இணையவழித் தேர்வு, NEP – 2020, நீட் – பறிக்கப்படும் மாநில உரிமைகள் ! இணையவழிக் கூட்டம் !

கொரோனா சமூக வாழ்வின் அனைத்து அவலங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் வேலையிழப்பு தொடங்கி விவசாயிகள் பிரச்சனைகள் வரை தொழில்துறை தொடங்கி பொதுசுகாதாரம் வரை அனைத்துமே கடும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதற்கு கல்வித் துறையும் விதிவிலக்கல்ல.

படிக்க :
♦ பாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு !
♦ NEP 2020 : என்னவாகும் உயர்கல்வி ? | சசிகாந்த் செந்தில் உரை | CCCE

கடந்த ஏழு மாதங்களாக பள்ளி / உயர்கல்வி சார்ந்த அறிவிப்புகள், மாநில உரிமைகளைப் பறித்து மத்தியில் அதிகாரத்தை குவிப்பதாகவும் தனியார் நிறுவனங்களின் நலன்களை முன்னிலைப்படுத்தியும் வந்துள்ளன. கொரானா பரவலினால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களின் தேர்வுகளை மாநில அரசுகள் ரத்துசெய்த போதும் ‘உயர்கல்வி சார்ந்த முடிவுகள் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை’ எனக்கூறி தேர்வை இணையவழியில் நடத்தியதோடு மட்டுமில்லாமல் இணையவழிக் கல்வியை கட்டாயமாக்கியது மோடி அரசு.

தேசியக் கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து  புதிய அமைப்புகளும் (Regulating body) கல்வியில் மாநில உரிமைகளை பறிப்பவையாகவும் மத்தியில் அதிகாரத்தை குவிப்பவையாகவும் தனியார் கல்வி நிறுவனங்கள் / கொடைவள்ளல்கள் / தன்னார்வு அமைப்புகளை கல்வியில் அனுமதிப்பதாகவுமே உள்ளது. தேசிய மருத்துவ ஆணையமானது (National Medical Commission) நீட் தேர்வை கட்டாயமாக்கியதோடு கல்விக் கட்டணம், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட மருத்துவ கல்வி சார்ந்த அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடம் சென்றுள்ளது.

கூடவே கார்பரேட் மருத்துவமனைகளுக்கு கல்லூரி நடத்துவதற்கான அனுமதியையும் மோடி அரசு வழங்கியுள்ளது. இந்த மூன்று உதாரணங்களில் மாநில உரிமைகளை பறிப்பதோடு மட்டுமில்லாமல் உயர் கல்வியில் கார்ப்பரேட் நிறுவனங்களையும் அனுமதித்துள்ளது மிகமுக்கியமானதாகும்.

மாணவர்களிடமிருந்து பறிக்கப்படும் கல்வி குறித்தும், கல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் குறித்தும் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு இணையவழிக் கூட்டத்தை நடத்துகிறது. இதில் பேராசிரியர் கருணானந்தன் உரையாற்றுகிறார். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நாள் : 02-10-2020
நேரம் : மாலை 05-45
Zoom ID : 816 0289 5154
Facebook : CCCE-TN
தொடர்புக்கு : 94443 80211, 94431 59058

தகவல் :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு.

1 மறுமொழி

  1. கருணாநிதி குடும்பம், சசிகலா குடும்பம், தேவகவுடா குடும்பம், ராஜசேகர ரெட்டி குடும்பம், பால்தாக்கரே குடும்பம், லாலு பிரசாத் யாதவ் குடும்பம், பரூக் அப்துல்லா குடும்பம் ஆகிய லோக்கல் அரசியல்வாதிகளின் குடும்பங்கள் ஊழல் செய்து கொள்ளை அடிப்பதற்கும் அராஜகம் செய்வதற்கும் தான் மாநில உரிமைகள் என ஆகிவிட்ட பிறகு அவை இருந்தால் என்ன போனால் என்ன? இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு இங்கு கல்வித்துறையில் குளறுபடிகளும் ஊழல்களும் மலிந்ததற்கு இரண்டு திராவிடக் கட்சிகள், குறிப்பாக கருணாநிதி கட்சி, தான் காரணம். துணைவேந்தர் பதவியே ஏலத்துக்கு விடப்படும் அவலம் இங்குதான். கல்வியும் சமச்சீர் கல்வி மாதிரி தரங்கெட்ட கல்வி.. சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களின் தரம் உலகறிந்தது. கருணானந்தன் மாதிரியான பெருசுகள் 58 வயது வரை கொழுத்த அரசு சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கையை தேய்த்து கொண்டிருந்தார்கள். இப்போது வீட்டில் பொழுது போகாமல் இந்த மாதிரி எதையாவது உளறிக் கொட்டுகிறார்கள். இதற்கு ஒரு கூட்டம் கும்மி அடித்துக் கொண்டு திரிகிறது. பொது பட்டியலில் இருக்கும் கல்வியிலிருந்து உயர்கல்வியை பிரித்து எடுத்து மத்திய அரசாங்கம் தனது மத்திய பட்டியலில் கொண்டுபோய் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டில் உள்ளூர் அரசியல்வாதிகளால் கல்வித்துறையில் நடக்கும் அயோக்கியத்தனங்களுக்கு முடிவு கட்ட முடியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க