டந்த வாரத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம்,  விமானநிலையத்தில் ஒரு சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி, இந்தி தெரியாமல் இந்தியராக எப்படி இருக்கிறீர்கள் எனக் கேட்டதை ஒட்டி, சமூக வலைத்தளங்களில் #StopHindiImposition எனும் ஹேஸ்டேகில் கண்டனங்கள் பதிவேற்றப்பட்டன.

இதனைக் கண்டித்து பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியும் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்து தனது கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்காது என்று திருவாய் மலர்ந்திருந்தார். பாஜக-வின் திட்டங்களை சிரம் மேல் தூக்கி வைத்து நடைமுறைப்படுத்தும் அதிமுக அரசே, இந்தி திணிப்பை எதிர்க்க வேண்டிய அரசியல் நிலைமை தமிழகத்தில் உள்ளது என்று நாம் மகிழ்ச்சியடைய முடியுமா என்பது கேள்விக்குறியே !

கடந்த வாரம் லீட் எனும் இணையப் பத்திரிகை சென்னையில் நடத்திய ஆய்வில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தித் திணிப்பு வலுக்கட்டாயமாக மேற்கொள்ளப்படுகிறது என்பதும், அவ்வாறு இந்தியைக் கற்று தேர்வில் தேறத் தவறுபவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் நிரந்தரப் பணியும் மறுக்கப்படும் என்பதும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது.

இந்தித் திணிப்பு புதிய கல்விக் கொள்கையின் காகிதங்களில் மட்டுமில்லை; தமிழகத்தின் மத்திய அரசு அலுவலகங்களிலும் நடைமுறையில் இருக்கிறது. இது இந்திய அரசியல்சாசனத்திற்கு புறம்பானதாகும்.

இதுகுறித்து தி லீட் இணையதளம் நடத்திய கணக்கெடுப்பில் பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் இது குறித்த தகவலைத் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு நிறுவனங்களில், வேலை நேரத்திற்கு மத்தியில் இந்தி வகுப்பு எடுக்கப்படுகிறது. இந்த வகுப்புகள் அதற்கான ஆசிரியர்களைக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஊழியர்களின் பணி நேரத்தில் சுமார் 1.30 மணிநேரம் நடத்தப்படுகிறது. இதில் குறிப்பான கட்டத்தில் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கும், நேர்காணல் தேர்வு 20 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படுகிறது.

இந்த வகுப்புகளில் பங்கேற்க மறுத்தால், ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவை மறுக்கப்படுவதோடு நிரந்தர ஊழியராகவும் முடியாது என்கிறார் ஒரு ஊழியர். இப்படி ஊழியர்களை மிரட்டியே இந்தி வகுப்புகளில் பங்கேற்கச் செய்கின்றனர்.

படிக்க:
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !
கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் || விடுதலை இராசேந்திரன்

மத்திய அரசு அலுவலகங்களில், வேலைபார்க்கும் அளவிற்கு இந்தியை கற்றுக் கொடுப்பதற்கான இந்த முனைப்பு, அரசியல் சாசனத்தின் பிரிவு 343-ன் கீழ் வருகிறது. இப்பிரிவின் பல்வேறு திருத்தங்களும், பரிந்துரைகளும், ‘சி’ வகைப்பிரிவில் வரும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வலிந்து இந்தியைத் திணிப்பதைத் தடை செய்கிறது.

2004-ம் ஆண்டு அலுவலக மொழியை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரை எண். 11.5.13  நிராகரிக்கப்பட்டது. பணித் தேர்வுக்கான கேள்வித்தாளிலும் நேர்முகத் தேர்விலும் ஆங்கிலம் இருக்கக் கூடாது என பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது 1968-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றபட்ட அலுவல் மொழி தீர்மானத்தின் ஆன்மாவிற்கு நேர் எதிரானதாக இருக்கிறது என்று கூறி நிராகரிக்கப்பட்டது.

ஆனாலும் மீண்டும் 2011-ம் ஆண்டு இந்தியில் கட்டாயத் தேர்வு வேறொரு வடிவத்தில் கொண்டுவரப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் தேர்வு அறிவிப்பில் இந்தி செல்கள் உருவாக்கப்படுவது குறித்து அங்கீகரிக்கப்பட்டு, இந்தி கற்றுக் கொள்வது கட்டாயமக்கப்பட்டது. இது ‘சி’ வகைப்பிரிவு மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.  ஒருவேளை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கவில்லையெனில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிக்கிறது.

