பொது மருத்துவக் கட்டுமானத்தை அரசு சீரழித்து இருக்கிறது அரசு மருத்துவக் கட்டுமானத்தை அரசு சீரழித்து இருக்கிறது.முகக்கவசங்கள் இல்லை உடல் கவசங்கள் இல்லை கிருமிநாசினி இல்லை என்பதை மருத்துவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

கடைகளில் மேற்கண்ட பொருட்கள் எங்கேயுமே கையிருப்பு இல்லை இருக்கும் இடங்களில் விலையோ மிகவும் அதிகம்.

சாராய ஆலைகளில் சாராயத்தின் உற்பத்தியை நிறுத்தி அதற்கு பதில் கிருமிநாசினி தயாரிக்க உத்தரவிட்டு இருக்க வேண்டும்.

போர்க்கால அடிப்படையில் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் முக மற்றும் உடல் கவசங்களை தயாரித்து இருக்க உத்தரவிட வேண்டும். அரசு செய்யாது என்று தெரிந்தும் வேடிக்கை பார்த்திருக்க முடியாது.

மக்களுக்கும் பொது ஊழியர்களுக்கும் தேவையான முகம் மற்றும் உடல் கவசங்களையும் கிருமிநாசினியையும் வினியோகிக்க மக்கள் அதிகாரம் தயாராக இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக எதையுமே செய்ய முடியவில்லை.

எனினும் நூற்றுக்கும் மேற்பட்ட முகக் கவசங்களை தயாரித்து அதனை போக்குவரத்து காவலர்கள் காவல் நிலையம் காஞ்சிபுரம் மாவட்ட  அரசு மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு சென்று முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

படிக்க:
கோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா ?
நாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் ? | ஃபரூக் அப்துல்லா

புயல் பாதிப்பின் போது கூட பலரும் வந்து உதவினார்கள். ஆனால் இப்போது நீங்கள் மட்டுமே வந்து கொடுத்து இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி என்று மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறினார். கோடிக்கணக்கான மக்களின் உயிரை தங்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் முயற்சியில் இருக்கும் அரசு பொது மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் அர்ப்பணிப்புக்கு முன் இது சிறு துளியே.

அன்பார்ந்த மக்களே!

கோடிக்கணக்கான மக்களைக் காப்பதற்கான கட்டமைப்பு வசதி இந்த அரசிடம் இல்லை. அதை மக்களாகிய நாம்தான் செய்ய முடியும். உங்களால் முடிந்த அளவு முகக் கவசங்கள் உடல் கவசங்கள் கிருமிநாசினி போன்றவற்றை எங்களிடம் கொடுங்கள். அல்லது அதற்கான மூலப் பொருட்களை வாங்கிக் கொடுங்கள் நாங்கள் அவற்றை தயாரித்து மக்களிடமும் பொது ஊழியர்களிடமும் வினியோகிக்க தயாராகவே இருக்கிறோம்.

என்றும் மக்கள் பணியில் மக்கள் அதிகாரம்.

மக்கள் அதிகாரம்
தகவல்:
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்,
9176801656.

6 மறுமொழிகள்

 1. //// சாராய ஆலைகளில் சாராயத்தின் உற்பத்தியை நிறுத்தி அதற்கு பதில் கிருமிநாசினி தயாரிக்க உத்தரவிட்டு இருக்க வேண்டும். ////

  கிருமி நாசினி தயாரிப்பு ப்ராசஸ் தெரிந்துதான் இந்த கோரிக்கை வைக்கிறார்களா ? சாத்தியமற்றதைக் கேள் என்பது சரிதான்.. ஆனால் அறிவியல்பூர்வமாக கேட்கலாமே ?

  • சரியாகத்தானே கேட்டிருக்கிறார்கள் பிரபு. இன்று மத்திய அரசே நூறு சாராய ஆலைகளில் கிருமி நாசினிகளை உற்பத்தி செய்யச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது.

 2. இதைப் போல அனைத்து அமைப்புகளும் முன் வர வேண்டும். அதற்கு மக்கள் அதிகாரம் ஒருங்கிணைக்க வேண்டும்

 3. மக்கள் சேவையில் மக்கள் அதிகாரத்தின் முன்னெடுப்புகள் மனதிற்கு இதமளிக்கிறது. மக்கள் அதிகாரத்தின் கோரிக்கைகள் தீர்க்கமானவை. ஆள்பவர்களை கூர்மையாக சென்றடைவதாகவே கருதுகிறேன். மாநில மற்றும் மத்திய அரசுக்கள் சில கோரிக்கைகளை செயல்படுத்த முனைந்திருக்கின்றன. தனியார் மருத்துவமனைகளை தற்காலிகமாக அரசு எடுத்துக்கொள்வது, புறநகரில் உள்ள பள்ளி கல்லூரிகளை மருத்துவமனைகளாக மாற்றுவது ஆகிய கோரிக்கைகள் அழுத்தம் பெறவேண்டும்.
  மேலும் வென்டிலேட்டர் கருவிகள் இந்தியா முழுவதும் பல்லாயிரக் கணக்கில் தருவிக்க அல்லது உற்பத்தி செய்யப்பட வேண்டும். ரத்த பரிசோதனை உபகரணங்கள் பல்லாயிரக் கணக்கில் வாங்கப்பட்டு தெருவுக்கு தெரு ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். இவை போர்க்கால அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.

 4. அமைச்சர்கள் சட்டமன்றம்,பாராளுமன்றம் சென்றாலே முககவசம் அணிவிப்பு ,கிருமி நாசினி கொண்டு கைதுடைப்பு,

  அதிகாரிகள் எங்கு சென்றாலும் உடனே தெருக்கள் சுத்தமாய் மினுமினுக்கும்..

