ஒருவர் செய்த குற்றத்துக்கு பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தை குற்றம் சொல்ல முடியுமா ?

பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் உருவில் இருக்கும் பொறுக்கி ராஜகோபாலன் செய்த கிரிமினில்தனம் அம்பலமாகிவிட்டது. அதைத் தொடந்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பலரும் சமூக வலைத்தளங்களில் சரியான வகையில் அம்பலப்படுத்தி எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

படிக்க :
♦ பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!
♦ பத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை!

இப்பிரச்சனை பெரிய அளவில் வெடித்ததால் பல பார்ப்பன அல்லது பார்ப்பன அடிவருடி கும்பல்களும் ஜோதியில் கலந்துக் கொண்டு, “அந்த ஆசிரியர் மீது கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே “ஒருவர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த பள்ளி நிர்வாகத்தையே குற்றவாளியாக்க முடியுமா? ஒரு ஆசிரியர் செய்த தவறுக்கு நிர்வாகம் எப்படி பொறுப்பேற்க முடியும்? ஒசாமா பின்லேடன் தப்பு செய்தார் என்பதற்காக ஒட்டுமொத்த தேசத்தையே குற்றம் சுமத்த முடியுமா?” என்றெல்லாம் தர்க்க நியாயம் பேசுகிறார்கள். இவர்கள் பேசுவதில் ஏதோ நியாயம் இருப்பது போல் கூட தோன்றலாம். ஆனாலும், இந்த பிரச்சனைக்கு அப்பால் சென்று பார்த்தால்தான் இவர்களின் வேசத்தை கலைக்க முடியும்.

ராஜகோபாலன் இவ்வாறு பொறுக்கித்தனத்தை செய்ய துணிச்சல் கொடுத்தது எது? எங்கிருந்து இவர்களுக்கு இவ்வளவு திமிர்தனம் வந்தது? இந்தக் கிரிமினல் தனத்தை தொடர்ந்து செய்ய எங்கிருந்து ஊக்கம் கிடைக்கிறது? இவையே நாம் சிந்திக்க வேண்டிய கேள்விகள்.

  1. பெண் பத்திரிகையாளர்கள் பற்றி மிகவம் தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகர் மீது புகார் தெரிவித்தும், பல போராட்டங்கள் நடத்தியும், சமூக வலைத்தளங்களில் கடுமையாக அம்பலப்படுத்தப்பட்டும், தலைமறைவு என்ற பெயரில் தமிழக போலீசு பாதுகாப்பிலேயே ஊர்சுற்றி வந்தார். இன்றுவரை கைது செய்யப்படவில்லை.
  2. எச்.ராஜா பற்றி கேட்கவே வேண்டாம். அவர் பேசிய எல்லாவற்றிற்கும் சிறையில் பிடித்து தள்ளியிருக்க வேண்டும். பலமுறை குண்டர் சட்டத்தில் கைது செய்த சிறையில் அடைத்திருக்க வேண்டும். “ஹைகோர்ட்டாவது மயிராவது” என்று அவர் சொல்லியதை உண்மை என நிரூபிக்கும் விதமாகவே அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் மற்றும் அரசின் செயல்பாடுகள் அமைந்தன. இன்று வரை சட்டத்துக்குப் புறம்பாக காலித்தனமாக பேசிக் கொண்டு திரிகிறார் எச்.ராஜா.
  3. தஞ்சையில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை திருட்டுத்தனமாக ஆக்கிரமித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கட்டப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றனத்தில் வழக்கு தொடுத்தது. 2018 அக்டோபர் 3-ம் தேதிக்குள் அந்த இடத்தை பல்கலைக்கழக நிர்வாகம் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவு சென்ற அ.தி.மு.க ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. அதை அன்று எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்தார். இன்று முதலமைச்சர் ஆனப் பிறகும் கூட அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பின்னரும், ஆர்.எஸ்.எஸ். கிரிமினல் கும்பலின் சாகா பயிற்சி வகுப்புகள் சாஸ்திரா பல்கலைக் கழக வளாகத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உயர்நீதிமன்றம், இடத்தைக் காலி செய்ய உத்தரவிட்ட தீர்ப்பிற்குப் பிறகுதான் அப்பல்கலைக்கழகம் நுழைவாயில் முன் அமைந்துள்ள திருச்சி – தஞ்சை புறவழிச்சாலையை நடந்து கடப்பதற்குறிய over bridge கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது என்பதுதான் கொடுமையின் உச்சகட்டம். “எங்களை ஒன்றும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது” என்று திமிராக இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது சாஸ்த்ரா நிர்வாகம்.
  4. இதே PSBB பள்ளியில் 2012-ல் நான்காம் வகுப்பு படித்த ரஞ்சன் என்ற சிறுவன் நீச்சல் பயிற்சி பெறும் போது பள்ளி நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தான். இதற்கு உடற்கல்வி ஆசிரியர், நீச்சல்குளப் பொறுப்பாளர், துப்பரவு பணியாளர் கைதுசெய்யப்பட்டு பெயிலில் விடப்பட்டனர். ஆனால், அப்பள்ளி நிர்வாகி ஓய்.ஜி.ராஜலட்சுமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை (அந்த காலகட்டத்தில் சென்னையில் உள்ள ஜியோன் பள்ளியின் பேருந்தில் பயணிக்கும் போது பேருந்தில் இருந்த ஓட்டையில் ஸ்ருதி என்ற மாணவி விழுந்து இறந்தாள். அதற்கு அப்பள்ளி நிர்வாகி விஜயன் கைது செய்யப்பட்டார் என்பது கவனிக்கதக்கது)

