ஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும் பாசிசம் !

ஹத்ராஸ் பாலியல் வன்கொலை நிகழ்வும், பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பும் பாசிசம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை காட்டுகின்றனர். ஒன்றிணைந்து தடுக்க வேண்டிய தருணம் இது என அறைகூவல் விடுக்கிறார் புமாஇமு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன்.

த்ராஸ் பாலியல் வன்கொலையில் உத்திரப் பிரதேச போலீசு நடந்து கொண்ட விதம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆகியவை கார்ப்பரேட் – காவிப் பாசிசம் அதன் உச்சத்தை நோக்கி நெருங்குவதை நமக்கு உணர்த்துகிறது.

பாசிசத்தை வீழ்த்த வர்க்கரீதியாக நாம் ஒன்றிணைய வேண்டும் என்பதை விளக்குகிறார், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன்.

 

பாருங்கள் ! பகிருங்கள் !

1 மறுமொழி

  1. தோழரின் பேச்சு. தலைவர்களின் பேச்சுத்தோரணையின்றி….. பாதிக்கப்பட்டவர்களின் வலியை உணர்ந்து அதை வெளிப்படுத்துகிறது, காணொலி கேட்பவர்களுக்கு அதன் வலியை அப்படியே கடத்துக்கிறது.

    நாள்தோறும், சங்கிகளால் பல சம்பங்கள்தமிழகத்தில் அரங்கேற்றப்படுகிறது. ஹத்ராஸ் சம்பவங்கள் இனி தெருவெங்கும் தொடரும். தமிழகத்தில் தற்போது ஊர்தோறும் திடீரென 2 கிமீ தூரத்துக்கு ஒன்று என்று பறக்கும் பிஜெபி கொடிக் கம்பங்களே அதற்கு சாட்சி.

    அன்று, மனுநீதி, இராமர் பட எரிப்பு போராட்டம் நடத்தியது தமிழ்நாடு . இன்று, மனுநீதியில் உள்ளதை பேசிய திருமாவிற்கு எதிராக சங்கிகள் போராட்டம். இனியும் பெரியார் மண்இது என்று பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்குவோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க