ஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு ! | மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ்

ஸ்டெர்லைட் போராட்டம் உயர்நீதிமன்றத் தீர்ப்பு…! அடுத்து என்ன…? என்ற தலைப்பில் ஆகஸ்டு 23 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய இணைய வழிப்பொதுக்கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ் ஆற்றிய உரை!

ஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு ! | மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ்

து போன்ற தீர்ப்பை இதுவரை பார்த்ததில்லை. அவர்கள் கண்டிப்பாக உச்சநீதிமன்றத்திற்கு செல்வார்கள். ஆனால், உச்சநீதிமன்றத்திற்கு இது கடுமையாக வழக்காகத்தான் இருக்கும்.

இதற்கு முன் 2013-ல் வழக்கு நடத்திய போது உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்கு நூறுகோடி ரூபாய் அபராதம் விதித்தது. காற்று, நிலம், நீர் இவைகள் எல்லாம் மாசுப்பட்டிருக்கிறது, மக்கள் அந்த ஆலையால் படும் துயரம், உயிர் இழப்பு, நோய்கள் ஆகிறவற்றை அந்த பணத்தால் மட்டும் ஈடுசெய்துவிட முடியாது.

ஏற்கனவே கோவா-வில் இந்த ஸ்டெர்லைட் ஆலை வைக்கப்பட்ட போது, அங்கு காற்று, நிலம், நீர் மாசுப்பட்டிருக்கிறது. மக்கள் ஆலையில் பாய்லர்களை எல்லாம் உடைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அங்கு தாக்குப்பிடிக்க முடியாமல்தான் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. நாமும், கோவா மக்களை போல் போராடினோம், ஆனால் ஆயுதங்களுடன் செல்லாமல் விட்டுவிட்டோம்.

2013 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகும், ஸ்டெர்லைட் ஆலை சுற்றுசூழல் பற்றிய எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் பின்பற்றவில்லை. அரசு அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனைத்தும் இவற்றை கண்டுகொள்ளாமல் ஊழல் நிறைந்ததாக இருக்கிறது.

மக்கள் போராட்டத்தில் இருந்துதான் இந்த தீர்ப்பு வந்திருக்கிறது. இந்த ஆலை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவைவிட்டே மூட்டை முடிச்சிகளை கட்டி அனுப்பப்பட வேண்டும் என்று பல்வேறு கருத்துக்களை இந்த காணொளியில் மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ் விளக்குகிறார்.

காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க