  கலெக்டர் வந்தால் போது கழிப்பிடங்கள்
  பல் விளக்கி,குளித்து பிரகாசமாகும்..

  மேட்டுக்குடி. செல்வந்தர்களின் தெருக்களில் கூட கொசுகளுக்கு நுழைய
  அனுமதி இல்லை.
  அவ்வளவு சுகாதாரம்…

  இவர்கள் குடிக்கும் தண்ணீரும்,உயர்ரக பண்ணீரும் போட்டிபோடும்
  தத்தமது சுத்தத்தில்…

  இவையெல்லாம்
  யாரால் சாத்தியம்?

  👍துப்புரவு தொழிலாளர்கள்

  எங்கு புகார் வந்தாலும்
  அங்கு அனுப்பி
  துப்புரவு பணியாளர்கள்
  உழைப்பின் மேல் நின்று
  தான்தான் சரிசெய்ததாய் பல்லிலித்து கொண்டு போஸ் கொடுத்து பெயர்வாங்கும் அரசியல்வாதிகள்,
  அதிகாரிகள்
  ஒருநாள் சாக்கடை அள்ளட்டும்
  தெரியும் சேதி..

  கொரோனா, டெங்கு, காலாரா,சார்ஸ்,மெர்ஸ்..
  எது வந்தாலும் களமாடி போராடுவது,
  துப்புரவு தொழிலாளர்கள்தான்.

  எனது,உனது,நமது..
  சுகாதாரம் காக்கும்
  போர்வீரர்கள்,
  துப்புரவு பணியாளர்கள்.

  😡 அவர்களுக்கு இல்லை
  பாதுகாப்பு 😡

  ஒரு முககவசம்,கையுறை
  கொடுக்க கூடவே வக்கில்லாத இவர்களா
  மக்களை பாதுகாக்க போகிறார்கள்?

  என்ன இல்லை, துப்புரவு தொழிலாளர்களுக்கு
  என்கிறீர்களா?

  துப்புரவு பணியாளர்களும் அரசு ஊழியர்கள் தான்.
  ஆனால்
  அவர்களுக்கு அரசு குடியிருப்பு ( கோட்ரஸ் )இல்லை.

  துப்புரவு தொழிலாளர்கள் பெரும்பான்மையினர் தாற்காலிக தொழிலாளர்கள்..
  பணி நிரந்திரம் இல்லை.

  துப்புரவு தொழிலாளர்களுக்கு என்று ஓய்வறை இல்லை, சுத்தமான குடிநீர் இல்லை,சாப்பிடும் இடம் இல்லை.(எடுத்துவந்த சாப்பாட்டை அருகாமை உணவகங்களில் கொண்டுபோய் சாப்பிடுகிறார்கள்)

  குப்பை கொட்டும் வண்டிகளில் ஆட்டு மந்தைகள் போல நெருக்கி நிற்க வைத்து
  வேலை செய்யும் இடங்களுக்கு கொண்டு சென்று கொட்ட படுகிறார்கள்..

  துப்புரவு பணியாளர்கள் வீடுகள் பெரும்பாலும் குடிசைகள்,ஓட்டு வீடுகள்தான்.
  இவற்றில் தண்ணீரும் இல்லை, கழிப்பறைகளும் இல்லை…

  துப்புரவு பணியாளர்களுக்கு தக்க மருத்துவ பரிசோதனைகள் இல்லை,
  மருத்துவ பாதுகாப்பு ஆலோசனைகள் இல்லை..

  வாய்ப்பேசி, “பேனா”வில் நாட்டை ஆண்டுகொண்டு,
  காரில் மிதந்துகொண்டு
  கை, கால், நகம்கூட அழுக்காகமல், நாட்கள் நகர்த்தும்,
  அவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்திற் கும்,
  துப்புரவு பணியாளர்களுக்கு கிடைக்கும் சம்பளத்திற் கும்,
  ரொம்ப………………… இடைவெளிதான்.

  (தற்காலிக தொழிலாளர்களின் கதை சொல்ல வேண்டுமோ?)

  ஒரு கையுறை கூட கொடுத்து துப்புரவு தொழிலாளர்களை காப்பற்றாத இவர்களா நம்மை பாதுகாப்பார்கள்?

  நல்ல வேடிக்கைதான்…

  நம்புவோம்!
  இதில் வெளியில் வந்து கைகளை கைகளை தட்ட சொல்கிறார்கள்.
  கைகளையும், தட்டிவைப்போம்…
  இல்லையென்றால் தேச துரோகியாவோம்.
  👏👏👏

 5. இந்த வைரஸ் பிரச்சனையில் இருந்து உலகம் விடுபட்ட பிறகு முதல் காரியமாக கம்யூனிஸ்ட்கள் ஏன் இப்படி செய்தார்கள் என்பது பற்றி ஐநா பாதுகாப்பு சபை விசாரணை நடத்த வேண்டும், கம்யூனிஸ்ட்கள் இப்படி ஒரு மனித விரோத செயலை செய்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல் செயல்பட விட கூடாது, சீனாவில் கம்யூனிசம் ஒழித்து கட்டிவிட்டு அங்கே ஜனநாயகம் வந்தால் தான் உலக மக்களுக்கு நம்மை கிடைக்கும். இல்லை என்றால் SARS Corona வைரஸ் என்று பல வைரஸ்களை உற்பத்தி செய்து கொண்டு இருப்பார்கள்.

  ஜனநாயகத்திற்கு மாறும் வரையில் சீனாவிற்கு எதிரான பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க