privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாகாஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் !

காஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் !

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதிலிருந்து இணையம் உள்ளிட்ட தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இணைய தொடர்புக்கான தடை தொடர்ந்து 100 நாட்களாக நீடிக்கிறது.

-

மோடி அரசாங்கத்தால் காஷ்மீரில் இணைய தொடர்பு தடை செய்யப்பட்டு 100 நாட்களான நிலையில், அதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோடை கால தலைநகரமான ஸ்ரீநகரின் பத்திரிகையாளர் மன்றத்தில் கூடிய பல ஊடகங்களைச் சேர்ந்த உள்ளூர் வெளியூர் பத்திரிகையாளர்கள், ‘காஷ்மீர் பத்திரிகையாளர்களை அவமானப்படுத்துவதை நிறுத்துங்கள்’, ‘நூறு நாட்கள், இணையம் இல்லை’ என்பது போன்ற பதாகைகளைத் தாங்கி போராட்டம் நடத்தினர். தடையை உடனடியாக நீக்குமாறு உள்ளிருப்புப் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் பகுதியாக, மடிக் கணினிகளை கைகளில் ஏந்திய அவர்கள்,வெற்று திரைகளை காட்டியபடி ‘இங்கிருக்கும் சூழல் குறித்து வெளி உலகுக்கு செய்தி சொல்ல முயல்கிறோம்’ என்பதுபோல, 100 நாட்களாக காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் எப்படி பணியாற்றுகிறார்கள் என்பதை உணர்த்தினர்.

“இணைய தொடர்பு தடை, காஷ்மீரில் பத்திரிகை துறையை மூழ்கடித்துவிட்டது” என்கிறார் பத்திரிகையாளர் பர்வேஸ் புகாரி. “இணைய தொடர்பு கிடைத்தால் மட்டுமே, காஷ்மீரில் பத்திரிகைத் துறை மீளும் என்பதற்காக தடையை நீக்கக் கோருகிறோம்”என்கிறார் அவர்.

“எங்களுடைய செய்தி மூலங்களை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை; சுதந்திரமாகவும் செய்தி சேகரிக்க முடியவில்லை. இணையத்துக்கு நாங்கள் கட்டணம் செலுத்துகிறோம் என்பதால் தடை நீக்கப்பட வேண்டும் எனக் கோருகிறோம். நாங்கள் ஒன்றும் அரசாங்கத்திடம் இலவசங்களைக் கேட்கவில்லை.” என்கிறார் புகாரி.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதிலிருந்து இணையம் உள்ளிட்ட தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. மொபைல் இணைப்புகள் மட்டும் மீண்டும் செயலுக்கு வந்த நிலையில், இணைய தொடர்புக்கான தடை தொடர்ந்து 100 நாட்களாக நீடிக்கிறது.

படிக்க:
காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !
♦ கம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் ? கேள்வி – பதில்

பத்திரிகையாளர்களுக்கென்று உள்ளூர் நிர்வாகம் ஊடக மையங்களை திறந்துள்ளது. இங்குள்ள ஒரே ஒரு இணைப்பில் மட்டும் அனைத்து பத்திரிகையாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர். வரிசைப்படி காத்திருந்துதான் பத்திரிகையாளர்கள் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

“இந்த ஊடக மையம் தீர்வல்ல” என்கிறார் பத்திரிகையாளர் நசீர் ஏ. கனானி. “ஒவ்வொரு முறையும் நுழைவாயிலில் எங்களைப் பற்றிய விவரங்களைக் கொடுத்துவிட்டு இணையத்தை பயன்படுத்துவது எங்களை அவமானப்படுத்துகிறது” என்கிறார் அவர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

காஷ்மீரில் பனிபொழிவு தொடங்கி ஒரு வாரமான நிலையில், இணைய தொடர்பு மையம் இரண்டு நாட்கள் மூடப்பட்டிருந்தது. அப்போதிலிருந்து இணைய இணைப்பு சரியாக கிடைப்பதில்லை. இதனால், பத்திரிகையாளர்கள் தங்களுடைய செய்திகளை குறித்த நேரத்திற்கு அனுப்ப முடிவதில்லை.

“போர் நடக்கும் இடங்களில்கூட பத்திரிகையாளர் தடையில்லா இணைய இணைப்பை பெறுகிறார்கள். அரசாங்கத்தால் நடத்தப்படும் ஊடக மையத்தில் இணைய இணைப்பு கிடைப்பது எங்களை அவமானப்படுத்துகிறது” என்கிறார் பத்திரிகையாளர் மஜீத் மக்பூல். “எளிமையாக கூகுளில் தேடவேண்டும் என்றால்கூட எதற்காக தேடுகிறோம் என்ற விவரத்தை அளிக்க வேண்டும். குறைந்த நேரம் இணையத்தை பயன்படுத்த, ஒவ்வொரு நாளும் நாங்கள் பயணிக்க வேண்டியுள்ளது” என்கிறார் அவர்.

கடந்த வாரம் அரசாங்க செய்தியாளர் ஊடகங்களுடன் பேசும்போது, இணைய இணைப்பு அளிக்கப்பட்டால் பாகிஸ்தான் பள்ளத்தாக்கில் பிரச்சினைகள் உருவாக்கும் என பேசினார். ஆனால், எப்போது இணைய இணைப்பு கிடைக்கும் என இதுவரை அரசாங்கத்திடமிருந்து தகவல் இல்லை.

“அரசாங்கம் பத்திரிகையாளர்களையும்கூட சந்தேகிக்கிறதா?” எனக் கேட்கிறார் எழுத்தாளர் ஹிலால் மிர்.


கட்டுரை, படங்கள்: முதாசிர் அகமது
அனிதா
நன்றிதி வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க