ந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டில் மத்திய அரசு நடத்திய இணைய நிறுத்தத்தின் காரணமாக சுமார் 2.8பில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை இந்தியா இழந்துள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டில் மக்களுக்கு இணைய வசதி கிடைப்பதில் தடையேற்படுத்தப்படுவதை மனித உரிமை மீறல் என்று கூறி கண்டனம் தெரிவித்தது. ஆனாலும் அதன் பின்னரும் கூட உலகளாவிய அரசுகள் தங்களது நாடுகளில் இணையத்தை தடை செய்துள்ளன.

இங்கிலாந்தைச் சேர்ந்த டாப்10வி.பி.என் எனும் இணைய அந்தரங்க மற்றும் பாதுகாப்பு ஆய்வுக்குழுவினர், “2020-ம் ஆண்டின் இணைய நிறுத்தத்திற்கு கொடுக்கப்பட்ட உலகளாவிய விலை” என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டனர். இந்த ஆய்வில்தான் கடந்த ஆண்டில் இந்தியா 21 தெற்காசிய நாடுகளில் இணைய நிறுத்தம் செய்வதில் முதலிடம் பிடித்திருப்பது தெரியவந்துள்ளது.

படிக்க :
♦ ஊரடங்கில் மக்களின் துன்பங்களை எழுதிய பத்திரிகையாளர்கள் மீது அரசுகள் வழக்கு !
♦ காஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் !

இணைய நிறுத்தத்தால் 2020-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழப்பானது, 2019-ம் ஆண்டில் ஏற்பட்ட இழப்பை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

பிற நாடுகளை விட மிக அதிகமாக, சுமார் 8,927 மணிநேரம் இணையம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பதாக, ப்ளூம்பெர்க் பத்திரிகை இந்த அறிக்கையைச் சுட்டிக் காட்டி தெரிவிக்கிறது. இணைய நிறுத்தத்தினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்த கணக்கீட்டை, உலக வங்கி, சர்வதேச தொலைதொடர்பு சங்கம் மற்றும் டெல்லியைச் சேர்ந்த மென்பொருள் சுதந்திர சட்ட மையம் ஆகிய அமைப்புகளில் இருந்து பெற்ற குறியீடுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காஷ்மீரில் போடப்பட்ட இணையத் தடையை – 2020-ம் ஆண்டிலும் தொடர்ந்துள்ளது இந்திய அரசு. 2020-ம் ஆண்டில் மட்டும் கஷ்மீரில் சுமார் 20 இலட்சம் மக்கள் இணையத்தடையால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ”ஃப்ரீடம் ஹவுஸ்” எனும் ஆய்வுக் குழு. இது தவிர நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெறும் போராட்டங்களை ஒட்டி, உள்ளூரில் இணையத் தடைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த ஜனவரி 2012 முதல் செப்டம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் இந்தியாதான் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட இணையத்தடைகளை அதிகமாக விதித்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் மட்டும் 437 முறை இந்திய அரசாங்கம் இணையத் தடை விதித்திருக்கிறது. 2019-ம் ஆண்டு அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட இணையத்தடையானது சுமார் 4000 மணி நேரங்களுகும் மேலாக நீடித்தது. இது சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அறிக்கைகளின் படி, 2018-ம் ஆண்டில் உலகளாவிய அளவில் பதிவுசெய்யப்பட்ட இணைய நிறுத்தங்களில் 67% இந்தியாவில் போடப்பட்டதுதான்.

2020-ம் ஆண்டுக்கான, உலகளாவிய இணைய சுதந்திரத்தின் அடிப்படையில் பார்த்தால், 95 புள்ளிகளைப் பெற்று ஐஸ்லாந்து நாடு முதலிடத்துல் நிற்கிறது. இதில் சீனா 10 புள்ளிகளைப் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டில், இந்தக் கணகீட்டின் படி இந்தியா 55 புள்ளிகளைப் பெற்று, பகுதியளவில் சுதந்திரமான ஜனநாயகம் கொண்ட நாடாக வரையறுக்கப்பட்டிருந்தது.

டாப்10வி.பி.என் ஆய்வின் படி காஷ்மீரில் போடப்பட்ட இணையத் தடையுத்தரவு, மருந்து, வியாபாரம், பள்ளி உள்ளிட்ட பல துறைகளைக் கடுமையாக பாதித்திருக்கிறது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக பெல்லாரஸ், மியான்மர், ஏமன் ஆகிய நாடுகள் இணைய நிறுத்தத்தின் காரணமாக கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. உலகளவில் ஏற்பட்ட பெருமளவிலான இணைய இடர்பாடுகள், 26.8 கோடி மக்களை பாதித்தன. கடந்த ஆண்டை

இந்தியாவிற்கு அடுத்தபடியாக பெல்லாரஸ், மியான்மர், ஏமன் ஆகிய நாடுகள் இணைய நிறுத்தத்தின் காரணமாக கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன.

படிக்க :
♦ முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை || உலகப் பட்டினிக் குறியீடு

உலகளவில் ஏற்பட்ட பெருமளவிலான இணைய இடர்பாடுகள் 26.8 கோடி மக்களைப் பாதித்தன. கடந்த 2019-ம் ஆண்டை விட 49% அதிகமான அளவில் இணைய நிறுத்தம் 2020-ல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சுமார் 42% இணைய நிறுத்தங்கள், கூடுதலான ”கூடுவதற்கான உரிமை, தேர்தல் தலையீடுகள், பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவது உள்ளிட்ட மனித உரிமை மீறல்களோடு இணைந்ததாக இருந்திருக்கிறது என்கிறது இந்த அறிக்கை.

உழைப்பாளர்களின் மூளை உழைப்பால் உருவான அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் தனது சாதனையாக பீற்றிக் கொள்ளும் முதலாளித்துவம், ஒடுக்கப்படும் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு அந்த அறிவியல் பயன்படுத்தப்படாத வண்ணம் முடக்கும் வேலையையும் செய்கிறது.

முதலாளித்துவத்தின் பிடியில் இருந்து அறிவியலை விடுவிப்பதுதான் இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக இருக்கிறது.


கர்ணன்
நன்றி : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க