இன்னும் இதுபோன்ற பல்வேறு உதாரணங்கள் நம் கண்முன்னால் கிடக்கின்றன. ஒருவன் ஒரு குற்றத்தை செய்தால் அந்த குற்றம் செய்வதற்கான அடிப்படையை கண்டறிந்து அதை ஒழித்துக்கட்ட வேண்டும். “பிராமணன் எத்தகைய குற்றங்களை இழைத்தவனாயினும் அவனுக்கு மரணதண்டனை விதிக்கக் கூடாது. அவனது செல்வத்தையும் பறிக்கக் கூடாது. அவன், தன் செல்வத்தை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறச் செய்ய வேண்டும்” என்று மனுநீதியில் இருப்பதற்கு ஏற்பதான் அரசும், நீதிமன்றங்களும் செயல்படுகின்றன என்பதற்கு மேலே பட்டியலிட்டுள்ள உதாரணங்களே சான்று.

பள்ளியில் படிக்கும் மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட கிரிமினலை பல ஆண்டுகாலமாக பாதுகாத்த நிர்வாகத்தை புனிதர்கள் என்று தலையில் வைத்துக் கொண்டாட முடியுமா ? சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னர், சென்னை ஐ.ஐ.டியில் படித்த பாத்திமா லத்தீஃப் என்ற மாணவி சுதர்சன் எனும் பார்ப்பன பேராசிரியரால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு மரணமடைந்ததை மறக்க முடியுமா ? அந்தக் கிரிமினலுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைத்ததை எப்படிப் புரிந்து கொள்வது?

எவ்வளவு செய்தாலும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் நினைப்பதற்கு ஏற்ப அரசு மற்றும் சமூகக் கட்டமைப்பு இருப்பதால்தான் எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் தவறு செய்கின்றனர். பார்ப்பனிய சித்தாந்தத்தை எதிர்த்து நாம் போராட வேண்டியுள்ளது.

படிக்க :
♦ மோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்
♦ சிறுமி ஸ்ருதி படுகொலை: விரிவான ஆய்வறிக்கை!

ஆணாதிக்கம், ஏகாதிபத்தியங்கள் பரப்பும் ஆபாச நுகர்வுவெறி கலாச்சாரமெல்லாம் காரணமில்லையா என கேட்கலாம். எல்லாம் ஒருங்கிணைந்ததுதான் என்றாலும், குற்றவாளிகள் தப்பிப்பதற்கு அடிப்படையாக இருப்பதும், இந்த பிரச்சினையில் குறிப்பாக வெளிப்படுவதும் பார்ப்பன மேட்டிமை திமிர்தனமே தவிர வேறல்ல.


மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க