கோவையில் பாரதியார் பல்கலையின் சிண்டிகேட் கமிட்டியில் RSS சங்கிகளை நியமித்த ஆளுநர்.

புமாஇமு அறிக்கை !

ன்பார்ந்த மாணவர்களே! பேராசிரியர்களே!

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் கமிட்டிக்கு இரண்டு RSS சார்புள்ள நபர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார்.
ஆளுநர் என்ற முறையில் “சிண்டிகேட் கமிட்டிக்கு மூன்று நபர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது.” ஆனால் “1981 பாரதியார் பல்கலைக்கழக சட்டம், கல்வித்தரத்தை மேம்படுத்த, கல்வி வல்லுநர்களை நியமிக்கலாம்” என தெரிவித்துள்ளது. இதற்கு மாறாக மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் RSS சங்கிகளை ஆளுநர் நியமித்துள்ளார்.

ஆளுநர் நியமித்த இருவர்களில் P.கனகசபாபதி என்பவர் தமிழக பாஜக-வில் அறிவுசார் அணியில் பணியாற்றியவர். தற்போது தமிழக பாஜக-வில் மாநில துணைத் தலைவராக இருப்பவர். C.A.வாசுகி என்பவர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் முதல்வராக இருப்பவர். இவரும் RSS சார்புள்ள நபர். கொங்குநாடு கலை அறிவியல் வளாகத்தினுள் RSS சாகா பயிற்சியும், முகாம்களும் நடத்துவதற்கு அனுமதி அளித்து, RSS-க்கு பின்தளமாக இருப்பவர். இந்த இருவரையும் நியமிக்கும் நோக்கம், கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே உள்ள பார்ப்பனிய பிற்போக்குத்தனத்தின் மேலே RSS இந்து மத வெறியை கட்டியெழுப்பி தொடர்ச்சியாக வேலை செய்வதாகும்.

கோவை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து RSS இந்து மத வெறி கும்பல் நடத்திய கலவரம், இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் இறந்த போது காவல்துறை துணையுடன் கலவரம் என RSS இந்து மதவெறியின் செயல்திட்டம் நடைமுறைப்படுத்துவதை நாம் கண்டிருக்கிறோம்.

கல்வி நிலையங்களில் மாணவர் சங்க தேர்தல் நடத்தி, தேர்வு செய்யப்படும் மாணவர் தலைவர் சிண்டிகேட் கமிட்டியில் பிரதிநிதியாக இருப்பார்.அவர் மாணவர்களின் குரலாக ஒலிப்பார். மாணவர்களின் கண்காணிப்புக்குள் சிண்டிகேட் கமிட்டி இருக்கும். திட்டமிட்டு அரசு மாணவர் சங்கத் தேர்தலை நடத்தாமல், மாணவர்களிடம் நடக்கும் சிறு மோதல்களை காரணம் காட்டி நிறுத்தி வைத்துள்ளது. ஓட்டு சீட்டு அரசியல் கட்சிகளிடம் பெரிய அளவில் மோதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்காக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தாமல் நிறுத்தி விடுமா என்ன? சிண்டிகேட் கமிட்டி இப்படி சங்கிகளின் கட்டுப்பாட்டிற்குள் செல்வதன் மூலம், மாணவர்களின் எதிர்கால கல்வி இருளில் சிக்கிக்கொண்டு பறிபோகும் அபாயம் உள்ளது.

படிக்க :
♦ கட்டுக்கோப்பான கட்சியா ? கதம்பக்கூட்டா ? | ஜே. வி. ஸ்டாலின்
♦ தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !

இந்திய கல்வி சந்தையை கார்ப்பரேட் கம்பெனிகள், மோடி அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை 2020-ன் வாயிலாக கைப்பற்ற போகும் சூழலில் இந்த நியமனம் நடந்துள்ளது.

புதிய மனுநீதி என்ற பெயரில் ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் வகையில், நீட் போன்ற தேர்வுகளை வைத்து அரசு மாணவர் படுகொலைகளை நிகழ்த்தி வரும் வேளையில், தமிழக பேராசிரியர்கள், மாணவர்களாகிய நாம் நம்முடைய கல்வி உரிமையை நிலைநாட்ட வீதியில் இறங்கிப் போராடுவோம்!
உயர் கல்வி நிறுவனங்களை காவிமயமாக்கத் துடிக்கும் RSS இந்து மதவெறி கும்பலின் சதித் திட்டத்தை முறியடிப்போம் !!

இவண்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி.
கோவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க