அய்.ஏ.எஸ்.சும், ஐ.பி.எஸ்.சும்
அதிகார வர்க்கமும் , அமைச்சர்களும்
பயணப்பட்டு,
அவமானப்பட்ட கல்லூரிச் சாலையே!
இனி நீ பெருமைப்படலாம்
கல்வி தனியார்மயத்திற்கெதிராக போராடிய
பு.மா.இ.மு. தோழர்களின்
போராட்டப் பாதங்களை முத்தமிட்டதால்!
தமிழகமே! தலை நிமிரலாம்
ஜெயாவின் போலிஸ் வெறியை
நடுரோட்டில் நடுங்காமல் சந்தித்த
பு.மா.இ.மு. வின் போர்க்குணத்தால்,
அடிக்கும்போதும், இழுக்கும்போதும்
துடிக்கும் உதடுகள் பொழிந்த முழக்கம்
தமிழக வானில்.. தனியார்மயத்திற்கெதிராக
திரும்பத் திரும்ப எதிரொலிக்கும்..
முற்றுகை சட்டவிரோதமாம்
தன் பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு
தங்கமோதிரம் அணிவித்து தம்பட்டமடிக்க
வீணாய் பிறந்த விஜய்
எழும்பூர் மருத்துவமனையை முற்றுகையிட்டபோது
எங்கே போனது உனது சட்டம் – ஒழுங்கு!
பிறந்த குழந்தைக்கு
தாய்ப்பால் கொடுக்கவும் முடியாமல்,
மருத்துவமனையே அல்லோகலப்பட்டு
அற்பன் வருகைக்கு முறம் பிடித்து
திறம் காட்டிய போலீசே,
பொதுமக்கள் நலனுக்காக போராடிய
மாணவர்கள் மீது கைவைக்க
உனக்கேதும் சட்டம் பேச யோக்கியதை உண்டா?
சமூகத்தின் பொதுச்சொத்தான கல்வியை
சுயநல வெறியோடு சேதப்படுத்தி சில்லரை பார்க்கும்
தனியார் பள்ளிகளை தட்டி வைக்க துப்பில்லை,
அனைவருக்கும் இலவசக்கல்வியை அரசே வழங்கிட
போராடியோர் மீது
பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாய் பொய்வழக்கு!
அரசு அங்கீகாரமே இன்றி
அனுமதிக்கப்பட்ட கட்டணத்தையும் தாண்டி
கொள்ளையடிக்கும் சட்டவிரோத தனியார் கல்வி கொள்ளையர்களுடன்
கூடிக்கொண்டு
சமூகவிரோதிக்களுக்கெதிராய் போராடுவோர் மீது
சட்டவிரோதமாகக் கூடியதாக தாக்குதல்!
தனியார் மயத்தின் கூலிப்படையே,
களமாடிய எம் பெண்களின்
இடுப்பிலிருக்கும் கைக்குழந்தைகள் கூட
உன் உடுப்பிலிருக்கும் கைக்கூலித்தனத்தை
வெறுப்புடன் பார்த்ததும்,
வீறிட்டழுது கண்டனம் செய்ததும்
நீ… போட்டுக் கொள்ளும் பொய்வழக்குக்கு
போதுமான சட்டவிரோதங்கள்தான்… இதையும் சேர்த்துக் கொள்!
பேச விடாமல் வாயைப் பொத்தி…
எழுத விடாமல் கையை முறுக்கி…
நடக்க விடாமல் பாடை தூக்கி…
வாழ விடாமல் உழைக்கும் வர்க்கமடக்கி…
கல்வியின் மீது தனியார்மயத்தின் தாக்குதல்,
திணிப்பு எப்படியோ!
அப்படி தோழர்களை வேனில் திணித்த காட்சியின் வழியே..
வெளிச்சம் போட்டுக் காட்டியது ஜெ அரசு
தனியார்மயத் திணிப்பை.
மக்களுக்காக எம் தோழர்கள் வாங்கிய அடிகள்
மறுகாலனியத்தை தகர்க்க
தமிழக அரசியல் வானில் காத்திருக்கும் இடிகள்!
மறுகாலனியாக்க மாமி ஜெயாவின்
தனியார்மய மிருக வெறிக்கு
ஒரு போதும் அடங்காது எம் தலைமுறையின் உரிமைக்குரல்
ஜெயா அரசு யார் பக்கம்…
போலீசும் அதிகார வர்க்கமும் யார் பக்கம்…
போராடும் பு.மா.இ.மு. யார் பக்கம்!
மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
கொளுத்தியெடுக்கும் கொடிய கோடையின் நடுவே
இடியுடன் மழையாய் இறங்கிய தோழர்களே..
போய் வாருங்கள்…
பத்மா சேஷாத்ரி பள்ளியை விட
புழல் சிறை ஒன்றும் அவ்வளவு மோசமானதில்லை
நிறைய கற்றுக் கொண்டு திரும்ப வாருங்கள்,
நிச்சயம் இறுதியில்
நீங்களே வெல்வீர் தோழர்களே!
_______________________________________________________
– துரை. சண்முகம்
செய்தி – டிபிஐ முற்றுகை! மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!!
_______________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- இலவச கல்வி உரிமைக்காக சிதம்பரத்தில் மாநாடு!
- சிதம்பரம் – இலவச கல்வி உரிமை மாநாடு: உரைகள், படங்கள்!
- “இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – நேரடி ரிப்போர்ட்!
- 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! ஒரு நெடிய போராட்டம்!!
- சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு!
- சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் !
- கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்!
- விருத்தாசலம்:தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி!
- சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து!! தமிழகமெங்கும் ஆர்பாட்டங்கள்!!!
- சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் !
- அம்மா – ஆணவம் – ஆப்பு!
- கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்
- குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!
- ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?
_____________________________
- சுயநிதிக் கல்லூரிகள்: கல்வியா? கொள்ளையா? மொட்டையா?
- சுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளையும், சுயமரியாதை பறிபோன மாணவர்களும் !
- சமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின் இரட்டைவேடம்!
- சிவப்புச் சட்டை!
_____________________________
- ஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை! ‘கல்வி வள்ளலின்’ ரவுடித்தனம் !
- அமைச்சரா, ரவுடியா? ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலை மாணவர் போராட்டம்!
- வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!
- மத்திய அரசு கடல்சார் பல்கலைக்கழகத்தின் கண்ணீர் கதை
- சங்கப் பரிவாரம் வழங்கும் “”இதுதான்டா ராமாயணம்!”
- ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!
- தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!
_____________________________
- அண்ணா நூலகத்தை மூடத்துடிக்கும் பாசிச ஜெயாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
- மதுரவாயல் மாணவர்களின் நீதிமன்ற போராட்டம் வென்றது !
- மதுரவாயல் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் !!
- ஆசிரியர் அடித்து மாணவன் கொலை! போராடிய தோழர்கள் கைது!
_____________________________
கல்வி தனியார்மயதுக்கு எதிராக போராடிய தோயர்கலுக்கு என் வாய்த்துகள்.
போலிஷின் வெரியாஇட்டத்தை முரியடிபோம்.கல்வி கொல்லைக்கு முடுவுகட்டுவோம்.
என்னுடைய முதல் பதிவு இது தவருகளூக்கு மன்னிக்கவும்.
இது முடிவல்ல … ஆரம்பம் …… தனது பிள்ளையை பள்ளியல் சேர்க்கும் போது அவன் கேட்கும் கட்டணத்தை நினைத்து மலைத்து நின்று கைகட்டி , வாய் பொத்தி… இன்னும் பிற உறுப்புகளையும் பொத்தி அவன் காலை நக்கும் போலீஸ் நாய்களே …. உங்களுக்கும் சேர்த்துதான் இந்த போராட்டம் ….. இன்னும் அடி அடித்து கொண்டே இரு …. உன் மகன் வந்தும் போராடுவான் அப்போது என்ன செய்வாய்
“சமூகத்தின் பொதுச்சொத்தான கல்வியை
சுயநல வெறியோடு சேதப்படுத்தி சில்லரை பார்க்கும்
தனியார் பள்ளிகளை தட்டி வைக்க துப்பில்லை,…”
இதே போல சமூகத்தின் பொதுச் சொத்தான தண்ணீரும் மின்சாரமும் இன்று சில்லரை பார்க்கும் தனியாரிடம். இப்படி சமூகத்தின் பொதுச் சொத்துக்கள் ஒவ்வொன்றாய் தனியாரிடம் போய்க் கொண்டிருக்கிறது. இறுதியில் காக்கிச் சட்டைகளும் தனியாராகத்தான் இருக்கப் போகிறார்கள்.
அதுவரை மௌனிப்பதா இல்லை இன்றே இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதா என்பதே இன்று நம்முன் உள்ள சவால். காற்புள்ளியோ அரைப்புள்ளியோ கதைக்குதவாது. முழுப்புள்ளியால் இதற்கு முடிவு கட்டுவோம்.
