யார் இந்த மாரிதாஸ் ? | காணொளி

வொயிட் போர்ட், எக்சல் ஷீட், எக்கோ வாய்ஸ், ஃபேக் நியூஸ் புகழ் மாரிதாஸ்... யார் இவர், இவரை இயக்குவது யார்... தெரிந்து கொள்ள பாருங்கள் இந்த காணொளியை...

மிழ் ஊடகங்களில் காவிகளைப் புகுத்தும் வேலைக்காக அடியாளாக செயல்பட்டவர் மாரிதாஸ். அதுமட்டுமல்லாது தொடர்ந்து தனது பேச்சில் பெரியாரையும், மார்க்சியத்தையும் வசைமாறி பொழிவதும், பொய்களை சத்தமாக பேசுவதும், புள்ளிவிவரம் என்று எக்சல் ஷீட்டை வைத்து பிதற்றுவதும் அவரது வழக்கம். தமிழகத்தின் ‘சிறந்த ஊடகவியலாளர்’ என பொறுக்கி நித்தியானந்தா வாயால் ஆசி பெற்றதிலிருந்தே இவரது மாகத்மியத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

இவர் தமிழக ஊடகங்களில் பெரியாரிய கொள்கைகள் மற்றும் இடதுசாரி கொள்கை கொண்டவர்கள் ஊடுருவி தங்கள் கருத்துக்களைப் புகுத்துகின்றனர் என பிதற்றினார். அத்துடன் நிற்காமல் ஊடகவியலாளர்களது குடும்ப விவரங்களை வெளியிட்டு அவதூறு பரப்பினார். இந்நிலையில் இந்த மாரிதாஸ் யார் என பலரும் சமூக வலைதளங்களில் அவரைப் பற்றியும்; அவரது பேச்சில் உள்ள பொய்களையும், அவதூறுகளையும் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் Surya Xavier என்ற யூடியூப் சேனலில் மாரிதாஸ் யார்? அடுக்கடுக்கான ஆதாரங்களுடன்… என ஒரு காணொளி வெளியாகியுள்ளது. இதில் தோழர் சேவியர் மாரிதாஸின் மொத்த விவரங்களையும் புட்டு வைக்கிறார். பாருங்கள்… பகிருங்கள்…

நன்றி : Surya Xavier.

disclaimer

10 மறுமொழிகள்

 1. ஊழலும் குடும்ப வாரிசு அரசியலும் அராஜகங்களும் இருக்கும் வரை ஆர்எஸ்எஸ் வளர்ச்சியை தமிழகத்தில் தடுக்க முடியாது. மாரிதாசை குறை சொல்லி பயனில்லை. இவர் மாதிரி இன்னும் பலர் களத்துக்கு வந்து தாக்குதல் கொடுப்பார்கள். ஆர்எஸ்எஸ் தோல்வியால் தளராமல் உழைக்கும் இயக்கம். திமுகவை கருணாநிதி குடும்பத்தின் பிடியிலிருந்து மீட்டு எடுக்க யாராவது முன் வர வேண்டும்.

  • //ஆர்எஸ்எஸ் தோல்வியால் தளராமல் உழைக்கும் இயக்கம். //
   வாரே.. வாஹ்..! சாவார்க்கர் போன்றோர் உழைத்த கடும் உழைப்பு பெரியஸ்வாமியின் மனதை கவர்ந்துவிட்டது போல..!

   • நிச்சயமாக. மற்ற அரசியல் கட்சிகளுக்கு அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. ஹதோல்வியை கண்டு துவளாமல் உழைத்ததால் தான் 1983இல் வெறும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தவர்கள் இரண்டாவது முறையாக தனிப்பட்ட மெஜாரிட்டியுடன் ஆளுங்கட்சியாக கோலோச்சுகிறார்கள். இன்றைக்கு திருமணமே செய்து கொள்ளாமல் சித்தாந்தம் மட்டுமே பெரிது என நினைத்து வேலை செய்யக்கூடிய ஆட்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் திமுகவுக்கும் அப்படிப்பட்ட ஆட்கள் இருந்தார்கள்.. எதிரிகளிடமும் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது கார்த்திகேயலு. அது சரி. எதற்காக எப்போது பார்த்தாலும் பின்னூட்டத்தில் “வாரே வாஹ் வாரே வாஹ்” என வட இந்திய ஸ்டைலில் எல்லாம் தெரிந்த மாதிரி கூவுகிறீர்கள் கார்த்திகேயலு.

