ந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளை ஒட்டி, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக நெல்லை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் கிராமத்தில் பகுதி இளைஞர்கள் ஒன்று திரண்டு பெரியாரின் நினைவேந்தினர்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைப் பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், குலக் கல்வி முறை உள்ளிட்ட மனுதர்ம ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான அம்சங்களைக் கொண்ட தேசிய கல்விக் கொள்கையை தடை செய்யக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை

1 மறுமொழி

  1. நீட் தேர்வுக்கு திட்டம் தீட்டியவர்கள், வினா தாள் தயார் செய்தவர்கள், தேர்வு எழுத வரும் மாணவர்களின் உரிமை பண்புகளை மீறும் அளவில் வக்கிரமான சோதனை விதிமுறைகளை வகுத்தவர்கள் எல்லாம் மருத்துவக் கல்வி ஆராய்ச்சி முனைவர் பட்டம் பெற்றவர்களா ??? அல்லது இவையனைத்தும் ஆகம விதிகள் படியும், சனாதன முறைப்படி நடக்கும் காரியங்களா ??? அடிப்படையில் பார்த்தால் நடக்கும் செயல்கள் அனைத்தும் மனித உரிமைகள் மீறலே !!! பெரியாரின் 142வது பிறந்த நாளில் இறந்தவர்களின் சடங்கு சாத்திரங்கள் செய்யும் முழு இருள் நாளும் ஒரே தேதியில் (17.09.20) எதேச்சையான எதிர்மறை எண்ணங்கள் அதனதன் செயலை அவரவர் கடமையாற்றிய நாளாய் நகர்ந்துள்ளது… ஒப்பிட்டு பார்க்கும் பொழுது மனுநீதித் திட்டங்களும் ஒழிய போவது இல்லை…அதர்க்கெதிரான போராட்டங்களும் ஓயப்போவதில்லை… இவை நம்மோடு தொடங்கியவையல்ல என்றாலும், நாம் முடிவுக்கு கொண்டு வரும் தருணங்கள் மிக சமீபத்தில் உள்ளதாக தென்படுகிறது…!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க