அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத மாணவர்களின் அன்பான கோரிக்கை!

வணக்கம்!
னைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்தின் கீழ் பயிற்சி முடித்து 14 வருடமாக 203 மாணவர்கள் அர்ச்சகர் பணி நியமனம் கிடைக்காமல் காத்திருக்கிறோம்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கோயில்களில் இந்து அறநிலையத்துறை அர்ச்சகர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அவசர அவசரமாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசாமி  திருக்கோயிலில் சமையல் பணியாளர் (பரிச்சாகரர்) மற்றும் நைவேத்தியம் ஆகிய  பணியிடங்களுக்கு பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு நாளிதழ்களில் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்.

படிக்க :
பாஜக தலைவர் எல். முருகனுக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் கண்டனம் !

அர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது?

ஏற்கனவே, இதே போன்று திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் சிறீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் பிராமணர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன்பாக அறிவிப்புகள் வந்த போது உயர்நீதிமன்றத்தினை நாடி இடைக்கால உத்தரவுகளை பெற்றோம். பின் அந்த அறிவிப்புகள் திரும்ப பெறப்பட்டன.

ஆகவே இது தொடர்பாக வழக்கினை உடனே தொடர வேண்டியுள்ளது. மேலும் அர்ச்சகர் உள்ளிட்ட கோயில் பணியிட நியமனங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. இதனையும் இணைத்து வழக்கு தாக்கல் செய்ய தயாரித்துவிட்டோம்.

தமிழக கோயில்களில் அர்ச்சகர் பணி நியமனத்திற்கான வயது வரம்பு 45 ஆக முன்பிருந்தது. 2020-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்நாடு இந்து சமய நிறுவனங்களின் பணியாட்கள் பணிவரைமுறை விதிகள் (Tamil Nadu Hindu Religious Institutions Employees (Conditions of Service) Rules), 2020-ல் அர்ச்சகர் பணிக்கு 35 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று விதிமாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.  இதனால் அர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத மாணவர்களாகிய எங்களின் அர்ச்சகராகும் வாய்ப்பு பறிக்கப்படுகிறது.

தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு 14 ஆண்டுகளாக அர்ச்சகர்களாக நியமிக்கப்படாமல் காத்திருப்பதிலேயே எங்களது காலம் வீணாகியுள்ளது.  அதனால், இட ஒதுக்கீடு அர்ச்சகர் நியமனங்களில் பின்பற்றப்படும் போது வயது வரம்பில் பார்ப்பனரல்லாத அர்ச்சகர் மாணவர்களுக்கு விலக்கு கிடைத்திடும் வாய்ப்பும் உருவாகும்.

ஏற்கெனவே, உயர்நீதிமன்ற வழக்குகள், உச்சநீதிமன்ற வழக்கு என தங்களை போன்றோரின் ஆதரவுடன் வழக்கு நடத்தி தீர்ப்புகளை பெற்றுள்ளோம். மேற்கூறிய புதிய வழக்கினை தாக்கல் செய்து மூத்த வழக்குரைஞரை வைத்து நடத்திட தங்களால் இயன்ற நிதி உதவியை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  பார்ப்பனரல்லாத அர்ச்சகர் பணி நியமனங்களின் மூலம் கருவறையில் நிலவும் தீண்டாமை அகற்றப்படும் என நம்புகிறோம்.

வங்கிக் கணக்கு விவரம் : (திருத்தப்பட்டது)

V.Ranganathan,
IDBI Bank,
Thiruvannamalai Branch,
A/C – 1431104000061296,
IFSC : IBKL0001431,
Google Pay Number : 9047400485.

இப்படிக்கு,
வா.ரங்கநாதன்,
தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு.
தொடர்புக்கு : 90474 00485

(வங்கிக் கணக்கு முதலில் தவறாக கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது அது மாற்றப்பட்டுள்ளது)

1 மறுமொழி

 1. பெரியார் பாதையில் பா.ஜ.க.

  அன்று 1926 பெரியார் ‘ஆலயப் பிரவேசம்/ கருவறை பிரவேசம்’ நடத்தியது,
  இன்று 2021 விஜயேந்திரருக்கும், குருமூர்த்தி, எச்.ராஜாவிற்கும் உதவியது

  23/02/2021… ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த காஞ்சி மடத்தின் பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியாருக்கு கருவறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

  அப்போது கருவறைக்குள் இருந்த பாரம்பரியமான சிவ ஆகம விதிகளின் படி தீட்சை பெற்ற புரோகிதர்கள், அவரை கருவறைக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் அங்கிருந்த பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, குருமூர்த்தி, உட்பட பலர் வாக்குவாதம் செய்தனர். கருவறைக்குள் சென்று மூலவரை தொட்டு பூஜை செய்ய தீட்சை பெற்ற புரோகிதர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளதாகவும், மற்றவர்களை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்றும் அங்கிருந்த புரோகிதர்கள் தெரிவித்துள்ளனர்.

  இதனிடையே அங்கு வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ஆடிட்டர் குருமூர்த்தி, பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, ராமேசுவரம் கோவில் தக்கார் ராஜா குமரன் சேதுபதி, ராணி லட்சுமி குமரன் சேதுபதி உள்ளிட்டோரும் கோயில் குருக்கள்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் விஜயேந்திரரை கருவறைக்குள் செல்ல அனுமதித்தனர்.

  ஆக கருவறை பிரவேசம் வெற்றிகரமாக நடந்தது. இதற்க்கு தான் பெரியார் இத்தனை காலம் போராடினார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க