    • உங்களைப்போல் எங்களுக்கு மூளை பிதுங்கி வழியவில்லையென்றாலும் எப்படி சிந்திப்பது என்பதை தந்தை பெரியார் போன்றோர் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். பார்ப்பனியம் தனது மேலாண்மையை பாதுகாக்க நயவஞ்சகம், துரோகம், அடக்குமுறை போன்ற ஈன வழிமுறைகளை கையாளுவதிலிருந்து அவர்களிடம் கற்றுக்கொள்ள எங்களுக்கு அவசியமில்லை. எங்கள் விடுதலைக்கான உற்சாகத்தையும் உத்திகளையும் கைகொள்ளுவதற்கும்
     உங்களைப்போன்ற கோடாரிகாம்புகளை அடையாளம் காணுவதற்கும் எங்களுக்கு எதிகளிடமிருந்து படிப்பினைகள் அவசியமில்லை.
     நிறைவாக, ‘லு’ வாகவோ, ‘றீ’ யாகவோ இருப்பது ‘ஜீ’ யாக மாறாதவரையில் குற்றமில்லை.

     • உங்களுடைய பதிவை படிக்கும்போது ரொம்ப உருக்கமாக இருக்கிறது கார்த்திகேயலு. நீங்கள் ரொம்ப யோக்கியம் தான் போங்கள். அது சரி. பெரியாருக்கு யுனெஸ்கோ விருது கொடுக்கப்பட்டது குறித்தும் அவருக்கு வைக்கம் வீரர் பட்டம் வழங்கப்பட்டது குறித்தும் மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை மாரிதாஸ் முன்வைத்திருக்கிறார். அதுவும் ஆதாரங்கள் கொண்டு. இதற்கு உங்கள் நேர்மையான பதில் என்ன? அசிங்கமாக இல்லை?. இந்திய துணைக்கண்டத்தில் உருவான மிகப்பெரிய சீர்திருத்தவாதிகளில் ஒருவர் அவருக்கு வேண்டப்பட்டவர்களாலேயே சுயநலத்துக்காக அசிங்கப்படுத்த பட்டிருக்கிறார். பெரியார் விருது ஏதாவது கேட்டாரா? இல்லை. வைக்கம் போராட்டத்தில் பங்கு எடுத்ததற்காக ஏதாவது பட்டம் கிட்டம் கேட்டாரா? இல்லை. கருணாநிதியும் வீரமணியும் தங்கள் சுயநலத்திற்காக அவருடைய பெயரை எப்படி எல்லாம் கெடுத்து விட்டார்கள். இப்போது அது வந்து முட்டுச் சந்தில் நாறி கொண்டு இருக்கிறது. திராவிட இயக்கம் பெரியார், அண்ணாவோடு முடிந்துவிட்டது. மேற்படி கருணாநிதி, வீரமணி ஆகியோரிடம் நீங்கள் திராவிட ட்ரெய்னிங் எடுத்திருக்கிறீர்கள் போல.

      • உங்களைப் போன்ற அரை சங்கிகளுக்கு பதிலளிப்பதே நேரவிரயம்..! இதில் நீங்கள் வக்காலத்து வாங்கும் அந்த பொறுக்கிப்பயலுக்கு பதிலளிக்க சொல்கிறீர்கள். ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுத கதையா இருக்கு…!

       • கேட்கிற கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்ல துப்பில்லை. இதில் அரை சங்கி முக்கால் சங்கி என புலம்பல் வேறு. இரண்டு பித்தலாட்டங்கள் கடந்த நாற்பது ஆண்டு காலமாக தொடர்ந்து திட்டமிட்டு பரப்பப்பட்டு வந்துள்ளன. பாடப்புத்தகத்திலும் சேர்க்கப்பட்டு சர்வீஸ் கமிஷன் தேர்வுகளிலும் கேட்கப்பட்டுள்ளன. இந்த வீரமணி என்னும் ஜென்மம் ஒரு புத்தகம் வேறு எழுதி லட்சக் கணக்கில் காசு பார்த்திருக்கிறது. இதைக் கேட்டால் அரை சங்கி என வசை.. உம்மை கார்த்திகேயலு என அழைப்பதில் தப்பே இல்லை. கருணாநிதிலுவும் வீரமணிலுவும் செய்த பித்தலாட்டத்திற்குச் கார்த்திகேயலு————-

 2. (எனக்கு சமூக வலைத்தளம் மூலம் வந்ததை அப்படியே கீழே பதிவிடுகிறேன்)

  உங்களில் யாருக்காவது Tamilnadu Young Thinkers Forum என்ற அமைப்புப் பற்றி தெரியுமா? தெரியவில்லை என்றால், தயவுசெய்து கூகுளில் தேடுங்கள். பல அதிர்ச்சிகரமான வலைப்பின்னல்களை அறிந்து கொள்ளலாம்.

