கள் அனைவரும் isolation செய்யப்பட்டிருக்கிறார்கள். அங்கு இருந்து வந்த பயணிகளில் நோய் குறி இல்லாதவர்கள் அனைவரும் quarantine செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொள்ளை நோய் தடுப்பின் மற்றொரு கண்… Infection control (தொற்றை நீக்குதல்)

கொரோனா வைரஸ் தனது மூதாதையர்களான SARS-CoV மற்றும் MERS-CoV ஐ பெரும்பாலும் ஒத்துப்போகின்றது. மேலும் இதுவும் வவ்வால் இனத்திடம் இருந்து தான் மனிதனுக்கு தாவியுள்ளது.

மேலும் 80% கொரோனா நோய் தொற்றுகள் Fomite infection எனப்படும் கைகளால் வைரஸ் தொற்றுள்ள பகுதிகளை தொடுவதாலேயும்; அந்த கிருமி பாதித்த கைகளை மூக்கு, வாய் போன்ற பகுதிகளுக்கு கொண்டு போவதாலுமே பரவுவதாக
கண்டறியப்பட்டுள்ளது. 20% கொரோனா தொற்று தான்.. நேரடியாக மற்றவர் மீது தும்முவது இருமுவது மூலம் பரவி இருக்கிறது.

சமீபத்திய ஆய்வில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 41% பேர் கொரோனா நோய் தொற்றை வூஹானின் மருத்துவமனைகளில் இருந்து பெற்றுள்ளனர். இதை Nosocomial infection என்போம்.

இதற்கு காரணம் இதோ..

கொரோனா வைரஸ் குடும்பத்தின் முந்தைய வைரஸ்களை வைத்து செய்யப்பட்ட 22 ஆராய்ச்சிகளின் சாராம்சம். உங்களுக்காக..

கொரோனா குடும்ப வைரஸ்கள் வெளி உலகில் அது இரும்பாக, பொருளாக இருக்கட்டும், கண்ணாடியாக இருக்கட்டும் அல்லது நெகிழி எனப்படும் ப்ளாஸ்டிக்காக இருக்கட்டும், குறைந்தபட்சம் 2 மணி நேரத்தில் இருந்து அதிக பட்சம் 9 நாட்கள் வரை உயிருடன் இருந்து நோயை பரப்பும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

படிக்க :
நிபா வைரஸ் – இந்தச் சாவுகளைத் தவிர்க்க முடியாதா ?
♦ கொரோனா வைரஸ் குறித்த மூடநம்பிக்கைகளும் ! உண்மைகளும் !

30 முதல் 40 டிகிரி வெப்ப நிலையில் இந்த உயிருடன் வாழ்ந்து நோய் பரப்பும் கால அளவு கனிசமான அளவு குறைகிறது. (இது தான் இந்திய தீபகற்பத்திலும் ஆப்பிரிக்காவிலும் இன்னும் கொரோனா நோய் பரவாமல் இருக்க காரணமாக இருக்கலாம்)

மேலும் 4 டிகிரி வெப்பம் கொண்ட நாடுகளில் இந்த வைரஸ் 28 நாட்கள் வரை கூட வெளிப்புறத்தில் வாழும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

கிருமிகள் வெளிப்புறத்தில் உயிரோடு அதிக நாள் இருப்பதற்கு மூன்று விசயங்கள் உதவி புரிகின்றன

1. வெப்பம்
2. ஈரப்பதம்
3. இருமல் துளியில் இருக்கும் மொத்த வைரஸ்களின் எண்ணிக்கை.

வெப்பம் குறைவாக இருந்து, ஈரப்பதம் அதிகமாக இருந்து, பல பேருக்கு ஒரே நேரத்தில் நோய் பரவினால் கொரோனா வைரஸ்க்கு கொண்டாட்டம் தான். நமது பாடு தான் திண்டாட்டம் ஆகும்.

சரி.. இப்போது நாம் முறையாக அறிவியல் பூர்வமாக எப்படி இந்த வைரஸ் தொற்றை அழிக்கலாம் என்று பார்க்கலாம்:

நமது வீடுகளில் உள்ள டாய்லெட் மற்றும் பாத்ரூம்களை கட்டாயம் ஒரு முறையேனும் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு வீட்டு பாத்ரூம்களை சுத்தம் செய்ய
நமது ப்ளீச்சிங் பவுடர் அல்லது 1% லைசால் உபயோகிக்கலாம்.

ப்ளீச்சிங் பவுடர் கரைசலை தண்ணீருடன் ஒன்றுக்கு 99 பங்கு விகிதத்தில் கலந்து பாத்ரூம் டாய்லெட்டுகளை கழுவி சுத்தம் செய்யவேண்டும்.

அதாவது 10 கிராம்/மில்லி ப்ளீச்சிங் பவுடர்/திரவத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்தால் 1% ப்ளீச்சிங் திரவம் கிடைத்து விடும். அன்றாடம் உபயோகிக்கும் சட்டை துணி மணி , பெட்ஷீட், தலையணை கவர் போன்றவற்றை டிடர்ஜெண்ட் போட்டு
துவைத்து 60-90 டிகிரி வெப்பமுள்ள நீரில் மூழ்கி எடுக்க வேண்டும்.

லைசால் (Lysol) உபயோகிக்கிறீர்கள் என்றால், வீடுகளுக்கு 1% லைசால் தேவை
(ஒரு லிட்டர் லைசாலை 49 லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம்).

மருத்துவமனைகளுக்கு 5% லைசால் தேவை (ஒரு லிட்டர் லைசாலை 9 லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம்)

பஸ் ஸ்டாண்டுகள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு
2.5% லைசால் (ஒரு லிட்டர் லைசாலை 19 லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம்)

இந்த திரவங்களை ஊற்றி குறைந்தபட்சம் பத்து நிமிடம் விட வேண்டும்.

படிக்க :
குஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை !
♦ கொரனா வைரஸ் அலர்ட் | ஃபரூக் அப்துல்லா

மருத்துவ ஊழியர்களின் கனிவான கவனத்திற்கு

மருத்துவமனை ஊழியர்கள் 7.5% பாவிடோன் ஐயோடின் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்வது நல்லது. அவ்வாறு சுத்தம் செய்கையில் கட்டாயம் 15 விநாடிகள் நேரம் எடுத்து கைகளை சுத்தம் செய்ய வேண்டும். 7.5% பாவிடோன் ஐயோடின் திரவம் 15 நொடிகளில் MERS, SARS போன்ற கொரோனா வைரஸ்களை கொல்வதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD.

2 மறுமொழிகள்

 1. வீடுகளுக்கு 1% லைசால் தேவை
  “(ஒரு லிட்டர் லைசாலை 49 லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம்).–1/49+1=1/50> 1*100/50=2%

  மருத்துவமனைகளுக்கு 5% லைசால் தேவை (ஒரு லிட்டர் லைசாலை 9 லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம்) –1*100/1+9=10%

  பஸ் ஸ்டாண்டுகள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு
  2.5% லைசால் (ஒரு லிட்டர் லைசாலை 19 லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம்) –1*100/1+19=5%”

  1% லைசாலுக்கு -1/2 லி லைசால்+49 1/2 லி தண்ணீர்
  2.5% லைசால் — 1/2 லி லைசால் +19 1/2 லி தண்ணீர்.
  5 % லைசால் —1/2 லி லைசால் + 4 1/2 லி தண்ணீர்.

  இது சரியாக இருக்கும்.நன்றி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க