மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

விடுதலை சிறுத்தைகள் கட்சி, 24.10.2020 அன்று நடத்தும் மனுசாஸ்திரத்தை தடை செய்ய வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் ஆதரவு !

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் தமிழகம் முழுவதும் பங்கேற்கும் என மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அறிவிப்பு!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான தோழர் திருமாவளவன் அவர்கள் மனுசாஸ்திரம் குறித்து ஆற்றிய உரையினால் ஆத்திரமடைந்த காவி கும்பல் அவர் எவ்வகையிலும் பெண்களை இழிவுபடுத்தி பேசவில்லை என்பது தெரிந்தே அவதூறுகளை வீசி வருகிறது. இது அவர்களின் வழக்கமான பாணியாக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது.

பெண்களை மிக இழிவாகப் பேசுவதும் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதும் பிஜேபி – ஆர். எஸ். எஸ் கும்பல்தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஹத்ராஸ் படுகொலை நிகழ்வில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் மீது தேசத்துரோக வழக்கைப் போட்ட இந்த காவி பாசிஸ்டுகளுக்கு தோழர் திருமாவளவனை பற்றி பேசுவதற்கு கொஞ்சமும் அருகதை இல்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னெடுத்து இருக்கிற, “மனு சாஸ்திரத்தைத் தடை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையோடு நடைபெறுகிற இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் அனைத்து இடங்களிலும் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தோழமையுடன்,
வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுவை.

2 மறுமொழிகள்

  1. வழக்கொழிந்ததா? விஸ்வநாதன் சார்..மனுநூல்தான் அதிகாரத்தில் இருக்கிறது…வழக்கொழிக்கப்பட வேண்டும் என்பதே சரி…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க