காஷ்மீர் தடுப்பு மையம்: தீவிரமாகப் போராடும் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள்!

சிறுபான்மையின மக்கள் யாரும் விரும்பி தாய் நாட்டைவிட்டு வெளியேறுவதில்லை. ஆளும் வர்க்கங்களின் சுரண்டலாலும் அடக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்டுத் தங்களது குடும்பங்ளையும் வீடுகளையும் விட்டுவிட்டு உயிர் தப்பி வருகிறார்கள்.

டந்த இரண்டு ஆண்டுகளாக தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்த மியான்மரைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் தங்களை விடுவிக்குமாறு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மார்ச் 5 ஆம் தேதி மட்டும் 74 பெண்கள் மற்றும் 70 குழந்தைகள் உட்பட மொத்தம் 271 ரோஹிங்கியா முஸ்லீம் மக்கள், ‘சட்டவிரோதமாக’ குடியேறினார்கள் என்பதற்காக காஷ்மீரிலுள்ள கத்துவா தடுப்பு மையமான துணை சிறையில் அடைக்கப்பட்டனர்.

அகதிகளாக அடைக்கப்பட்ட ரோஹிங்கியா முஸ்லீம் மக்கள் தங்களை விடுவிக்கக்கோரி கடந்த மே மாதம் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை உயர் அதிகாரிகளிடம் எடுத்து செல்வதாக உத்தரவாதமளிக்கப்பட்டதையடுத்து அவர்களது போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், அதன் பிறகும் அகதிகளை விடுவிப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ரோஹிங்கியாக்கள் மியான்மரில் வங்காள மொழி பேசும் சிறுபான்மை முஸ்லீம்கள். தங்கள் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் உள்நாட்டு போராலும் இராணுவ அடாவடித்தனத்தாலும் உயிர் தப்பித்து, பங்களாதேஷ் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து ஜம்மு மற்றும் பிற பகுதிகளில் தஞ்சம் புகுந்தவர்கள்.


படிக்க: விரட்டும் வெள்ளம் : நாடற்ற ரோஹிங்கிய அகதிகளின் நெடுந்துயர் !


2008 ஆம் ஆண்டு முதல் 2016 வரை மியான்மர், வங்கதேசத்தில் இருந்து 13,700 பேர் ஜம்மு & காஷ்மீர் மற்றும் இதர இந்திய பகுதிகளில் தஞ்சம் புகுந்ததாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த பின் மக்கள் தொகை விகிதம் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டும் சங்கிகள், “இவர்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல்” என்று பழிக்கூறி இவர்களை உடனே நாடு கடத்த வலியுறுத்தி வருகின்றனர்.

சிறுபான்மையின மக்கள் யாரும் விரும்பி தாய் நாட்டைவிட்டு வெளியேறுவதில்லை. ஆளும் வர்க்கங்களின் சுரண்டலாலும் அடக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்டுத் தங்களது குடும்பங்ளையும் வீடுகளையும் விட்டுவிட்டு உயிர் தப்பி வருகிறார்கள். அகதிகளாக தஞ்சம் புகுந்த நாடுகளிலும் அவர்கள் மோசமாக நடத்தப்படுவது, ‘சட்டவிரோதமாக புகுந்துவிட்டார்கள்’ என்று கூறி அவர்களை முகாம்களில் அடைப்பது என அவர்கள் மேலும் வதைக்கப்படுகிறார்கள். இந்த கொடுமையால் போர், உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழ்நிலையிலும் தாய் நாட்டிற்காவது சென்றுவிட வேண்டும் என்ற அபாயகரமான நிலைக்கு அகதிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதுவே இந்தியாவில் ரோஹிங்கிய முஸ்லீம்களின் நிலையாக உள்ளது.


கௌரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க