Vinavu,
Why cant you show the same spirit in fighting against Minority institutions, who’re saying they’re not ready to implement RTE (Right To Education) act and not going to reserve 25% seats to poor pupils???
அருணு, இந்த போராட்டம் அனைத்து கல்வி நிலையங்களை (மொத்தத்தில் கல்வியை)அரசுடைமை ஆக்குவதற்கானது. இதில் மதவேறுபாடெல்லாம் இல்லை. ஆனால் உங்கள் மூளை DEFAULT ஆக இந்து மதவெறி கண்ணோட்டத்தில் சிந்திப்பதால் காவித்தனமான கேள்வியை கேட்கிறீர்கள்…
தலைப்பை பாத்தா அப்படி தெரியலையே…
சீனு, நீங்க ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்று தெரிந்தபடியால் உங்கள் மூளை இப்படி சிந்திப்பதில் வியப்பில்லை..
ஆனா ஒரு விவரம் தெரிஞ்சுக்கங்க
அண்ணாத்தே அருணு இதுக்கு முன்ன போட்ட டிபிஐ முற்றுகை! மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!! என்கிற ”நியூட்ரலான” தலைப்புலேயும் இதே மறுமொழிதான் போட்டிருக்காரு….அங்கேயும் நான் இதே பதிலைத்தான் போட்டிருக்கேன்
This is right. why anybody cant show against the minority institutions? BECAUSE IF ANYBODY MOVE AGAINST THEM, MINORITY WILL KILL. THATS WHY KARUNANIDHI, SONIA INCLUDING WILL KEEP QUITE
///தனியார் மயத்தின் கூலிப்படையே,
களமாடிய எம் பெண்களின்
இடுப்பிலிருக்கும் கைக்குழந்தைகள் கூட
உன் உடுப்பிலிருக்கும் கைக்கூலித்தனத்தை
வெறுப்புடன் பார்த்ததும்,
வீறிட்டழுது கண்டனம் செய்ததும்///
அழுகின்ற
குழந்தையே!
அழுது கொண்டிருக்கிறாயா
அழு நன்றாக அழு
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு
ஆனால் நிறுத்திவிடாதே
உன் உரிமைகள்
கிடைக்கும் வரை
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு
அமைதியாய் மட்டும்
இருந்திடாதே
மார்பறுக்கப்பட்ட
உன் தாய்களைப்பார்
கொன்று குவிக்கப்பட்ட
உன் சகோதரர்களைப்பார்
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு
ஏன்?
எதற்காக?
கேள்வியை கேள்
மூலதனம் சொல்லிவிட்டது
நீ வாழ தகுதியற்றவன்
நீ சாகப்பட வேண்டியவன்
உன் இனம் மட்டுமல்ல
உழைக்கும் இனமே
வாழத்தகுதியற்றதுதான்
அழுகின்ற குழந்தையே!
நன்றாய்க்கேள்!!
தகுதியற்றவர்கள் தான்
அவர்களை தகுதியுடையோராக்கினார்கள்
உழைக்கும் கைகளின்
மீதேறிதான் அவர்கள்
உயர்ந்தவர்களாகியிருக்கிறார்கள்
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு
அமைதியாய் மட்டும்
இருந்திடாதே
கேளாத செவிகள்
கிழிந்து போகட்டும்
கருணைகளின் கோட்டைகள்
நொறுங்கட்டும்
தேர்ந்தெடுத்திருக்கிறாய்
உனக்கான ஆயுதத்தை
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு
ஆம்
அழுகையின் அதிர்வுகளில்
உடைபட காத்திருப்பது
அதிகார பீடங்கள் மட்டுமல்ல
எங்களின் அடிமைத்தனமும் தான்
(நன்றி: தோழர் கலகம்)
மிகப் பெரும் அயோக்கியத்தனம். உரிமைக்காக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது மிகப் பெரும் ரவுவுடித்தனம்.
