கருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு ? | வா. ரங்கநாதன்

பெரியாரின் பாரம்பரியத்தில் வந்ததாக சொல்லிக் கொள்ளும் அதிமுக அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைப் பெற்றுத்தருமா ? வினவுகிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன்.

பெரியார் சாதித் தீண்டாமைக்கு எதிராக தொடர்ந்து போராடினார். கோவில்கள் இருக்கும் தெருவுக்குள் கூட பார்ப்பனரல்லாதவர்கள் போக அனுமதி இல்லாத சூழலில் அனைத்து சாதியினரும் கருவறை வரை செல்ல உரிமை உண்டு எனப் போராடியவர் பெரியார்.

பெரியாரின் 70 ஆண்டுகால சமூக சீர்திருத்தப் பணியின் பலன் தான் இன்று தமிழகம் வட இந்தியா அளவிற்கு மதவெறியிலும், சாதிய ஒடுக்குமுறையிலும் இழிநிலையை அடையவில்லை. பெரியாரின் தொடர்ச்சியாக அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் சட்டரீதியாக தீண்டாமையின் பல்வேறு வடிவங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

படிக்க:
♦ நீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் !
♦ இந்தியா – பாகிஸ்தான் : தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை !

ஆனால் அப்படி இயற்றப்பட்ட சட்டங்களையும், நடைமுறையில் செயல்படுத்த விடாமல் தடுக்கும் பணியை பார்ப்பனியம் இன்றுவரை செய்து வருகிறது. அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றுதான். பார்ப்பனர் அல்லாதவர்கள் கோவில் கருவறைக்குள் சென்றால் தீட்டுபட்டுவிடும் என அர்ச்சகர் பணியை பிற சாதியினருக்குக் கொடுக்க மறுக்கப்படுவது. பல ஆண்டுகளாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் போராடி வருகின்ற்னர். ஆனாலும் இன்று வரை அவர்களுக்கு எந்தப் பணி நியமனமும் செய்யப்படவில்லை.

பெரியாரின் பாரம்பரியத்தில் வந்ததாக சொல்லிக் கொள்ளும் அதிமுக அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைப் பெற்றுத்தருமா ? வினவுகிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் சார்பாக, பின்வரும் கோரிக்கைகளை இந்தக் காணொலியில் முன்வைக்கிறார்.

  • பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அதிமுக அரசு அகற்றுமா?
  • கருவறை தீண்டாமை ஒழிக்கப்படுமா?
  • தமிழகத்தில் பெரிய கோவில்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் எங்களுக்கு பணிநியமனம் வழங்கு!
  • தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில் சைவ, வைணவ பயிற்சி நிலையங்களை உடனே திற !

காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க