1990 முதலே இதற்கான விவகாரங்கள் பேசப்பட்டு வந்தாலும் 2015—ம் ஆண்டிலிருந்துதான் இதனை நடைமுறைப்படுத்துவது குறித்து அடிக்கடி பேசப்பட்டு வந்தது என்கின்றனர் அலுவலர்கள். இதன் பின்னர் தான், சென்னையிலுள்ள வரி வருவாய்த் துறையிலும் பிற மத்திய அரசு அலுவலகங்களிலும் வரி உதவியாளர் பணிக்கான 100 மதிப்பெண்களுக்கு இந்தி தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டது.

மத்திய அரசு அலுவலகங்களில் குறிப்பான அதிகாரி இந்தி துளியும் தெரியாத ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான இந்தி வகுப்பிற்கு ஏற்பாடு செய்வார்.

ஊழியர்கள் வகுப்பிற்கு வரத் தயங்குகிறார்கள் என்ற அடிப்படையில் பரீட்சையில் 75% மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்தால், இந்திக் கல்வி நிலைக்கு தகுந்தவாறு பணப் பரிசும் கொடுத்து படிக்க ஏற்பாடு செய்கின்றனர். ரூ.400 முதல் ரூ. 2400 வரை இந்தத் தொகை வழங்கப்படுகிறது. “இந்தியை நாங்கள் ஏன் கற்றுக் கொள்ள வேண்டும், சென்னையில் குடியிருப்பவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள மாட்டார்களா ?”  என சென்னை ஜி.எஸ்.டி அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் கேள்வி எழுப்புவதாக கூறுகிறது லீட் இணையதளம்.

இந்தி எப்படி படிப்படியாக தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் திணிக்கப்பட்டது என்பதை நினைவுகூரும் சில மூத்த அதிகாரிகள், ஊழியர்களில் இந்தி பேசும் நபர்கள் அதிகரிக்க அதிகரிக்க இந்தி வகுப்பிற்கு மாற்றுக் கருத்து தெரிவிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

கிட்டத்தட்ட மாநிலங்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்ட நிலையில், மீதமிருக்கக் கூடிய மொழியையும் கலாச்சாரத்தையும் தமிழர்களின் தனித் தன்மையையும் ஒழித்து காலனிய காலத்து அடிமை  நிலைக்குத் தமிழகத்தை இட்டுச் செல்லும் சதியே இது !


நந்தன்
நன்றி: த லீட்.

7 மறுமொழிகள்

 1. இப்படிப்பட்ட அவல நிலைமை, அவமானம் இந்தி பேசாத மக்களுக்கு ஏற்பட காங்கிரஸ் கட்சிதான் முதல் காரணம். அவர்கள்தான் இந்தியாவில் ஆட்சி மொழி சட்டத்தை கொண்டுவந்தவர்கள். கூடவே மாநிலங்களின் அதிகாரங்களை பிடுங்க ஆரம்பித்ததும் அவர்களே. இப்போதைய பாஜக ஆட்சியில் உச்சத்தை எட்டி இருக்கிறது. கனிமொழி எம்பி என்பதால் இது பரவலான கவனத்தை பெற்றது. தமிழ்நாட்டை சேர்ந்த சாதாரண மக்களாக இருந்திருந்தால் விமான நிலையத்தில் அவமான படுவதைத் தவிர வேறு எதுவும் செய்திருக்க முடியாது. மத்திய அரசு நிறுவனங்களில் இவை எல்லாம் வழக்கமாக நடைபெறுவதுதான். .இந்தி பேசாத பகுதிகளைச் சேர்ந்த வெங்கைய நாயுடு, கிரண் ரிஜ்ஜூ, ப.சிதம்பரம் ஆகியோர் இந்தித் திணிப்புக்கு தெரிந்தே உடன் பட்டவர்கள். சிதம்பரத்தை ஒரு ஐந்து ஆண்டு காலமாவது அமித்ஷா உள்ளே வைத்திருந்து இருக்க வேண்டும். ஒரு பக்கம் “we are not imposing hindi. We only encourage/promote Hindi” என தேன் தடவிய வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டே இன்னொரு பக்கம் கடுமையாக திணிக்கிறார்கள். நம் மொழிகளை ஒதுக்கி ஒடுக்குகிறார்கள். நமக்கு கேடயமாக இருக்கும் ஆங்கிலத்துக்கும் இதே கதிதான். இந்தி பேசாத மக்களின் எதிர்வினையும் weak and meek ஆக உள்ளது. ஒன்றுமே செய்ய முடியாத கையறு நிலை. சொந்த மண்ணில் மூன்றாம் தர குடிமக்களாகவும் சொந்த தெருவில் அன்னியர்கள் போலவும் வாழக்கூடிய சூழ்நிலை வெகுதொலைவில் இல்லை. North Indians are more aggressive, suppressive and exploitative than British and Mughals.

