பொது மருத்துவக் கட்டுமானத்தை அரசு சீரழித்து இருக்கிறது அரசு மருத்துவக் கட்டுமானத்தை அரசு சீரழித்து இருக்கிறது.முகக்கவசங்கள் இல்லை உடல் கவசங்கள் இல்லை கிருமிநாசினி இல்லை என்பதை மருத்துவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

கடைகளில் மேற்கண்ட பொருட்கள் எங்கேயுமே கையிருப்பு இல்லை இருக்கும் இடங்களில் விலையோ மிகவும் அதிகம்.

சாராய ஆலைகளில் சாராயத்தின் உற்பத்தியை நிறுத்தி அதற்கு பதில் கிருமிநாசினி தயாரிக்க உத்தரவிட்டு இருக்க வேண்டும்.

போர்க்கால அடிப்படையில் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் முக மற்றும் உடல் கவசங்களை தயாரித்து இருக்க உத்தரவிட வேண்டும். அரசு செய்யாது என்று தெரிந்தும் வேடிக்கை பார்த்திருக்க முடியாது.

மக்களுக்கும் பொது ஊழியர்களுக்கும் தேவையான முகம் மற்றும் உடல் கவசங்களையும் கிருமிநாசினியையும் வினியோகிக்க மக்கள் அதிகாரம் தயாராக இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக எதையுமே செய்ய முடியவில்லை.

எனினும் நூற்றுக்கும் மேற்பட்ட முகக் கவசங்களை தயாரித்து அதனை போக்குவரத்து காவலர்கள் காவல் நிலையம் காஞ்சிபுரம் மாவட்ட  அரசு மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு சென்று முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

படிக்க:
கோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா ?
நாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் ? | ஃபரூக் அப்துல்லா

புயல் பாதிப்பின் போது கூட பலரும் வந்து உதவினார்கள். ஆனால் இப்போது நீங்கள் மட்டுமே வந்து கொடுத்து இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி என்று மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறினார். கோடிக்கணக்கான மக்களின் உயிரை தங்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் முயற்சியில் இருக்கும் அரசு பொது மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் அர்ப்பணிப்புக்கு முன் இது சிறு துளியே.

அன்பார்ந்த மக்களே!

கோடிக்கணக்கான மக்களைக் காப்பதற்கான கட்டமைப்பு வசதி இந்த அரசிடம் இல்லை. அதை மக்களாகிய நாம்தான் செய்ய முடியும். உங்களால் முடிந்த அளவு முகக் கவசங்கள் உடல் கவசங்கள் கிருமிநாசினி போன்றவற்றை எங்களிடம் கொடுங்கள். அல்லது அதற்கான மூலப் பொருட்களை வாங்கிக் கொடுங்கள் நாங்கள் அவற்றை தயாரித்து மக்களிடமும் பொது ஊழியர்களிடமும் வினியோகிக்க தயாராகவே இருக்கிறோம்.

என்றும் மக்கள் பணியில் மக்கள் அதிகாரம்.


தகவல்:
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்,
9176801656.