னைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு 14 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் இன்றுவரை ஆகம கோவில்களில் தகுதிபடைத்த பார்ப்பனர் அல்லாதா அர்ச்சகர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழக அரசால் கடந்த 2006 -ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் உரிய முறையில் பயிற்சி பெற்ற 206 மாணவர்கள் இன்றும் பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளனர். இதனை எதிர்த்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தொடர்ந்து போராடிவருகிறது. அவர்களுக்கு ஆதரவாக பல ஜனநாயக சக்திகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆகஸ்டு 22, 2006 அன்று தமிழகத்தில் இரண்டாவது முறையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் நிறைவேற்றப்பட்டு 14 ஆண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 23.08.2020 அன்று டிவிட்டரில், ஜனநாய சக்திகள் மற்றும் சமூகநீதிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் #SaveTemplesFromBrahmanism #கருவறையில்_தீண்டாமை என்ற ஹேஸ்டேக்களை முன்வைத்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர் அவற்றில் சிலவற்றை இங்கே தொகுத்து தருகிறோம். இம்முழக்கங்களை டிவிட்டரில் மட்டுமல்லாது தெருவெங்கும் எடுத்துச் செல்வோம்! கருவறைத் தீண்டாமைக்கு முடிவுகட்ட அணிதிரள்வோம் வாரீர்…

***

3 மறுமொழிகள்

 1. இராணுவம் போலீஸ் இரயில்வே விமான பைலட்டுகள் உத்தியோக தேர்வுகளை காட்டிலும் மிகவும் துள்ளியமான சதவிகிதம் நேர்காணல் தேர்வு செய்யப்பட்டு 208 மாணவர்கள் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்று 14 ஆண்டுகள், அதாவது ஒரு முழு ஆயுள் தண்டனை காலம் வரை பல இன்னல்கள் தாங்கி சுமந்து அரசு ஆணையால் ஏமாந்து இருவர் மரணம் அடைந்த பின்னரும் , எஞ்சியுள்ள வர்களுக்கு இன்றுவரை பணிகள் பெற இயலவில்லை இவர்களின் நாடக ஜனநாயக அரசியலில், இதைவிட கேவலமான நிலையில் தான் அரசு வேலை வாய்ப்புகள் அலுவலகம் (employment exchange) உள்ளது, நம் முன்னோர்களின் கடினமான உழைப்பாலும் தியாகத்தினாலும் கட்டப்பட்டு அரசுடைமையாக உள்ள வழிபாட்டு தலங்கள் பலவற்றில் ஆட்சேர்ப்பு நடைமுறை ரகசியமாக உள்ள நிலையில், தகவல் பெரும் உரிமைகளின் கீழ் அறநிலையத்துறையோ அல்லது அதனில் சம்மந்தப்பட்ட எந்த அமைப்பாயினும் உரிய தகவலை வெளிக்கொண்டு வர வேண்டும், அரசு ஆணையை நம்பி பயிற்சி முடிந்து தேர்ச்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு 14 ஆண்டுகளுக்கான சம்பளத்தையும் கொடுத்து, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஈடாக எந்த கோயிலில் பணி ஆணை கேட்கிறார்களோ,அவ்விருப்பப்படியே பணியமர்த்த பட வேண்டும்.உயிரிழந்த இருவர் குடும்பங்களில் ஒருவர் வீதம் அரசு பணி அளிக்க வேண்டும்.இது போன்ற கோரிக்கையோடு கூடிய போராட்டங்கள் வழி நடத்தப் படவேண்டும்.இவற்றுக்கான நீதிப் பேராணை பெற வேண்டிய மூன்று வகையான ரிட் வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டும்…
  1.தமிழக அரசின் முதன்மை செயலரை எதிர்மனுதாராக(respondent) குறிப்பிட்டு மேண்டமஸ்(mandamus)ரிட்: தமக்கு பிறர் செய்ய வேண்டிய கடமை-உரிமைஇருக்கும்போது அதைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்த இந்த ரிட் மனுவைப் தாக்கல் செய்யலாம்.
  2.அரசு ஆணையை மறுத்துத் குதியில்லா பதவிக்கு பார்ப்பனியர்கள் அமர்த்தப்பட்டிருப்பதாக் கருதி அவர்களை எதிர்மனுதாராக குறிப்பிட்டு குவோ வாரண்டோ(quo warranto)ரிட் தாக்கல் செய்து சம்மந்தப்பட்டவர்களை பதவியில் இருந்து இறக்கவோ மாற்றவோ செய்யலாம்.
  3.மாநில அரசின் ஆணைக்கினங்க பயிர்ச்சிப்பெற்று தேர்ச்சி அடைந்த அர்சகர்கள் பணிவழங்காமல்
  தீர்ப்பு உத்தரவுகள் மறுக்கப்பட்டு , வழக்கில் நியாயம் கிடைக்காமல் நிலுவையில் உள்ள நீதிமன்ற நீதிபதிகளை எதிர்மனுதாரர்களாக குறிப்பிட்டு ஷெர்ஷியாராரி (chertiorari)ரிட் தாக்கல் செய்து, மேல் முறையீட்டிலும் நியாயம் கிடைக்காமல் உள்ளதை மேற்க்கோலிட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றியமைக்க கோரலாம் அல்லது நீக்க கோரலாம்.
  நமது போராட்டங்கள் மறுபுறம் இருப்பினும் சட்ட பூர்வ மும்முனை தாக்கல் நெருக்கடிகளை கொடுத்து வாழ்வாதார உதவிகளின் உரிமைகளை மீட்கப்பட வேண்டும்…அதர்க்குரிய விதிமுறைகளைகளுடன் கூடிய நடைமுறைகளை கடைப்பிடித்து உத்திரவுகள் பெற வேண்டும்…!!! மற்றபடி தங்களின் போராட்டங்கள் வெல்க வெல்கவே என செவ்வணக்கங்களுடன் கூடிய வாழ்த்துக்கள்…!!!

 2. Whatever said in this article is correct,
  But if you appoint SC as archakar GOD will stay in the temple,But NO/less number of devotees
  only will come to the temple .In the course of time GOD will die in the temple itself.
  Even SC/OBC do not like their own people as Archakas,they want white SKIN there.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க