டந்த மே மாதம் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் ஐந்தாவது கொதிகலன் வெடித்து ஐந்து தொழிலாளர்களின் உயிரைக் காவு வாங்கியது என்.எல்.சி. இப்போது ஒரு மாதம் கூட ஆகவில்லை தற்போது அதே இரண்டாம் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து சம்பவ இடத்திலேயே எட்டுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்து போய் உள்ளார்கள்.

இறந்தவர்களும் உயிருக்கு போராடுபவர்களும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள். மேலும் எட்டு பேருக்கும் மேல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். காலாவதியாகிப் போன கொதிகலன்களை மறுநிர்மாணம் செய்யாமல் விட்டதன் விளைவுதான் இந்தப் படுகொலை. அனுபவமிக்க தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தாமல் வந்ததன் விளைவுதான் இந்தப் படுகொலை. அனுபவமற்ற வட இந்திய அதிகாரிகளை பணியில் அமர்த்தி அவர்களின் அலட்சியத்தால் ஏற்பட்டதே இந்த கொடூர கொலை.

மொத்தத்தில் ஒரு பொதுத்துறையை தனியார்மயத்திற்கு ஆதரவாக மாற்றும் நிகழ்ச்சிப் போக்கில்தான் இப்படுகொலை நடந்திருக்கிறது.

படிக்க:
கொரோனா லாக்டவுன் : மனு கொடுத்தா தான் மாத்திரையே கிடைக்குது !
♦ சாத்தான்குளம் படுகொலை – ஆதாரங்கள் இருக்க சிபிஐ விசாரணை எதற்கு ?

 

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.
தொடர்புக்கு : 81108 15963.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க