நவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள் அறைகூவல் !

நாடு தழுவிய அளவில் நவம்பர் 26 அன்று நடைபெறவிருக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், நம் வாழ்வாதாரத்தைக் காக்க உழைக்கும் மக்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் !

தொழிலாளி வர்க்கம் தனது உயிரைக் கொடுத்துப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் தொழிற்துறை சட்டத் திருத்தங்களின் மூலம் பறித்து தொழிலாளர்களை கூலி அடிமைகளாக மாற்றும் வகையில் திட்டமிட்டு வருகிறது மோடி அரசு.

இதுவரையில் பெயரளவிலாவது இருக்கும் தொழிற்சங்க உரிமைகளை இனி சட்டப்பூர்வமாகவே இல்லாததாக்கி கார்ப்பரேட்டுகளின் உழைப்புச் சுரண்டலை சட்டப்பூர்வமாக்கியிருக்கிறது. இக்கொரோனா சூழலைப் பயன்படுத்திக் கொண்டு உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான பல்வேறு சட்டங்களை இயற்றி அமல்படுத்திவருகிறது மோடி அரசு.

இதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் நவம்பர் 26 அன்று நடைபெறவிருக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் புஜதொமு பங்கேற்கிறது. நம் வாழ்வாதாரத்தைக் காக்க உழைக்கும் மக்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க