புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பாக கொரோனா ஊரடங்கு பாதிப்பில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.15,000/- நிவாரணம் வழங்கு! ஆட்டோக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்!
மீண்டும் ஆட்டோக்களை பழுது பார்த்து இயக்க ரூ.10,000/- வழங்கு! என்பன
உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

ஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்க தலைவர் தோழர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர், உதவித்தலைவர் தோழர் சுந்தரராசு ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க மாவட்ட ஆட்சியரகம் நோக்கி ஊர்வலமாக வந்தவர்களை, காவல்துறையினர் மெயின் ரோட்டிலேயே மறித்து “4 பேர் மட்டும் செல்லுங்கள் மற்றவர்கள் ஓரமாக நில்லுங்கள் !” என தடுத்தார்கள்.

ஆட்சியரக வாயிலிலேயே கொளுத்தும் வெயிலில் பெண்கள், குழந்தைகளுடன் என அமர்ந்து போராட்டம் நடத்தவே… காவல்துறை உள்ளே செல்ல அனுதித்து, “10 தோழர்கள் மட்டும் ஆட்சியரிடம் பேச வாருங்கள்…” என அழைத்து சென்றனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நிர்வாகிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
“அரசின் உத்தரவை பெற்று விரைவில் தீர்வு காண்பதாகவும், மாவட்ட நிதியிலிருந்து நிவாரணம் தர ஏற்பாடு செய்வதாகவும்,” மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

மக்கள் அதிகாரம், ம.க.இ.க., புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்விற்கு  ஆதரவளித்தனர்.

இறுதியாக சங்கத் தோழர்களுக்கு செயலர் மணலிதாஸ் நன்றி கூறினார்.

தகவல் :
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கம்
இணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி. தொடர்புக்கு : 97916 92512.

3 மறுமொழிகள்

  1. 1.5 கிலோமீட்டருக்கு 40 ரூபாய் வாஙுகும் அடாவடி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு
    நிவாரணம் எதற்கு? கொள்ளையடித்த காசில் சாப்பிட்டஃடும். இவர்கள் கொள்ளையடித்த்து யாரை? நடுத்தர கீழ்தட்டு மனிதர்களை. கோயம்பேட்டிலிருந்து
    ஆலந்தூர் வர 350 ரூ கேட்கும் இவர்களுக்கு ஈவிரக்கம் காட்டுவது பாம்புக்குப்
    பால் ஊற்றி வளர்ப்பது போல. கார்ப்பரேட் கிரிமினல்கள் கோடிகளில் கொள்ளையடிக்கிறார்கள். அதனால் இவர்களும் கொள்ளையடிக்கலாமென்பது
    விதண்டாவாதம். மற்ற மாநிலங்களில் ஆட்டோக்கள் சும்மா நிற்பதில்லை.
    ஷார் ஆட்டோபோல் பட்பட் என்ற பேரில் ஓட்டிக்கொண்டே யிருப்பார்கள்.
    மற்ற மாநிலங்களில் பஸ் கட்டணத்துக்கும் ஆட்டோ கட்டணத்துக்கும் 1;1.8 விகிதாசாரமிருக்கும். தமிழ்நாட்டில் 1;500 விகிதாசாரம். வடநாட்டிலும் பெட்ரோல் ஏறக்குறைய அதே விலைதான் விற்கிறது. இவர்களுக்கு மட்டும்
    பெட்ரோல் விலை அதிகமா? ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஈவிரக்கமே காட்டக்கூடாது. ஓலா ஆட்டோ ஓட்டுநர்கள் எப்படி ஓரளவு நியாயமான கட்டணத்தில் ஓட்டுகிறார்கள்

  2. நண்பர் சத்யநாத்தின் கூற்று கசப்பான உண்மைதான். குறிப்பாக சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகாலையில் நகருக்கு புதிதாக மாநிலத்தின் கடைக்கோடி ஊர்களில் இருந்து வரும் மக்களிடம் நடந்துகொள்ளும் முறை ஈவு இரக்கமற்ற வழிப்பறி கொள்ளைக்காரர்களின் நடவடிக்கை போலிருக்கும். இதுமட்டுமின்றி கான்ட்ராக்ட் தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தும் நிரந்தர தொழிலாளர்கள், மக்களை புழுக்களாக நடத்தும் அரசு பேருந்து ஊழியர்கள், அரசு பணியாளர்கள், ரேசன் கடை ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். (காவல்துறையை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் எப்போதும் ஸ்பெஷல்தான்). நடுத்தரவர்க்க மக்களை கம்யூனிசம் என்றால் முகம் சுழிக்க வைப்பது இவர்கள்தான். இந்த பண்பாட்டு இழிநிலையை மாற்றுவதற்கான (குறிப்பான) செயல்திட்டத்தை தோழர்கள் விளக்கினால் நன்று..!
    மக்களிடம் சிறப்பாக நடந்துகொள்ளும் கேரளா, பெங்களூர் மற்றும் மும்பை ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் செயல்பாடுகளில் கூட சமீபகாலங்களில் மாற்றம் நடைபெற்று வருகிறது.

Leave a Reply to KKN பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க