  இது ஆர்.எஸ்.எஸ்-ன் மறைமுக அமைப்பு. இப்போது யாரெல்லாம் வலதுசாரி அரசியல் கருத்துக்களைச் சமூக ஊடகங்களில் பரப்புகிறார்களோ.. மாரிதாஸ் முதல் பத்ரி சேஷாத்ரி வரை, ரங்கராஜ் முதல் ஷ்யாம் சேகர் வரை… இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் புள்ளி இதுதான். தமிழக வலது அரசியல் போக்குகளின் aggregator இந்த அமைப்பு. Young Thinkers Forum–> Swarajya –> RSS – என்று இந்த வலைப்பின்னல் போகிறது.

  2016-ல் தமிழ்நாட்டில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. அந்தத் தொடக்க விழாவில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ், ஆர்.எஸ்.எஸ். இணைப் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸபலே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஹோஸபலே, ‘அறிவுத்துறையில் நமக்கான போர் வீரர்களை உருவாக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். இதைத்தான் இந்த அமைப்பு செய்து வருகிறது.

  2017 நவம்பரில் இந்த அமைப்பு மைலாப்பூரில் Social media conclave ஒன்றை நடத்தியது. இதைத் தொடங்கி வைத்தவர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நீண்ட காலத் தொடர்பு உள்ளவர் என்பதை இணைந்து புரிந்துகொள்ள வேண்டும். இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விருந்தினர் பட்டியல் இன்னும் சுவாரஸ்யமானது.

  தந்தி டி.வி.யின் அசோக வர்ஷினி, The news minute இணைய தளத்தின் founder editor தன்யா ராஜேந்திரன், பாடகி சின்மயி, டி.வி.விவாதங்களில் கலந்துகொள்ளும் ஷ்யாம் சேகர், சுமந்த் சி.ராமன், பானு கோம்ஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

  இதில் பேசிய, ’ஸ்வராஜ்யா’ இணைய தளத்தின் ஆசிரியர் பிரசன்னா வெங்கடேசன் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படையாகப் பேசினார்.

  ‘’தமிழ் சமூக ஊடகத்தில் இடது சிந்தனை அதிகமாக உள்ளது. இது தொழிற்துறை வளர்ச்சிக்கு எதிரான போக்கை வளர்க்கிறது. நியூட்ரினோ, ஹைட்ரோஹார்பன் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் எதிர்க்கும் போக்கு உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் உந்துதலால், தமிழ்நாட்டை ஒரு எதிர்ப்பு மாநிலமாக மாற்ற முயல்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சாதி இலக்கு வைத்துத் தாக்கப்படுகிறது. இந்து ஃபோபியா வளர்த்து விடப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்’’ என்று தங்கள் நோக்கத்தைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். சுருங்கச் சொன்னால் அறிவுத்துறையில் வலதுசாரிப் போக்கை வளர்த்தெடுப்பது இந்த அமைப்பின் ஒற்றை நோக்கம்.

  இதன் செயல்பாடுகளைத் தேடிப் படித்தால் ஷ்யாம் சேகர், மாரிதாஸ், பத்ரி சேஷாத்ரி, ரெங்கராஜ் (Ex. தந்தி டி.வி) போன்றவர்கள் இதன் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருவதை அறிய முடிகிறது. இவர்கள் நடத்தும் கூட்டங்களில் பெரிய கூட்டம் இல்லை. 30 பேர், 50 பேர் வருகிறார்கள். இந்த Young Thinkers Forum-ன் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பெரிய அளவுக்கு ஃபாலோயர்ஸ் இல்லை. இருப்பினும் பத்ரி,ஷியாம் சேகர் போன்றோர் இதன் நிகழ்ச்சிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தந்து கலந்து கொள்கிறார்கள்.

  மாரிதாஸ் என்ற நபர், ‘நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்?’ என்ற புத்தகத்தின் வழியேதான் இங்கு அறிமுகம் செய்யப்படுகிறார். அதற்கு முன்னால் இந்தப் பெயரைக் கூட யாரும் கேள்விப்பட்டதில்லை. அந்தப் புத்தகத்தைத் தன்னுடைய கிழக்குப் பதிப்பகம் மூலம் வெளியிட்டவர் பத்ரி சேஷாத்ரி. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிப் பேசியவர்களில் ஒருவர் கே.டி.ராகவன். புத்தகம் போடும் அஜண்டா பத்ரிக்கு… வாழ்த்திப் பேசும் டார்கெட் ராகவனுக்கு. வதந்தி பரப்பும் அஜண்டா மாரிதாஸுக்கு. ஆகவே, மாரிதாஸை மட்டுமல்ல.. இந்த லார்டு லபக்கு தாஸ்களையும் நாம் இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

