மீபத்தில் வடிவமைப்பு பொறியாளர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாயாரை தற்கொலைக்கு தள்ளியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மராட்டிய போலிசால் கைது செய்யப்பட்ட ”The nation wants to know” புகழ் அர்னாப் கோஷ்வாமி சிறையிலடைக்கப்பட்டார்.

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியராக இருக்கும் அர்னாப் நாட்டின் முதன்மையான பிரச்சினைகளை எல்லாம் திசை திருப்பியும், மோடி அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை குறி வைத்தும், பாசிச மோடி அரசாங்கத்திற்கு சேவை செய்பவர்களில் முன்னோடி ஊடகவியலாளார். ரிபப்ளிக் தொலைகாட்சி டி.ஆர்.பி ரேட்டிங் மோசடியில் ஈடுபட்டதையும் மும்பை போலீசு விசாரணை செய்து வருகின்றது.

ஆளும் மராட்டிய அரசாங்கத்திற்கு எதிராக அர்னாப் பேசியதாலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று அர்னாபின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். கூடுதலாக, அர்னாபின் கைது நடவடிக்கை அவசரகால நிலையை நினைவுப்படுத்துவதாக அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க-வினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

படிக்க :
♦ அர்னாப் கோஷ்வாமி கைது : சிவசேனா கொடுத்த ஷாக் !!
♦ ரிபப்ளிக் டிவி : அர்னாப் கோஸ்வாமியின் டி.ஆர்.பி. தில்லுமுல்லு !

பீமா கொரேகான் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள வயதளவிலும், உடலளவிலும் தளர்ந்திருக்கும் பேராசிரியர் சாய்பாபா, செயற்பாட்டாளார்கள் வரவராவ் மற்றும் ஸ்டான்சுவாமி பாதிரியார் உள்ளிட்டவர்களுக்கு பிணை கூடக் கொடுக்காமல் அலைகழிப்பவர்கள், அர்னாபின் கைதை அவசரகால நிலையை நினைவுப்படுத்துகிறது என்று கூறுவது முரண்நகை.

அதே நேரத்தில், இந்த கைது நடவடிக்கையை அவரது ஊழ்வினையாக தான் பார்க்க முடியும் என்று அவரை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர். அவர் மீதான கைது நடவடிக்கையைப் பற்றி தங்களது கேலிச்சித்திரங்களால் பதிலளித்துள்ளனர் இந்திய கார்டூனிஸ்டுகள்.

டெகான் ஹெரால்டில் வெளிவந்த சஜித்குமாரின் கேலிச்சித்திரம்,
அர்னாப் கைதை ஒட்டி, ஊடக சுதந்திரம் குறித்துப் பேசும் மோடி அரசின் கருத்துச் சுதந்திரம் குறித்த அக்கறையை முதலைக் கண்ணீருடன் ஒப்பிட்டு சித்தரித்துள்ளது.

ஆனால் இதே அர்னாப் கோஷ்வாமியும் அவரது உயர்மட்ட ஆதரவாளர்களும் சமூக பிரச்சினைகள் குறித்து பேசும் பத்திரிக்கையாளர்களை கைது செய்யும் போது பேசாமடந்தைகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

♦ சதீஸ் ஆச்சார்யா வெளியிட்டுள்ள கேலிச்சித்திரத்தில்,
ஊடக சுதந்திரத்தை ஒடுக்கியும் நசுக்கியும் வருகின்ற மோடி அரசாங்கத்திடம் தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சுவது போலக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

♦ டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தலைமை கார்டூனிஸ்ட் சந்தீப் அத்வர்யு,
ஏற்கனவே ஊடவியலாளர்களை, மிதித்துக் கொண்டிருக்கும் இந்திய அரசாங்கம் அர்னாப் கைது நடவடிக்கையை “அவசர நிலை” என்று கூறுகிறதாக சந்தீப் கேலிச்சித்திரம் வரைந்திருக்கிறார்.

படிக்க :
♦ ஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்
♦ யோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் ? கேலிச்சித்திரம்

♦ சதீஸ் ஆச்சார்யா வரைந்துள்ள மற்றுமொரு கேலிச்சித்திரம்,
தன்னுடைய கைது நடவடிக்கையை மராட்டியப் போலீஸின் “நர வேட்டை” என்று குறிப்பிடும் அர்னாப்பின் கையில் இரத்தக்கறைப் படிந்திருப்பது போல காட்சிப்படுத்தியிருக்கிறார் சதீஸ்.

♦ அர்னாபின் கைதை ரிபப்ளிக் தொலைக்காட்சி எப்படி காட்சிப்படுத்தும் என்பதை கேலிச்சித்திரமாக தன்மயா தியாகி பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார்.

♦ அர்னாப் கைது நடவடிக்கையை கண்டித்து பா.ஜ.க அமைச்சர்களும், தலைவர்களும் கருத்துத் தெரிவித்துள்ளதை கேலி செய்து ”ஷேக்கி லைன்ஸ்” என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வரையப்பட்டுள்ள கேலிச்சித்திரம்

♦ பிரசாந்த் கனுஜியா, சித்திக் கப்பான், சுதிப் தத்தா, ஆசிஃப் சுல்தான் உள்ளிட்டவர்கள் பத்திரிக்கையாளர்கள் என்பதாலேயே சிறையிலடைத்து பிணை கொடுக்காமல் அலைக்கழிக்கும் பா.ஜ.க, அர்னாபின் கைதிற்கு முதலைக்கண்ணீர் வடிப்பது போல ஃபேஸ்புக்கில் ஜான் தயல் கேலிச்சித்திரம் வரைந்துள்ளார்.

♦ ஆனால் கார்டூனிஸ்ட் மஞ்சுல், பா.ஜ.கவின் நடவடிக்கையை கேலிச்சித்திரமாக வரையாமல் எழுத்தில் சாரமாகப் பதிவிட்டிருக்கிறார்.

“மக்கள் அர்னாபை பா.ஜ.க-வின் ஊதுகுழலாகப் பார்க்கின்றனர்.
நல்லது, ஆனால் அது தவறு. பா.ஜ.க தான் அர்னாபின் ஊதுகுழல் “ என்று குறிப்பிட்டுள்ளார்.


நன்றி : ஸ்க்ரால்
தமிழாக்கம் :ஆறுமுகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க