பாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு !

பாரதியார் பல்கலையில் மாணவர்கள், பெற்றோர்களை உள்ளடக்கி நடத்தப்பட வேண்டிய NEP கருத்துக் கேட்பு கூட்டத்தை திட்டமிட்டே மாணவர்களைப் புறந்தள்ளி கண் துடைப்புக்காக நடத்துயுள்ளது. மாணவர்களின் நேர்காணல் ! பாருங்கள் !

பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டெம்பர்  24 அன்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை ஒருங்கிணைத்து நடத்தப்பட வேண்டிய தேசிய கல்வி கொள்கை கலந்தாய்வு கூட்டம் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நடந்துள்ளது. இந்த விவகாரத்தில், கடைசி நேரத்தில் செய்தி அறிந்து பங்கேற்க நினைத்த மாணவர்களுக்கும் zoom link கொடுக்கப்படவில்லை. அவசரம் அவசரமாக யாருக்கும் தெரியாமல் இதை பல்கலைகழகம் நடத்தி உள்ளது.

படிக்க :
♦ பாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் !
♦ கோவை பாரதியார் பல்கலைகழக ஊழல் ! நேரடி கள ஆய்வு

இந்த செயல், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அரங்கேறியுள்ளது என்றும், இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் மாணவர்கள் பதிவு செய்து உள்ளனர். இது குறித்து மாணவர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
காணொலி :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க