  மேலும், இந்த Young Thinkers Forum- ஆனது, இளையோர் நாடாளுமன்றம் என்ற பெயரில் பள்ளி மாணவர் களுக்குள் ஊடுருவிச் செல்வது, பட்ஜெட் கொள்கை விளக்கக் கூட்டங்கள், கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மீதான கூட்டம் என பரந்த வரையறையில் ஒரு கருத்துருவாக்க வேலையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் ‘அம்பேத்கர் – ராமானுஜாச்சார்யா விருதுகள்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவினருக்கு விருதுகளையும் வழங்கி வருகிறது. ’கக்கன் வாழ்நாள் சாதனையாளர் விருது’ என்ற பெயரில் மற்றொரு விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

  இந்த Young Thinkers Forum-ஐ இந்தியா முழுவதும் நடத்தி வருவது ‘இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற ஆர்.எஸ்.எஸ். சார்பு கொண்ட அமைப்பு. இந்த இந்தியா ஃபவுண்டேஷனின் ஆலோசகர்களாகச் செயல்பட்டு வருவோரில் முக்கியமானவர்கள் நிர்மலா சீத்தாராமன், ஆர்.எஸ்.எஸ். தேசியச் செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்டோர்.

  இதைப் போலவே, ‘விவேகானந்தா இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷன்’ என்ற மற்றொரு Forum வழியேயும் இதே வேலையைச் செய்து வருகின்றனர். இதன் ஆலோசகர் களில் ஒருவர் குருமூர்த்தி. இந்த அமைப்பு வழியாகத்தான் 2011-ல் ‘ஊழலுக்கு எதிரான பொது மேடை’ என அன்னா ஹசாரே முன் நிறுத்தப்பட்டார். அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளே வந்தார். சுப்ரமணியன் சாமி, கிரண் பேடி என்று பலர் அதில் அணி திரண்டனர். ஊழல் மட்டுமே நாட்டின் முதன்மை ப் பிரச்சனை என்ற பிரச்சாரம் நாடு முழுவதும் முடுக்கி விடப்பட்டு பா.ஜ.க. ஆட்சியையும் பிடித்தது.

  தற்போது இவர்கள் தென்னிந்திய ஊடகங்களை, குறிப்பாக சமூக ஊடகத்தை manipulate செய்யும் வேலைத் திட்டத்துடன் களம் இறங்கியுள்ளனர். ஏனெனில் பாரம்பரிய ஊடகங்கள் ஏற்கெனவே அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. சமூக ஊடகம்தான் சவாலானதாக இருக்கிறது என்பதால் அதைக் குறி வைத்துள்ளனர்.

  இதற்கான அடியாள் படையில் மாரிதாஸ், ரெங்கராஜ் போன்றோர் முன்னே நிற்பவர்கள் என்றால், பத்ரி சேஷாத்ரி, ஷ்யாம் சேகர், பானு கோம்ஸ் போன்றோர் பின்னால் நிற்கிறார்கள். மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் இவர்கள் செயல்படுகின்றனர். இப்போதே எச்சரிக்கை அடைந்து வினையாற்றவில்லை என்றால் எதிர்காலத்தில் விளைவுகள் மோசமாக இருக்கும்.

  நாம் பெரியார் மண், பெரியார் மண் என்று வாய்ப் பேச்சில் மட்டும் சொல்லிக்கொண்டிருக்க, அவர்கள் அந்த மண்ணுக்கும் கீழாகக் குழி பறித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இதை முதலில் உணர வேண்டும்.

 3. (Paid news) நிருபர்கள் வாழ்நிலை அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான இயங்கியல் தன்மை மற்றும் பொருளாதார ரீதியாக மனநிறைவு அடையா தாக்கம், இவற்றோடு தங்களை முன்னிலைப்படுத்த சமூக சிந்தனையை மறக்கும் செயல்களை அறிவியல் அற்றப் போக்கில் சார்ந்த துறை எதார்த்தத்திர்க்கு பங்கம் விளைவிப்பது மெய்ஞ்ஞான உளவியல் ஊனப்படுவது போன்ற பத்திரிக்கைத் துறையின் வாடிக்கை வழக்கமாய் வரலாறு உணர்த்துகிறது…!!! உலகமயமாக்கல் டிஜிட்டல் உலகில் நானோ தொழில்நுட்பத்தில் நாட்டமுள்ள சமூக சூழலில் அனைத்தும் கவனத்தை திசை திருப்பும் செல்லாக்காசுகளே என அறிதல் வேண்டும்…!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க