மோடி அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தை கண்டித்து இன்று (25.9.20) இந்தியா முழுவதும் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து திருநெல்வேலி மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் கிராமத்தில் இளைஞர்கள், மாணவர்கள் பங்களிப்போடு எழுச்சிகரமாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தோழர்கள் பேரணியாக அங்கிருந்து பிரதான சாலைக்கு வந்து விவசாய மசோதாக்களைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

படிக்க :
♦ அறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன ? | தோழர் மாவோ
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ

விவசாய சீர்திருத்தச் சட்டங்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு, மக்களின் அத்தியாவசியத் தேவையான உணவு தானியங்களை கார்ப்பரேட்டுகளின் பிடியில் சிக்க வைத்திருக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான கட்டுப்பாடு அரசாங்கத்தின் கையில் இருக்கும் போதே, பட்டினிச் சாவுகள் தலைவிரித்தாடிடும் சூழலில் இனி கார்ப்பரேட்டுகளின் கைக்குச் சென்றால், கொத்துக் கொத்தாக பட்டினிச் சாவுகள்தான் இந்தியாவெங்கும்  நடக்கும்.

விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்துவந்த குறைந்த பட்ச விலை முறையை கை கழுவும் விதமாக விவசாயிகள் கார்பரேட்டுகளுடன் நேரடியாக பேரம் நடத்திக் கொள்ளும் வகையில் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது மோடி அரசு.

இத்தகைய மக்கள் விரோத சட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தோழர் கின்ஷன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் உரிமை மீட்பு களம் தோழர் லெனின் கென்னடி, திராவிடத் தமிழர் கட்சி தோழர்கள் தோழர் கதிரவன், தோழர் ஒண்டி வீரன் முருகேசன், தோழர் திருக்குமரன், தோழர் வேல்ராஜ், தோழர் இளமாறன் கோபால், பூர்வீகத் தமிழர் கட்சி தோழர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. வேளாண் திருத்தச் சட்டத்தை வீழ்த்தும் வரை விவசாயிகளைத் திரட்டி போராட்டம் தொடரும் என்பதை ஆர்ப்பாட்டத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல் :
மக்கள் அதிகாரம், நெல்லை – தூத்துக்குடி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க