னந்த் டெல்டும்டேவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் “அவர் மீதான வழக்குக்கு போதுமான அடிப்படை (Prima facie) இருக்கிறது” என்று தள்ளுபடி செய்துள்ளது.

ஜாமீன் என்பது ஒருவர் மீதான வழக்குக்கு போதுமான அடிப்படை ஆதாரங்கள் இருக்கின்றனவா இல்லையா என்பதைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. குற்றம் நிரூபிக்கப் படாதவரை அவர் நிரபராதி என்பதே இந்திய சட்டம். எனவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் அவர் வழக்கு நடத்த ஒத்துழைப்பாரா, ஓடிவிடுவாரா, சாட்சிகளை மிரட்டிக் கலைப்பாரா என்பதையெல்லாம் அடிப்படையாக வைத்தே ஜாமீன் வழங்குவதும் வழங்க மறுப்பதும் நடக்கிறது.

Prima facie என்பதற்கு based on the first impression; accepted as correct until proved otherwise என்பதுதான் பொருள். முதல் பார்வையின் அடிப்படையில் வரும் கருத்து, இல்லையென்று நீருபிக்கப்படும் வரை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த கருத்து என்பதுதான் Prima facie. அது இறுதியானதும், முற்று முடிவானதும் அல்ல.

வழக்கு விசாரணையின் போது சாட்சிகள், நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு, குறுக்கு விசாரணை செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தனது தரப்பு ஆவணங்களையும், சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வாய்ப்பளித்த பின்பே குற்றம் நிரூபிக்கப்படும் அல்லது இல்லை என்பது இறுதியாக முடிவு செய்யப்படும்.

அதுவரை குற்றம் சாட்டப்பட்டவரை வெளியில் இருக்க அனுமதிப்பதே ஜாமீன்.

வழக்கு தொடுக்கப்பட்டு விசரணை நடத்தி முடிக்க இரண்டு ஆண்டுகளாவது ஆகிறது. அதுவரை ஒருவருக்கு ஜாமீன் வழங்கப் படாமல் சிறையில் இருந்து விட்டு பின்பு குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுதலை செய்யப்பட்டால் என்னவாவது?

எனவே டெல்டும்டே சாட்சிகளைக் கலைக்கும் பலம் உள்ளவரா, தலைமறைவாகிவிடுவாரா, என்றுதான் பார்க்க வேண்டும்.

இதில் பிரதான சாட்சியம் பிரதமரைக் கொல்ல வேண்டும் என்று அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சல். எனவே டிஜிடல் சாட்சியம்தான். அது போலீஸ் வசம் இருக்கிறது. எனவே சாட்சிகளைக் கலைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. கடந்த ஓராண்டாக இந்த வழக்கு இருக்கிறது. அவர் நாட்டை விட்டு ஓடவும் இல்லை. பிறகு என்ன?

இதெல்லாம் சட்டத்துறையோடு தொடர்புடைய எல்லோருக்கும் தெரிந்ததுதான். Unlawful Activities Prevention Act (UAPA) படி ஒருவர் மீது குற்றம் சுமத்த அடிப்படை முகாந்திரம் இருந்தால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்யலாம் என்று கூறி உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது. ஆனால் ஜாமீன் அளிக்கவும், வேறு கோணத்தில் பரிசீலிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது என்பது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

படிக்க:
♦ “வீட்டிலிருந்து குரலெழுப்புவோம் !” தமிழகம் முழுவதும் நடந்த கவன ஈர்ப்பு நிகழ்வு செய்தி – படங்கள்
♦ உங்கள் முறை வருவதற்கு முன் நீங்கள் பேசிவிடுங்கள் ! – ஆனந்த் தெல்தும்டேவின் திறந்த மடல் !

இறுதியாக இரண்டு தகவல்கள்.

  • கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 8 ஆண்டுகள் சிறையில் இருந்த சிலர் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர். இவர்களது ஜாமீன் மனு பலமுறை நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டது.
  • ஆனந்த் டெல்டும்டே வழக்கின் தாய் வழக்கான பீமா கொரேகான் வழக்கில் மராத்தா உயர்சாதியினருக்கு எதிராக சாட்சியம் அளிக்க முன்வந்த ஒரு 18 வயது இளம் பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

நன்றி : ஃபேஸ்புக்கில் இரா. முருகவேள் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க