 2. Why Chidambaram should be kept in prison for five years ,Mr Periyasamy? What is your justification for that? You are talking as if you can decide the duration of his prison term.You say that North Indians are very aggressive and exploitative than British and Mughals and in another line you wish Chidambaram should be kept in prison for 5 years.You are contradicting yourself.In one line,you say that Hindi imposition is intensified during BJP regime and in another line you say that these things always happen in central govt offices.You also say that non-Hindi speaking people response is weak and meek.Be clear in your view before writing your comment.

  • Mr. Sooriyan,

   I am clear only. When Mr Chidambaram was in power as central minister, he was openly advocating for national language status to hindi in a hindi divas meet. Traitors do more harm. As national parties, both Congress and BJP did and do evil things to non Hindi people. The only difference is Congress does things in a subtle manner and BJP explicitly.

   • Even if Chidambaram betrayed the interests of Tamils,the present ruler should not be given powers to punish him.The current rulers do more harm than the past rulers .Chidambaram talked in the Hindi divas only.The present rulers have brought imposition of Hindi through NEP.

  • நண்பர் சூரியன்,

   உங்கள் கமெண்ட் Spam ஃபோல்டருக்குச் சென்றிருந்தது. ஆங்கிலத்தில் வரி இடைவெளியின்றி தட்டச்சு செய்ததன் விளைவாக அவ்வாறு சென்றிருக்கலாம். தற்போது அது எடுத்துவிடப்பட்டுள்ளது.

   நன்றி !

 3. அறிஞர்களின் கடந்த கால ஆராய்ச்சியில் (Esperanto)எஸ்பரன்டோ என்ற மொழியே உலக மக்களுக்கான பொதுவானதாகவும் சுலபமானதாகவும் கண்டறியப்பட்டது, மேலும் பல மேலைநாட்டு பள்ளிகளில் சிறார், மாணவர் பருவத்தினர் உள்ளிட்டோருக்கு போதிக்கப்பட்டும் வந்துள்ளது, ஆனால் ஏகாதிபத்திய கோலோச்சிய நடவடிக்கைகளாலே ஆங்கிலம் திணிப்பு வளர்ந்துள்ளது,..இங்கு மானிட பிறப்புகள் நிம்மதியான சூழலில் வாழவிடாமல், எதையாவது ஒன்றை மாற்றி மாற்றி தினித்து மன உளைச்சல்களுக்கு ஆளாக்கி குழப்பத்திலேய சிந்தனையை மடைமாற்றம் செய்யும் வகையில் வழிநடித்தி செல்லும் பாசிச போக்குகளை கையாளும் பார்ப்பனிய தந்திரமே இம்மொழி திணிப்புகள் யாவும் என உணர்தல் வேண்டும்…!!!நமது கலைக்குழு வின் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது….”இது என்னா சட்டமடா ! இதை எவன் கொண்டு வந்ததடா! எதிர்த்து நின்னா போதுமடா!உதைப்பட்ட நாயா ஓடுமடா…”என செல்லும் மக்களுக்கான பொறுப்புள்ள சரியான அரசியல் தலைமைக்காக புரட்சி காத்துக் கொண்டு இருக்கிறது….!!! ஆகையால் சிதறாமல் பதராமல் குழம்பாமல் எஃகு உறுதியுடன் அறிவை தெளிவான பாதையில் வைத்திருங்கள்…!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க