றுவடையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த எத்தியோப்பிய மக்கள் கடந்த நவம்பரில் ஏற்பட்ட உள்நாட்டு போர் நெருக்கடியினால் சூடானின் அகதிகள் முகாமிற்கு தப்பி ஓடுகின்றனர்.  டைக்ரே (Tigray) பகுதியை ஆளும் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும், எத்தியோப்பியாவின் பிரதமர் அபை அகமது ஆதரவு படையினருக்கும் இடையே நடக்கும் மோதலினால் வயல்வெளிகளிலிருந்தும்,  வீடுகளிலிருந்தும், மருத்துவமனைகளிலிருந்தும் மக்கள் தப்பி ஓடுகின்றனர்.

ஒரு பகுதியினர் தப்பும்போது தங்களுடன் கழுதைகள், படுக்கைகள், இரு சக்கர வண்டிகள் மற்றும் துணிமணிகள் ஆகியவற்றை எடுத்துச் செல்கின்றனர். சிலர் தப்புவதற்காக ஆற்றை கடக்கின்றனர். மேலும் ஒரு பகுதியினர் எல்லைக்கு நடந்தே சென்று ட்ரக் மூலம் அகதிகள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

படங்கள்:

சூடான்-எத்தியோப்பியா எல்லைப்பகுதியான கிழக்கு சூடானின் ஹம்தாயெட்டில் (Hamdayet) டெக்கீஸ் ஆற்றங்கரையில் (Tekeze River)  தப்பி வரும் டைக்ரேயன் அகதிகள்  இறங்குகின்றனர்.

சூடான்-எத்தியோப்பியா எல்லையில் உள்ள தற்காலிக தங்குமிடத்திற்கு (Village 8) செல்லும் பேருந்தில் அகதிகள் பயணம் செய்கிறார்கள்.

மாய் கத்ராவைச் (Mai Kadra) சேர்ந்த டிக்ரேயன் இனத்தவரான அப்ரஹலே மினாஸ்போ (Abrahaley Minasbo) மோதலில் உயிர் தப்பியிருக்கிறார். சூடான்-எத்தியோப்பியா எல்லைக்கு அருகிலுள்ள ஹம்தயாட்டில் (Hamdayat) ஒரு முகாமில் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் காட்டுகிறார். நவம்பர் 9-ம் தேதி எத்தியோப்பிய அரசாங்க ஆதரவு ஆயுதப்படையான அல் ஃபானோவின் (Al Fano) உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம்  22 வயதான அப்ரஹலே கூறினார்.

அம் ரகூபா (Umm Rakouba) அகதி முகாமிலிருக்கும் டைக்ரேயன் அகதிகளுக்கு  வரிசையில் நின்று உணவுப் பொருள்களைப் பெறுவதற்கு தன்னார்வலர் ஒருவர் உதவுகிறார்.

சூடான்-எத்தியோப்பியா எல்லையில் உள்ள டெக்கீஸ் ஆற்றங்கரைக்கு அகதிகள் வருகிறார்கள்.

சூடானில் உள்ளூர் தன்னார்வலர்கள் வழங்கும் உணவைப் பெறுவதற்கு கதரிஃப், (Qadarif) அம் ரகூபா அகதி முகாமிலுள்ள  அகதிகள் காத்திருக்கிறார்கள்.

எத்தியோப்பியாவின் ரவ்யானைச் (Rawyan) சேர்ந்த டிக்ரேயன் இனத்தின் 54 வயதான குஷே டெட்லா உள்நாட்டு மோதலில் உயிர் தப்பியிருக்கிறார். சூடான்-எத்தியோப்பியா எல்லைக்கு அருகிலுள்ள ஒரு முகாமில் தனது காயங்களைக் காட்டுகிறார்.

அம் ரகூபா அகதி முகாமில் தன்னார்வலர்களால் வழங்கப்படும் சானிட்டைசர் மற்றும் மருத்துவ முகமூடிகள் பெறுவதற்காக டைக்ரேயன் குழந்தைகளுக்கிடையில் சண்டை ஏற்படுகிறது.

சூடான்-எத்தியோப்பியா எல்லையில் உள்ள டெக்கீஸ் ஆற்றங்கரையில் அகதிகளின் காலணிகள் சிதறிக்கிடக்கின்றன.

டெக்கீஸ் ஆற்றின் கரையில் படகிலிருந்து தங்கள் பொருட்களை அகதிகள் எடுத்துச் செல்கின்றனர்.

ஊட்டச்சத்து குறைபாட்டினாலும், கடுமையன நீரிழப்பினாலும் பாதிக்கப்பட்ட தன்னுடைய குழந்தையை ஒரு டைக்ரேயன் பெண் அகதி வைத்திருக்கிறார். செவிலியர்கள் குழந்தைக்கு IV மூலம் (நரம்பு மூலம் செலுத்தும் நுட்பம்) திரவங்களை தருகிறார்கள்.

ஞாயிறன்று, டைக்ரேயன் பெண்கள் ஒரு தேவாலாயத்தில் வழிபாடு செய்கிறார்கள்.

அகதிகள், தம்முடைய தாயகத்தில் அமைதி திரும்புமா என்ற எதிர்ப்பார்ப்புடன் அம் ரகூபா அகதி முகாமில் தொலைக்காட்சி செய்தி பார்க்கின்றனர்.

அம் ரகூபா அகதி முகாமின் மருத்துவ விடுதியில் சிகிச்சைக்காக ஒரு டைக்ரேயன் பெண் காத்திருக்கிறார்.  டைக்ரேயில் எஞ்சியிருக்கும் அன்புக்குரியவர்களுடன் தொடர்பும் இல்லை. உணவு, மருந்து, தங்குமிடம், நிதி அனைத்தும் பற்றாக்குறை என சூடானிலுள்ள அகதிகளை துன்பம் தொடர்ந்து வாட்டுகிறது.

மோதலில் இருந்து தப்பிப்பிழைக்கும் டைக்ரேயன் மக்கள் அம் ரகூபா அகதி முகாமிற்கு பேருந்தில் வருகிறார்கள்.


தமிழாக்கம் : ஆறுமுகம்
நன்றி : அல்ஜசீரா

1 மறுமொழி

  1. அங்கு என்ன சிக்கல் உள்ளது? ஏன் அங்கு சண்டை நடக்கிறது? போராளிகளின் கோரிக்கை என்ன? அரசின் விருப்பம் என்ன? அங்குள்ள மக்களில் இன , மத வேறுபாடுகள் ஏதும் இருக்கிறதா? அதுதான் சிக்கலுக்கு காரணமா? விரிவான கட்டுரை எழுதினால் மகிழ்வேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க