இன்று பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை சென்றிருந்தேன். பிரதமர் வருகையை முன்னிட்டு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள கடைகளில் பாதியளவு இடித்து தள்ளப்பட்டிருந்ததை ஒரு முதியவர் பிரதமர் மீது வசைமாரி பொழிந்துகொண்டே நினைவு கூர்ந்தார். பல்கலைக்கழகம் முதல் ஜிப்மர் வரையிலும், கடற்கரை, பூங்கா போன்ற பகுதிகளிலும் மக்கள் செல்ல தடை. பூங்கா அருகேதான் பாண்டி அரசு மருத்துவமனை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எந்தநேரமும் AK47டன் பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்திக் கொண்டிருந்தனர். தங்களது உயிர் வாழும் உரிமைக்காக சாலை மறியல், முற்றுகை செய்வதற்கு எதிராக எகத்தாளமிடும் அறிவுஜீவிகள் இதற்கு என்ன சொல்கிறீர்கள்
செவ்வணக்கம் தோழர்களே…
பத்மா சேஷாத்ரியயும் டி ஏ வி யையும்
பன்ணையார்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில்
ஏவல் நாயாய் இருப்பவர்களுக்கு
இது ஒரு சிறு தீப்பொறி தான்…
கதறி அழுத பச்சிளங் குழந்தையின்
வீறல் சத்தத்திற்கு
ஈடாகுமா உங்கள் வீரம்?
“ஜாக்கிரதை” என்று எச்சரித்தாரே
எமது பெண் தோழர் அவரது விரலின் வீரத்திற்கு
ஈடாகுமா உங்கள் லத்திகள்?
அடித்துப் பார் என்று சொல்லி உங்கள்
எருமை உடம்புகளை கன்டு மிரளாமல் நின்ற
எமது மாணவ செல்வங்களின் மயிருக்கு
ஈடாகுமா உங்கள் உறுமல்?
நோயாளியாய் வாழ்வதை விட
போராளியாய் சாகவும் துணிந்து நின்ற
எம் தோழரின் தைரியத்தின் முன் உன் பதவியும்
ஆதிக்க திமிரும் காணமல் போகும்
காலம் கையருகில் உள்ளது.
இதுவரை ஆதிக்க சாதியினால்
ஆளும் வர்க்க்த்தினால் அசிங்கப் பட்ட கல்லூரி சாலையே
இனிநீ கூடநிமிர்ந்து நில்
எமது தோழர்களின் காலடி உன் மீது பட்டதென்று.
///முற்றுகை சட்டவிரோதமாம்
தன் பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு
தங்கமோதிரம் அணிவித்து தம்பட்டமடிக்க
வீணாய் பிறந்த விஜய்
எழும்பூர் மருத்துவமனையை முற்றுகையிட்டபோது
எங்கே போனது உனது சட்டம் – ஒழுங்கு!
பிறந்த குழந்தைக்கு
தாய்ப்பால் கொடுக்கவும் முடியாமல்,
மருத்துவமனையே அல்லோகலப்பட்டு
அற்பன் வருகைக்கு முறம் பிடித்து
திறம் காட்டிய போலீசே,
பொதுமக்கள் நலனுக்காக போராடிய
மாணவர்கள் மீது கைவைக்க
உனக்கேதும் சட்டம் பேச யோக்கியதை உண்டா?/////
அற்பர்களுக்கும் போலிகளுக்கும் அரசும் மக்களும் கொடுக்கும் முக்கியத்துவத்தை அழகாக சொல்லியுள்ளார்
[…] […]
நநல்லா அரசியல் பண்ணுறீங்கப்பா…..அரசாங்கம் இந்த விஷயத்த கவனத்துல எடுத்துக்கணும்…இத இப்படியே விட்டா தமிழக இளைஞர்கள் வருங்காலத்துல நக்ஸலைட்,மாவோயிஸ்ட் கும்பல் தொடர்பால் தீவிரவாதிகளாக மாற வாய்ப்புண்டு……..
i think you are from RAW or RSS .
தோழர்களோடு தள்ளுமுள்ளு செய்த காவல் துறை, தனது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க மாட்டார்களா … நமக்கும் சேர்த்துத்தானே இவங்க போராடுகின்றார்கள் என்று யோசிக்க மாட்டாங்களா… அப்படி யோசித்தால் எதுக்கு இவ்வளவு காலம் அடியாள் வேலை செய்யப்போறாங்க. எந்த பொறுக்கிகள் ஆட்சிக்கு வந்தாலும் ஏவல் நாய்களால் மாறி வேலை செய்வதே காவல் துறையின் கடமையாக உள்ளது. கை குழந்தைகளோடு சிறை சென்ற எம் தோழர்களுக்கு வாழ்த்துக்கள். காவல் துறையையும் இனி அம்பானியும் , டாடாவும் எடுத்துக் கொள்ளலாம்.
[…] முதல் பதிவு: வினவு […]
[…] […]
[…] முதல் பதிவு: வினவு […]